கேட்பாரற்றுக் கிடந்த 9 பவுன் நகையை போலீசில் ஒப்படைத்த ஆட்டோ டிரைவர்

சென்னையை அடுத்த தாம்பரம் ரங்கநாதபுரம் காதர்பாய் தெருவை சேர்ந்தவர் சாகுல் ஹமீது. ஆட்டோ டிரைவர். இவரது மகள் நஸ்ரின் பானு. நேற்று அதிகாலை முதல் தாம்பரம் பகுதியில் விட்டுவிட்டு மழை பெய்து வந்தது. சாகுல் அமீது, தாம்பரம் ரெயில் நிலையத்துக்கு சவாரி ஏற்ற சென்றபோது மழை பெய்ததால் ஆட்டோவின் உள்ளே மழைநீர் விழாமல் தடுக்க வீட்டில் இருந்த போர்வையை எடுத்து சென்றார்.அவரது மகள் நஸ்ரின் பானு, இரவில் தூங்கும்போது தான் அணிந் திருந்த 9 பவுன் நகையை […]

பஸ் மீது மோதல் :சேலையூர் போக்குவரத்து எஸ்ஐ உயிரிழப்பு

சென்னை புதுப்பேட்டை காவலர் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருபவர் சிவகுமார் (வயது- 53) இவர் தாம்பரம் மாநகர காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட சேலையூர் போக்குவரத்து சிறப்பு உதவியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் சிவகுமார் பணி முடிந்து இன்று அதிகாலை தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்துள்ளார்,அப்போது ஆலந்தூர் அருகே ஆசர்கான பேருந்து நிலையத்தில் நின்று கொண்டு இருந்த தனியார் பேருந்தில் பின்னால் எதிபாரதவிதமாக விதமாக […]

தாம்பரத்தில் சரக்கு ரயில் பெட்டி கவிழ்ந்தது

தாம்பரம் ரெயில்வே பரமரிப்பு பகுதியில் நிறுத்திவைக்கப்பட்ட கார்களை ஏற்றி செல்லும் காலி சரக்கு ரெயில் மித வேகத்தில் சென்னையை நோக்கி இழுத்து செல்லப்பட்டது, மாலை சுமார் 7 மணியளவில் தாம்பரம்- சானடோரியம் இடையே சென்றபோது 8,9 மற்றும் 10 எனும் மூன்று காலி ரெயில் பெட்டிகள் தடம் புரண்டு வலதுபுரம் உள்ள தண்டவாளத்தையும் சேதப்படுத்தி நின்றது. இந்த தகவல் அறிந்த உயர் ரெயில்வே துறை அதிகாரிகள் பார்வையிட்டு வழகமாக செல்லும் விரைவு ரெயில் மற்றும் புறநகர் ரெயில் […]

அமைச்சர் தா.மோ. அன்பரசனிடம் வாழ்த்து

செம்பாக்கம் தி.மு.க.வடக்கு பகுதி செயலாளர் ஏ.கே கருணாகரன் தனது பிறந்த நாளை முன்னிட்டு சிறு குறு நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசனிடம் வாழ்த்து பெற்ற போது எடுத்த படம்

வெள்ளரிக்காயில் மயக்கப் பொடி தூவி பெண்களிடம் நகை பறிக்கும் கும்பல் கைது

வேலூரில் இருந்து சென்னை தாம்பரம் சானடோரியத்திற்கு வரும் அரசு பேரூந்துகளில் திருமண முகூர்த்த தினம், அல்லது கோவில் விஷேச தினங்களில் பயணம் செய்யும் பெண்களிடம் நகை கொள்ளையடிப்பதாக 15 சவரன் நகையை பறிகொடுத்த மூன்று பெண்கள் தாம்பரம் போலீசில் புகார் கொடுத்தனர். இதன் அடிப்படையில் நகை பறிகொடுத்தவர்களிடம் முதலில் விசாரித்தபோது அருகிள் இருந்த பெண்ணிடம் இனிப்புகள், வெள்ளேரி காய் வாங்கி சாப்பிட்டபோது அரை மணி நேரம் மயக்கம் ஏற்பட்டதாகவும் அதன் பின்னர் மயக்கம் தெளிந்து பார்த்தால் பெண்ணையும் […]

