அடுக்குமாடி குடியிருப்பு தீவிடத்தில் 44 பேர் உயிர் இழப்பு

ஹாங்காங்கின் நியூ டெரிட்டரீஸ் பகுதியில் உள்ள டாய் போ மாவட்டத்தில் அமைந்திருக்கும் 31 அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த கோர தீ விபத்தில் இதுவரை 44 பேர் உயிரிழந்ந்துள்ளர். சுமார் 300 பேரை காணவில்லை என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இது, கடந்த 30 ஆண்டுகளில் ஹாங்காங் நகரம் கண்ட மிக மோசமான தீ விபத்தாக கருதப்படுகிறது.

இம்ரான் கான் உயிரிழப்பா? – சகோதரிகள் குற்றச்சாட்டு!*

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சிறையில் உயிரிழந்துவிட்டதாக வதந்திகள் பரவும் நிலையில், அவரை சந்திக்க கடந்த ஒரு மாதமாக அனுமதிக்கப்படவில்லை என்று அவரது சகோதரிகள் குற்றச்சாட்டு. அனுமதி கோரி அமைதியான முறையில் போராடியபோது, போலீசாரால் மிருகத்தனமான தாக்குதலுக்கு தாங்கள் உள்ளானதாகவும் சகோதரிகள் பேட்டி

டெல்லி குண்டுவெடிப்பு : மற்றொரு டாக்டருக்கு வலை வீச்சு

டெல்​லி​ குண்டு வெடிப்பு சம்​பவத்​தில், புல்​வா​மாவைச் சேர்ந்த முஜம்​மில், லக்​னோவைச் சேர்ந்த ஷாகின், காஷ்மீரின் குல்​காமை சேர்ந்த ஆதில், புல்​வா​மாவைச் சேர்ந்த உமர் நபி, ஹைத​ரா​பாதைச் சேர்ந்த அகமது மொஹி​யுதீன், நகர் மகா​ராஜா ஹரிசிங் மருத்​து​வ​மனை டாக்​டர் தஜமுல் ஆகிய 6 மருத்​து​வர்​கள் சம்​பந்​தப்​பட்​டுள்​ளனர். இதில் சிலர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். இதுகுறித்து என்ஐஏ விசா​ரணை நடத்தி வரு​கிறது. இந்​நிலை​யில் இந்த சம்​பவத்​தில் ஹரி​யா​னா​வில் உள்ள அல் பலா பல்​கலைக்​கழகத்​தைச் சேர்ந்த மருத்​து​வர் நிஸார் உல் ஹசன் தொடர்​புள்​ளது […]

ஏமனுக்கு பதிலடி கொடுத்த இஸ்ரேல்

இஸ்ரேல் செங்கடல் ரிசார்ட் நகரமான இலாட்டில் உள்ள உணவகம் மீது ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் 20 பேர் காயம் அடைந்தனர் பதிலடி கொடுக்கும் விதமாக ஏமனின் தலைநகரான சனாவில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது

காசா நகரில் வேட்டையாடும் இஸ்ரேல் ராணுவம்

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேல் முழு மூச்சுடன் இறங்கியுள்ளது இதுவரை 65 ஆயிரம் பேர் அங்கு பலியாகி உள்ளனர் தற்போது ஏவுகணை மற்றும் ட்ரோன் மூலம் தாக்கல் நடத்தி வருகிறார்கள் இதை விட தரைப்படையும் உள்ளே இறக்கப்பட்டுள்ளது.இஸ்ரேலைச் சேர்ந்த 49 பணய கைதிகளை விடுவிக்க இந்த தீவிர நடவடிக்கையை இஸ்ரேல் ராணுவம் எடுத்துள்ளது இதனால் உலகம் முழுவதும் காசா பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக குரல்கள் எழுந்துள்ளன

