கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
ஹோர்முஸ் நீரிணையை முற்றுகையிடப் போவதாக அமெரிக்கா அறிவித்திருக்கும் நிலையில், கச்சா எண்ணெய் விலை திங்கள்கிழமை காலை 7% அதிகரித்துள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ராணுவத்தினர் இணைந்து பிப்.28 ஆம் தேதி ஈரான் மீது போர் தொடுத்ததன் விளைவாக, உலகின் கடல்வழி வர்த்தகத்தில் மிகவும் முக்கியமான நீர்வழிப் பாதையான ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியது. இதன் எதிரொலியாக இந்தியா, சீனா உள்ளிட்ட அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகள் உடனடியாகவே பாதிப்பை எதிர்கொண்டன. ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்காவுக்கு […]
ஹோர்முஸ் நீரிணையை முற்றுகையிடுவோம்: ட்ரம்ப்.
ஹோர்முஸ் நீரிணை முற்றுகையிடப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இணையத்தில் பதிவு; ஈரான் மீதான ராணுவ மற்றும் பொருளாதார அழுத்தத்தை அதிகரிக்கும் வகையில் நடவடிக்கை ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் அனைத்து கப்பல்கள் முற்றுகையிடப்படும்; ஹோர்முஸ் நீரிணை முற்றுகையால் வணிக ரீதியான கப்பல்கள் கடும் விளைவை சந்திக்க நேரிடும். – அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
போர் நிறுத்தம் எங்களுக்கு வெற்றி – ஈரான் அறிவிப்பு
போர் நிறுத்தத்தை ஈரானுக்கு கிடைத்த வரலாற்று வெற்றி என ஈரான் அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “அமெரிக்காவுக்கு எதிரான போரில் ஈரான் வரலாற்று வெற்றியைப் பெற்றிருக்கிறது. குற்றம்புரிந்த அமெரிக்காவை தனது 10 அம்சத்திட்டங்களுக்கு அடிபணியவும் வைத்திருக்கிறது. இன்னும் போர் முடியவில்லை. வரிகளை நீக்குதல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை அமெரிக்கா ஏற்றுக்கொண்டால் மட்டுமே போர் முடிவுக்கு வரும்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது
அமெரிக்கா ஈரான் 2 வாரம் போர் நிறுத்தம்
ஹோர்முஸ் நீரிணையைத் திறக்காத ஈரான் மீது கடும் கோபத்துடன் பதிவிட்டிருந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், ஒரு நாகரிகமே அழியப்போகிறது என்றும் மிரட்டல் விடுத்திருந்தார். இந்த நிலையில், பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் மற்றும் ராணுவத் தலைமைத் தளபதி அசிம் முனீர் ஆகியோருடனான பேச்சு அடிப்படையில், ஈரான் மீதான தாக்குதலுக்கு அனுப்பப்படவிருந்த படைகளை நிறுத்த வேண்டும் என்றும், இஸ்லாமிய குடியரசான ஈரான், ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஒப்புக்கொண்டதால், ஈரான் மீதான தாக்குதலை இரண்டு வாரங்களுக்கு நிறுத்திவைக்க நான் ஒப்புக்கொள்கிறேன். […]
இஸ்ரேலின் ‘கழுகுப் பார்வை’
அமெரிக்காவின் இந்த 2 வார கால அவகாசத்தை ஏற்றுக்கொண்டு இஸ்ரேல் தனது வான்வழித் தாக்குதல்களைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. அதே நேரத்தில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளார். ”ஈரான் இந்த 2 வார அவகாசத்தைத் தவறாகப் பயன்படுத்தினால் அல்லது அணு ஆயுதச் சோதனையில் ஈடுபட்டால், அமெரிக்காவின் அனுமதி இல்லாமலேயே இஸ்ரேல் தனது தாக்குதலைத் தொடரும்” என்று கூறியுள்ளார்.
ஒரே இரவில் ஈரானை அழித்து விட முடியும்- டிரம்ப்.
ஒரே இரவில் ஈரானை அழித்து விட முடியும்; அந்த இரவு நாளைய இரவாக கூட இருக்கலாம். ஈரானுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடுமையான எச்சரிக்கை.
ஈரானுக்குள் புகுந்து தனது விமானியை மீட்ட அமெரிக்கா.
அமெரிக்கப் போர் விமானம் ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்டு அதன் விமானி தங்கள் வசம் உள்ளதாக ஈரான் நேற்று தெரிவித்தது. இந்த நிலையில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க போர் விமான விமானியை, ஈரானுக்குள்ளேயே நுழைந்து அமெரிக்க சிறப்பு படை பத்திரமாக மீட்டுள்ளதாக டிரம்ப் அறிவிப்பு. விமானி காயங்களுடன் உள்ளதாகவும், உடல் நலத்துடன் இருப்பதாக டிரம்ப் பதிவு செய்துள்ளார்.
டிரம்ப்பின் கெடு : ஈரான் புதிய மிரட்டல்!!
ஈரான் மிரட்டல்: எனினும் டிரம்ப்பின் எச்சரிக்கைக்கு பதிலளித்துள்ள ஈரான், மிகப்பெரிய வியப்பு அந்நாட்டுக்கு காத்திருப்பதாக புதிய மிரட்டல் விடுத்துள்ளது. தங்கள் நாட்டின் உள்கட்டமைப்பு மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அமெரிக்கா, இஸ்ரேலுக்கு சொந்தமான உள்கட்டமைப்புகள் மீது பதில் தாக்குதல் நடத்தப்படும் என்றும், யேமன் அருகேவுள்ள இன்னொரு நீரிணையான பாப்-எல்-மாந்தேப்பில் செல்லும் கச்சா எண்ணெய்க் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்றும் ஈரான் தெரிவித்துள்ளது.
4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி!
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி இணைந்து போட்டியிடும் மதிமுகவுக்கு 4 தொகுதிகளை திமுக ஒதுக்கியது. அதில், ஒரு தொகுதியில் மதிமுக தனிச் சின்னத்தில் போட்டியிடும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. மதுரை தெற்கு, மொடக்குறிச்சி, கடையநல்லூர், சீர்காழி ஆகிய தொகுதிகள் மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், சீர்காழியில் மட்டும் தனிச் சின்னத்தில் போட்டியிடுவோம் என வைகோ தெரிவித்திருந்தார்.
ஹார்முஸ் நீரிணையை திறக்க அமெரிக்கா உதவாது என அதிபர் ட்ரம்ப் அதிரடி!
ஹார்முஸ் நீரிணை முழுமையாகத் திறக்கப்படாவிட்டாலும், ஈரானுடனான போரை விரைவாக முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா திட்டம் என தகவல். ஈரான் போரில் உதவாத பிரிட்டன் போன்ற நாடுகளுக்கு, ஹார்முஸ் வழியாக எரிபொருள் கிடைக்கவில்லை என்றால் அதற்கு அமெரிக்கா பொறுப்பல்ல. எரிபொருள் வேண்டுமென்றால் அமெரிக்காவிடம் காசு கொடுத்து வாங்குங்கள். இல்லையெனில் கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு நீரிணைக்குச் சென்று சண்டையிட்டு எடுத்துக்கொள்ளுங்கள்; இனி அமெரிக்கா உங்களுக்கு உதவாது – ட்ரம்ப் கைவிரிப்பு.