பாலியல் தொல்லை : பேராசிரியருக்கு தர்ம அடி கொடுத்த மாணவர்கள்

சென்னையை அடுத்த படூரில் இயங்கி வரும் தனியாருக்கு சொந்தமான கல்லூரியில் (கம்பியூட்டர் சயின்ஸ்) பேராசிரியராக பணிபுரிந்து வந்த சஞ்சு ராஜு (36) என்கின்ற நபர் அதே கல்லூரியில் படித்துக் கொண்டு பேராசிரியராக பணிபுரிந்து வரும் 27 வயதுடைய இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். தகவல் அறிந்த சக பெண் பேராசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்த சஞ்சு ராஜீவை அடித்து வெளுத்து வாங்கியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த கல்லூரி மாணவர்கள் பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் சஞ்சு ராஜீவிற்கு […]

நிலப்பிரச்சனை : |திமுக தொழிற்சங்க நிர்வாகி கொலை

அயனாவரம் பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 71) சென்னை மாநகராட்சியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர், தமிழ்நாடு அனைத்து மாநகராட்சி பணியாளர்கள் சங்க பொதுச் செயலாளர் உள்ளார், எம்.பி குப்புசாமியிடம் உதவியாளராக இருந்தார், இவரது உறவினர் ஒருவர் பாம்பேயில் உள்ள நிலையில் அவருக்கு சொந்தமான ஒரு கிரவுண்ட் நிலம் ஈசிஆர் உத்தண்டியில் உள்ளதுஇந்த இடத்தை ஊரப்பாக்கத்தை சேர்ந்த ரவி என்பவர் போலி பத்திரங்கள் தயார் செய்து இடத்தைச் சுற்றி காம்பௌண்ட் சுவர் கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து மோசடி செய்ய […]

ரூ. 1000 லஞ்சம் வாங்கிய 2 போலீஸ்காரர்கள் நீக்கம்

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை பத்திர பதிவு அலுவலக அருகே சிந்தாரிப்பேட்டை பகுதியைச் சேர்ந்த வியாபாரி முஷாமல் முகமது என்பவர் படப்பை அருகே ஒரு இடத்தை வாங்கி பத்திரப்பதிவு செய்வதற்காக தான் கொண்டு வந்த கார் டிக்கியில் 6 லட்சம் ரூபாய் பணத்தை வைத்து விட்டு.பத்திரபதிவு அலுவலகத்திற்குள் சென்று தன் வாங்கிய இடத்திற்கு கையெழுத்து போட்டுவிட்டு வெளியே வந்து பார்த்தபோது காரின் டிரைவர் கண்ணாடி உடைக்கப்பட்டு காரின் டிக்கி திறக்கப்பட்டு அதிலிருந்து 6 லட்ச ரூபாய் பணத்தை திருடி […]

இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்களை பூமி திரும்பியதற்கு மதிமுக மாமன்ற உறுப்பினர் புஸிராபானு நாசர் சல்யூட் அடித்து வரவேற்பு

தாம்பரம் மாநகராட்சி 2 வது மண்டலகுழு கூட்டம் மண்டலக் குழு தலைவர் ஜோசப் அண்ணாதுரை தலைமையில் கூடியது.இதில் மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அதிகாரிகள் கலந்துகொண்டனர்.அப்போது பேசிய மண்டலக் குழு தலைவர் ஜோசப் அண்ணாதுரை தாம்பரம் மாநகராட்சியின் 2025-26 ம் ஆண்டுகான நிதி நிலை அறிக்கையில் 91 திட்டங்கள் நமது இரண்டாவது மண்டலத்திற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது என மகிழ்ச்சி தெரிவித்து அதனை பட்டியலிட்டு படித்து காட்டினார். அதனை தொடர்ந்து 4.15 கோடி ரூபாய் கான சாலை, மழைநீர் வடிகால் […]

தாம்பரம் இரயில் நிலையத்தில் டிக்கெட் எடுக்காத பயணியும் பரிசோதனை அதிகாரியும் கைகலப்பு

செங்கல்பட்டுவில் இருந்து சென்னை கடற்கரை சென்ற மின்சார ரெயிலில் முதல்வகுப்பு பெட்டியில் லோகேஷ்(37) என்பவர் பயணித்துள்ளார்.அப்போது தாம்பரம் வருமுன்பாக பெண் டிக்கெட் பரிசோதகர் பிரித்தி சோதனை செய்தபோது முதல் சாதாரண பெட்டியில் பயணம் செய்யும் டிக்கட் மட்டும் எடுத்தது தெரிய வந்தது, இதனால் தாம்பரத்தில் அபராத தொகை வசுலிக்க கூட்டிச்சென்ற நிலையில் தப்பியோடியுள்ளார், பெண் டிக்கெட் பரிசோதகர் பிடிக்க சொல்லி குரல் எழுப்பியதால் அங்கு டீ குடித்துக்கொண்டு இருந்த பேனிஷ் என்கிற டி.டி.ஆர் உள்ளிட்ட இருவர் பிடித்துள்ளனர், […]