ஐபோன் 17 இந்தியாவில் விற்பனை தொடக்கம்

ஆப்பிள் நிறுவனம் புதிதாக ஐபோன் 17 ரக ஐபோன்களை அறிமுகப்படுத்தியுள்ளதுஇதன் விற்பனை இன்று இந்தியாவில் தொடங்கியது புதிய போன் வாங்குவதற்காக மும்பையில் ஐபோன் கடைகளில் ஏராளமான பேர் வரிசையில் நின்று வாங்கினார்கள்.ஆப்பிள் நிறுவனத்தின் பெரும்பாலான ஐபோன்கள் இந்தியாவில் தான் இப்போது தயாராகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

HIB விசாவை குறைத்த ஐ.டி. நிறுவனங்கள்

இந்தியாவின் மிகப் பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்கள், அமெரிக்காவில் பணியாளர்களை அனுப்ப பயன்படுத்தும் H-1B விசாவிற்கான தங்கள் சார்ந்திருப்பைக் குறைத்துக் கொண்டுள்ளன. கடந்த ஐந்து ஆண்டுகளில், இந்தியாவின் ஆறு முன்னணி ஐ.டி நிறுவனங்களான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), இன்ஃபோசிஸ், ஹெச்.சி.எல் டெக்னாலஜிஸ், விப்ரோ, டெக் மஹிந்திரா மற்றும் எல்.டி.ஐ. மைண்ட் ட்ரீ ஆகியவை, H-1B விசா விண்ணப்பங்களை சராசரியாக 46% குறைத்துள்ளன. இது, உலகளாவிய தொழில்நுட்ப உலகில் ஒரு பெரிய மாற்றத்தை உணர்த்துகிறது. இந்த […]

ஆப்கானிஸ்தானில் இணைய சேவைக்கு தாலிபான் தடை

ஆப்​கானிஸ்​தானில் மேலும் 5 மாகாணங்​களில் ஃபைபர் ஆப்​டிக் இணைய சேவைக்கு தடை விதிக்​கப்​பட்​டுள்​ளது. வடக்கு ஆப்​கானிஸ்​தான் பால்க் மாகாணத்​தில் கடந்த செவ்​வாய்க்​கிழமை ஃபைபர் ஆப்​டிக் இணைய சேவைக்கு தடை விதிக்​கப்​பட்​டது. ஒழுக்கக்கேட்டை தடுக்​கும் நடவடிக்​கை​யாக இத்​தடை விதிக்​கப்​பட்​டுள்​ள​தாக மாகாண அரசு தெரி​வித்​தது.

இந்தியா- அமெரிக்கா வர்த்தக பேச்சு தொடக்கம்.

இந்தியா – அமெரிக்கா இடையே இருதரப்பு வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை டெல்லியில் நேற்று மீண்டும் தொடங்கியது. அமெரிக்க வர்த்தகத் துறை பிரதிநிதி பிரெண்டன் லிஞ்ச் தலைமையிலான குழுவினருடன் மத்திய வர்த்தகத் துறை செயலர் தலைமையிலான குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இது ஆக்கப்பூர்வமாக இருந்ததாக மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது. விரைவில் நடைபெற உள்ள அடுத்த சுற்று பேச்சுவார்த்தையில் வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் என அமெரிக்க தரப்பு தெரிவித்துள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் அறிமுகம்

ஆப்பிள் நிறுவனம் தற்போது சந்தையில் ஐபோன் 17, ஐபோன் 17 ஏர், ஐபோன் 17 புரோ, ஐபோன் 17 புரோ மேக்ஸ் போன்கள் அறிமுகமாகி உள்ளன. இந்த முறை புது வரவாக ஐபோன் 17 ஏர் வெளிவந்துள்ளது. இதோடு ஆப்பிள் ஏர்பாட்ஸ் புரோ 3, ஆப்பிள் வாட்ச் எஸ்இ, ஆப்பிள் வாட்ச் 11 சீரிஸ், ஆப்பிள் வாட்ச் 3 அல்ட்ரா உள்ளிட்ட கேட்ஜெட்களும் அறிமுகமாகி உள்ளன. வரும் 19-ம் தேதி சந்தையில் இவை விற்பனைக்கும் கிடைக்கும் என […]