ரூபாய் 20000 லஞ்சம் தாம்பரம் கோட்டாட்சியரின் தனி உதவியாளர் கைது

வண்டலூர் அடுத்த ரெத்தினமங்கலத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான 61.5 செண்ட் நிலத்திற்கு பட்டா திருத்தம் செய்ய வருவாய் துறையில் மனுசெய்தார். இது குறித்தான மனு மீது நடவடிக்கை எடுக்க வண்டலூர் வட்டாட்சியர் மூலம் தாம்பரம் கோட்டாட்சியர் செல்வகுமாருக்கு அனுப்ப பட்டது, இந்த நிலையில் அந்த ரவிசந்திரனிடம் தொடர்பு கொண்ட தாம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் முது நிலை ஆய்வாளர் ராஜா, பட்டா திருத்தம் செய்திட கோட்டாட்சியர் ஒப்புதல் பெறப்பட்ட கோப்பு காண்பித்து 28.6..2023 அன்று 20 […]
குரங்கு தொல்லை

சேலையூர் ராஜேஸ்வரி நகர் சந்தானலட்சுமி தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குரங்குகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. .வீட்டு முன்பு போடப்பட்டிருக்கும் பால் பாக்கெட் எடுத்து குரங்கு பால் குடிக்கும் காட்சி.
எஸ்.ஆர்.எம் தமிழ் பேராயத்தில் தேசிய மாநாடு

தமிழ் வளர்ச்சியில் வைணவர்களின் பங்கு என்ற தேசிய மாநாடு எஸ்.ஆர்.எம் தமிழ் பேராயத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது. வீரவணநல்லூர் ஸ்ரீ குலசேகர ராமானுஜ மடத்தின் ஸ ராம அப்ரமேய ராமானுஜ ஜீயர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் மடத்தின் 24வது பீடாதிபதி சடகோப ராமானுஜ ஜீயர், மன்னார்குடி மூணாறு செண்டலங்கார செண்பக மன்னார் ராமானுஜ ஜீயர் ஆகியோர் பங்கேற்று ஆசி வழங்கினர். எஸ்.ஆர்.எம் குழும தலைவர் பாரிவேந்தர் எம்.பி. தலைமை வகித்தார். புதுச்சேரி பொதுப்பணி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் […]
பெருங்களத்தூர் ரயில்வே சுரங்கபாதையில் நடந்து சென்ற பெண்ணிடம் 11 சவரன் தாலி செயின் பறிப்பு, மர்ம நபர் குறித்து தாம்பரம் இருப்புபாதை போலீசார் விசாரனை

பெருங்களத்தூர் கிருஷ்ணசாமி தெருவை சேர்ந்த பெண் ஜெயலஷ்மி(60), மகள் வீட்டிற்கு வந்த நிலையில் மயிலாப்பூர் கோவிலுக்கு சென்று மீண்டும் பெருங்களத்தூர் வந்த அவர் ரயில்வே சுரங்கநடைப்பாதையில் நடந்துசென்ற போது அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் ஜெயலஷ்மி கழுத்தில் இருந்த 11 சவரன் தாலி செயினை பறித்து சென்றார். இது குறித்து அக்கம் பக்கதினர் பீர்க்கன்காரணை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்த நிலையில் நேரில் விசாரணை செய்த அவர்கள் இந்த சுரங்க நடைப்பாதை தாம்பரம் இருப்புபாதை காவல் […]
பெருங்களத்தூர் புதிய மேம்பாலம் திறப்பு

பெருங்களத்தூர் மேம்பாலத்தில் ஒருபகுதி ரயில்வே தண்டவாளத்தை கடக்கும் விதமாக இருவழி சாலையுடம் அமைக்கப்பட்ட மேம்பாலத்தை அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தார். பெருங்களத்தூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக 155 கோடி மதிப்பீட்டில் பிரமாண்ட மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இதில் வண்டலூரில் இருந்து தாம்பரம் மார்கமாக செல்லும் விதமான மேம்பாலம் ஏற்கனவே திறக்கப்பட்ட நிலையில் தற்போது அந்த மேம்பாலத்தில் இணைக்கும் விதமாக ரயில்வே தண்டவளத்தை கடக்கும் 24 கோடி மதிப்புள்ள ரயில்வே மேம்பாலத்தை குறு சிறு நடுத்தர தொழில் […]