புதிய கமிஷனர் பதவியேற்பு

புதிதாக பொறுப்பேற்ற மாநகராட்சி கமிஷனர் பாலசந்தருக்கு மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி துணை மேயர் கோ. காமராஜ் மற்றும் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
தாம்பரம் மாநகராட்சி புதிய கமிஷனர் பதவி ஏற்பு

தாம்பரம் மாநகராட்சிக்கு புதிய கமிஷனர் பதவியேற்பு மேயர் துணை மேயர் வாழ்த்து தாம்பரம் மாநகராட்சி கமிஷனராக பணிபுரிந்து அழகுமீனா பதவி உயர்வு பெற்று கன்னியாகுமரி மாவட்ட கலெக்டராக பணி மாற்றம் செய்யப்பட்டார். சேலம் மாநகராட்சி கமிஷனர் ஆக பதவி வகித்த பாலசந்தர் தாம்பரம் மாநகராட்சி கமிஷனராக பணி மாற்றம் செய்யப்பட்டார். இன்று தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்தில் புதிய கமிஷனர் பாலச்சந்தர் பொறுப்பேற்றுக்கொண்டார். புதிதாக பொறுப்பேற்ற மாநகராட்சி கமிஷனர் பாலசந்தருக்கு மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி துணை மேயர் கோ. […]
தாம்பரம் மாநகராட்சியின் புதிய ஆணையராக சீ.பாலச்சந்தர் பொறுப்பேற்றுக் கொண்டார்கள்
முடிச்சூர் ஹார்டுவேர் கடையில் தீ விபத்து

தாம்பரம் அடுத்த முடிச்சூர் பிரதான சாலையில் உள்ள ஏ.ஆர்.கோகுல் ஹார்டுவேர் கடையின் முதல் தளத்தில் தீவிபத்து. தவல் அறிந்த தாம்பரம் தீயணைப்பு நிலையத்தில் இருந்து வந்த வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உரிமையாளர் ராமசந்திரனிடம் பீர்க்கன்கரணை போலீசார் விசாரணை. பல லட்சம் மதிப்புள்ள் பெயிண்ட், கெமிக்கல், பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து சாம்பலானது. மின்சார கசிவே தீவிபத்திற்கு காரணம் என தெரிய வந்துள்ளது.
தாம்பரம் புதிய போலீஸ் கமிஷனர் பதவியேற்பு

தாம்பரம் மாநகராட்சி போலீஸ் கமிஷனர் ஆக அமல்ராஜ் இருந்து வந்தார் அவர் திடீரென மாற்றப்பட்டார் அவருக்கு பதில் அபின் தினேஷ் மோதக் நியமிக்கப்பட்டார் அவர் இன்று முறைப்படி பதவி ஏற்றார் .அவருக்கு போலீஸ் அதிகாரிகள் பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர்.ஏற்கனவே ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பிறகு தமிழ்நாடு முழுவதும் ரவுடிகள் பட்டியல் கணக்கு எடுக்கப்பட்டு வருகிறது. அதைப் போல தாம்பரம் மாநகர பகுதிகளிலும் ரௌடிகளை கட்டுப்படுத்த புதிய போலீஸ் கமிஷனர் ஆலோசனைகளை மேற்கொண்டார்.
மாடம்பாக்கத்தில் மூதாட்டியிடம் நகை பறிப்பு பைக் கொள்ளையர் அட்டகாசம்

தாம்பரம் அருகே நடந்து சாலையில் சென்ற மூதாட்டியிடம் 5 சவரன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். செயின் பறிக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. சென்னை தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம், காயத்ரி கார்டன் பகுதியில் வசித்து வருபவர் 71 வயதான மூதாட்டி விஜயலட்சுமி. மதியம் வீட்டின் அருகில் உள்ள கடைக்கு சென்று விட்டு, மீண்டும் வீடு திரும்பிய போது, சுதர்சன் நகர் முதல் குறுக்கு தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த மூதாட்டியின் […]
தாம்பரத்தில் பஸ் மோதி பூ விற்கும் மூதாட்டி பலி

