சில்லறை பிரச்சனை : பயணியை அடிக்க பாய்ந்த கண்டக்டர்

தாம்பரம் அருகே மாநகரப் பேருந்தில் டிக்கெட் எடுக்க 200 ரூபாய் கொடுத்த போது சில்லறை இல்லை எனக்கூறி இளைஞரை ஆபாசமாக பேசிய மாநகர போக்குவரத்துகழக நடத்துனர் இணையத்தில் வைரலாகும் வீடியோ நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஊரப்பாக்கத்தில் தங்கி சென்னையில் உள்ள மென் பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இன்று காலை நெல்லையில் இருந்து ரயிலில் தாம்பரம் வந்த அந்த இளைஞர் தான் தங்கி இருக்கும் அறைக்கு செல்வதற்காக தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு […]
தமிழக ஒலிம்பிக் வீரர்களை உற்சாகப்படுத்த தாம்பரத்தில் மினி மாரத்தான்

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ள தமிழ்நாட்டை சேர்ந்த வீரர் வீராங்கனைகளை உற்சாகப்படுத்தும் நோக்கில், ஸ்போர்ட்ஸ் கிளப் ஆஃப் தாம்பரம் சார்பில் சென்னை மேற்கு தாம்பரத்தில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. 2024 ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த பிரவீன் சித்ரவேல், ஜெஸ்வின் ஆல்ட்ரின், சந்தோஷ், ராஜேஸ் ரமேஷ், வித்யா ராமராஜ், சுபா வெங்கடேஷ், நேத்ரா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இதேபோல் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்வதற்காக, மாரியப்பன், துளசிமதி, […]
தாம்பரத்தில் விலை உயர்ந்த பைக் ஒட்டி பதற்றம் ஏற்படுத்தியவருக்கு 12000 அபராதம்

தாம்பரத்தில் விலையுர்ந்த இருசக்கர வாகனத்தில் சைலன்சரில் அதிக ஒலி எழுப்பியபடி வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக செயல்பட்ட வாலிபருக்கு 12,000 அபராதம் விதித்து போக்குவரத்து போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். சென்னை மேற்கு தாம்பரம் சண்முகம் ரோடில் இருந்து தர்காஷ் சாலை ,சி.டி.ஒ காலனி வரை வாலிபர் ஒருவர் விலையுயர்ந்த (Harley Davidson) பைக்கில் சைலன்சரில் அதிக ஒலி எழுப்பிய படி அதிவேகமாக விபத்து ஏற்படும் வகையில் ஓட்டி சென்றதால் மற்ற வாகன ஒட்டிகள் பதற்றமடைந்தனர். வாலிபரை பிந்தொடர்ந்த […]
போலீசாரை பாராட்டிய பொதுமக்கள்

தாம்பரத்தில் நாளுக்கு நாள் போக்குவரத்து அதிகரித்து வருவதால் சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது இதனால் சாலைகளில் பள்ளங்கள் பல இடங்களில் ஏற்பட்டுள்ளன. தாம்பரம் போலீசார் தார் கலவை கொண்டு பள்ளங்களை நிரப்பினார்கள். இதனை பொதுமக்கள் பாராட்டினார்கள்.
தாம்பரத்தில் ரயில் சேவை ரத்தால் போக்குவரத்து நெரிசல்

தாம்பரம் ரெயில் நிலையத்தில் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக காலை 9.30 மணி முதல் பிறபகல் 1.30 மணி வரை மின்சார ரெயில்கள் அனைத்து ரத்து செய்யப்படுகிறது. இதனால் சென்னை கடற்கரையில் இருந்து பல்லாவரையிலும், அதுபோல் பல்லாவரத்தில் இருந்து கடற்கரை வரையிலும் குறிப்பிட்ட 20 நிமிட இடைவெளியில் இயக்கப்படுகிறது. அதுபோல் திருமால்பூர், செங்கல்பட்டு மார்கமாக கூடுவாஞ்சேரி வரையிலும் மறு மார்கத்தில் கூடுவாஞ்சேரி செங்கல்பட்டு மார்க்கமாக குறிப்பிட்ட அரைமணி நேரத்திற்கு ஒரு மின்சார ரெயில் என சிறப்பாக இயக்கப்படுகிறது. […]
தாம்பரம் மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் மேயர் வசந்தகுமாரி கமலகண்ணன் தலைமையில் மாநகராட்சி மைய அலுவலக மாமன்ற கூட்டரங்கில் நடைபெற்றது

இக்கூட்டத்தில் துணை மேயர் கோ.காமராஜ், மாநகராட்சி, ஆணையாளர் சீ.பாலச்சந்தர், மண்டலக் குழு தலைவர்கள், நிலைக் குழு தலைவர்கள் மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலகர்கள் கலந்து கொண்டனர்.
தாம்பரம் தீமிதி திருவிழாவில் விழுந்து அதிமுக பிரமுகர், மனைவி கருகினர்

சென்னை தாம்பரம் அருகே அம்மன் கோவில் தீமிதி திருவிழாவின்போது, நெருப்பு தனலில் தவறி விழுந்து, அதிமுக முன்னாள் கவுன்சிலர் அவருடைய மனைவி உட்பட 3 பேர் படுகாயங்களுடன், சென்னை கே எம் சி மருத்துவமனையில் அனுமதி. சென்னை தாம்பரம் அருகே இரும்புலியூர் திலகவதி நகரில் உள்ள நாகவல்லி அம்மன் கோவிலில், ஆடி மாதம் இரண்டாவது வார திருவிழா நேற்று ஞாயிறு அன்று சிறப்பாக நடந்தது. நேற்று மாலை அந்த கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது. இந்த தீமிதி […]
தாம்பரம் ரயில்வே பணிமனையில் பராமரிப்பு பணி காரணமாக இன்றும் நாளையும் 55 மின்சார ரயில்கள் ரத்து!..
தாம்பரம் ஏரிகளில் கழிவு நீர் அதிமுக குற்றச்சாட்டு

தாம்பரம் ஏரிகள் கழிவு நீர் ஏரிகளாக மாறி உள்ளன என்று அதிமுக குற்றம் சாட்டியுள்ளது. மின் கட்டணத்தை உயர்த்தியதை கண்டித்து தாம்பரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தாம்பரம் சண்முகம் சாலையில் நடந்த போராட்டத்திற்குமாவட்ட அதிமுக செயலாளர் சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். திமுக அரசை கண்டிக்கும் வகையில் கைகளில் பதாகைகளை ஏந்தியவாறு பொதுமக்களும் அதிமுகவினரும் கண்டனம் முழக்கங்களை எழுப்பினர்கள். பகுதி செயலாளர் எல்லார் செழியன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் டி கே எம் […]
தாம்பரம் கல்லூரி மாணவி தற்கொலை

தாம்பரம் அருகே கல்லூரி மாணவி மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தாம்பரம் அடுத்த பாரத் நகர் பகுதியை சேர்ந்தவர் நித்திய ஜீவன் (19) ராஜகீழ்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனதில் பகுதி நேரமாக வேலை பார்த்துவிட்டு தனியார் கல்லூரியில் பி.சி.ஏ மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் நித்தியாவின் தந்தை ஆப்ரஹாம் உடல்நிலை சரியில்லாமல் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது தாயாரும் மருத்துவமனையில் உள்ளார். […]