தாம்பரம் சானடோரியம் அருகே ஜி.எஸ்.டி சாலையை கடக்க முயன்ற பூ வியாபாரம் செய்து வந்த மூதாட்டி மீது அரசு பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சென்னை குரோம்பேட்டை அடுத்த கக்கன் சாவடி பகுதியை சேர்ந்தவர் இசக்கியம்மாள் (80) அதே பகுதியில் பூ வியாபரம் செய்து வந்தார். இன்று காலை வழக்கம் போல் தாம்பரம் மார்கெட் பகுதியில் பூ வாங்குவதற்காக காசநோய் மருத்துவமனை அருகே சாலையை கடந்த போது அவ்வழியாக தாம்பரம் பணிமனையில் இருந்து வந்த தாம்பரம்-செங்கல்பட்டு […]
தாம்பரம் சானடோரியம் அருகே ஜி.எஸ்.டி சாலையை கடக்க முயன்ற பூ வியாபாரம் செய்து வந்த மூதாட்டி மீது அரசு பேருந்து மோதியதில் சம்பவ இடத்தியே உயிரிழந்தார்

சென்னை குரோம்பேட்டை அடுத்த கக்கன் சாவடி பகுதியை சேர்ந்தவர் இசக்கியம்மாள் (80) அதே பகுதியில் பூ வியாபரம் செய்து வந்தார். இன்று காலை வழக்கம் போல் தாம்பரம் மார்கெட் பகுதியில் பூ வாங்குவதற்காக காசநோய் மருத்துவமனை அருகே சாலை கடந்த போது அவ்வழியாக தாம்பரம் பணிமனையில் இருந்து வந்த தாம்பரம்-செங்கல்பட்டு செல்லும் தடம் எண் 500 அரசு பேருந்து இசக்கியம்மாள் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க்கு வந்த குரோம்பேட்டை போக்குவரத்து […]
தாம்பரம் மாநகராட்சியில் அதிமுக வார்டுகள் புறக்கணிப்பு புகார்

தாம்பரம் மாநகராட்சியில் அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் வார்டுகளில் திட்டமிட்டே பணிகள் புறக்கணிப்பதாக செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் குற்றச்சாட்டு. தாம்பரம் மாநகராட்சி நிர்வாக சீர்கேட்டை கண்டித்து கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களின் ஒப்புதலோடு தாம்பரத்தில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் மாவட்ட கழக செயலாளர் பேட்டி தாம்பரம் மாநகராட்சியில் அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட பல்வேறு நலத்திட்ட பணிகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் விடுபட்ட பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தியும் இன்று செங்கல்பட்டு […]
தாம்பரத்தில் நடுரோட்டில் நின்ற அரசு பஸ், கண்டக்டர் உட்பட 3பேர் தள்ளிய வீடியோ வைரல்

தள்ளு…தள்ளு….தள்ளு….. ஸ்டார்ட் ஆகாமல் மக்கார் செய்த பேருந்து 50 பயணியை வைத்து தனி ஆளாக பேருந்தை தள்ளிய நடத்துனர் உதவிக்கு வந்த இருவர் ஒரே தள்ளில் இயக்கபட்ட பேருந்து சமூக வளைதளங்களில் வைரலாகும் காட்சி! மேற்கு தாம்பரம் பேருந்து நிலையத்தில் மேற்கு தாம்பரம், அகரம்தென் செல்லகூடிய 31A வழிதடம் எண் கொண்ட பேருந்து புறபட தயாராக இருந்தது. அப்போது அந்த பெருந்தை இயக்க முற்பட்ட ஓட்டுநர் வாகனம் ஸ்டார்ட் ஆகாமல் மக்கார் செய்தது. இதனை அறிந்த நடத்துனர் […]