செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மகிதா,அரசு மருத்துவரை மிரட்டி ₨.12 லட்சம் லஞ்சம் பெற்றதாக சஸ்பெண்ட்

ஒரே மாதத்தில் 2 பெண் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் கூடுவாஞ்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாம்பரம் மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பீர்க்கன்கரணை, மணிமங்கலம், சோமங்கலம், ஓட்டேரி, கூடுவாஞ்சேரி மற்றும் மறைமலைநகர் ஆகிய காவல் நிலையங்களை உள்ளடக்கி கூடுவாஞ்சேரியில் அனைத்து மகளிர் காவல் நிலையம் இயங்கி வருகிறது. கூடுவாஞ்சேரியில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஏற்கனவே இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த விஜயலட்சுமி உட்பட 4 பெண் போலீசார், கடந்த ஜூன் மாதம் 3ம் தேதி இரவு […]
அடுக்குமாடி குடியிருப்புகளில் குப்பையை அகற்ற தாம்பரம் மாநகராட்சி புதிய கட்டுப்பாடு.

பொதுமக்கள் அதிர்ச்சிதாம்பரம் ஜூலை 11அடுக்குமாடி குடியிருப்புகளில் குப்பையை அகற்ற தாம்பரம் மாநகராட்சி புதிய விதிமுறையை புகுத்தியுள்ளது இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மாநகராட்சி பகுதிகளில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் குப்பையை மக்கும் குப்பை, மக்கா குப்பை என்று பிரித்து வைத்தால்தான் அதனை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் அகற்றுவார்கள் என்று கூறிவந்தனர்.தற்போது 5000 சதுர மீட்டர் அல்லது 50 வீடுகளுக்கு மேல் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் குப்பை அகற்ற தாம்பரம் மாநகராட்சி புதிய விதிமுறையை கொண்டு வந்துள்ளது அதன்படி […]
குளோபல் மருத்துவமனையில் பெண்களுக்கு நவீன சிகிச்சை மையம்

பெரும்பாக்கம் கிளினிக்கில் குளோபல் மருத்துவமனையில் கல்லீரல், இதயம், நரம்பியல் என பல்வேறு அதிநவீன சிகிச்சைகள் அளிக்கப்பட்டுவரும் நிலையில் மளிர்களுக்கான பல்வேறு மேம்படுத்தப்பட்ட சிகிச்சை மையம் இன்று திறக்கப்பட்டது. பெண்களுக்கான மகப்பேறு, கருத்தரித்தல், யூட்ரல் மாற்று சிசிக்சை என பல்வேறு சிக்கலான அறுவை சிகிச்சையை மும்பை டாக்டர் பதமபிரியாவுடன் மும்பை டாக்டர் ஜெய் மேத்தாவுடன் இணைந்து நுந்துளை அறுவை சிசிக்சைகள் அளிக்கவுள்ளதாக தெரிவித்தனர். இதுவரை 10க்கும் மேற்பட்ட மகளீர்களுக்கு மேம்படுத்தப்பட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளதல்லதாகவும் இனி தொடந்து தென் இந்திய […]
தாம்பரம் அருகே ரெயில் மோதி 2 பேர் பலி

சென்னை தாம்பரம் சானடோரியத்தில் ரயில் தண்டவளாத்தில் 45ந்து வயது மதிக்க தக்க நபர் பொதிகை விரைவு ரயில் மோதியதில் இரண்டு துண்டுகளாக உடல் இருப்பதாக தாம்பரம் இருப்புபாதை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்க்கு சென்ற போலீசார் உடல் கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து ரயில் மோதி இறந்தாரா அல்லது தற்கொலை செய்து கொண்டார என்ற கோணத்தில் விசாரனை செய்து வருகின்றனர். அதே போல் இன்று அதிகாலை கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை […]
ஆனந்தி இட்லி கடை சால்னாவில் கரப்பான் பூச்சி

மாடம்பாக்கம் ஆனந்தி இட்லி கடை சால்னாவில் கரப்பான் பூச்சி பரபரப்பு வீடியோவால் உரிமையாளர் தலைமறைவு மாடம்பாக்கத்தில் உள்ள பிரபல இட்லி கடையில் வாங்கிய சால்னாவில் கரப்பான் பூச்சி இருந்ததை ஒருவர் வீடியோவாக எடுத்து வெளியிட்டார். இதனை தொடர்ந்து கடையின் உரிமையாளர் தலைமறைவு ஆனார். தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட மாடம்பாக்கம் பிரதான சாலை சுதர்சன் நகர் பகுதியில் பிரபல ஆனந்தி சைவ உணவகம் இயங்கி வருகிறது. இவர்களுக்கு மேடவாக்கம், கேம்ப் ரோடு உட்பட பகுதிகளில் கிளைகளும் உள்ளன. இந்த […]
தாம்பரம் அருகே நடுரோட்டில் தீ பிடித்து எரிந்த வேன்

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு வேலைக்கு ஆட்களை ராஜலட்சுமி டிராவல்ஸ் என்ற தனியார் நிறுவனம் அழைத்துச் செல்வது வழக்கம் இந்நிலையில் வாகனம் மூன்று நாட்களுக்கு முன்பு பழுதான நிலையில் கிஷ்கிந்தா சாலையில் உள்ள சர்வீஸ் சென்டரில் வாகனத்தை சரி செய்வதற்காக கொடுத்திருந்த நிலையில் இன்று வாகனம் சரி செய்யப்பட்டு சர்வீஸ் சென்டரில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் எடுத்துச் செல்வதற்காக டிரைவர் பார்த்திபன் வாகனத்தை கிஸ்கிந்தா சாலையில் ஓட்டிச் சென்றார். அப்போது திடீரென வாகனத்தின் முன்பக்கத்தில் இருந்து புகை வருவதை […]
ஒரு லட்சத்திற்கு மேல் பொருள் வாங்கி மோசடி போலி காசோலை கொடுத்தவர் தாம்பரத்தில் கைது

தாம்பரத்தில் 12 லட்சம் ரூபாய்க்கு வீட்டு உபயோக பொருட்கள் வாங்கி கொண்டு காசோலை கொடுத்து மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை மேற்கு தாம்பரம், முடிச்சூர் பிரதான சாலையில் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் பிரபல தனியார் ஷோரூம் (சத்யா ஏஜென்சிஸ்) உள்ளது. இங்கு சுரேஷ்பாபு (53) என்பவர் ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த மாதம் 3ம் தேதி ஷோரூமில் பணியில் இருந்த போது வெங்கடபதி என்பவர் […]
படப்பை டிபன் கடையில் கத்தி முனையில் ரூ 3000 பறித்த கும்பல்

டிபன் கடையில் கத்திமுனையில் மிரட்டி 3 ஆயிரம் பணம் பறித்த 4பேர் கைது. பட்டாகத்திகள், இருசக்கர வாகனம் பறிமுதல் தாம்பரம் அடுத்த படப்பை வண்டலூர் வாலாஜாபாத் சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த கும்பல் டிபன் கடையில் கத்தி முனையில் மிரட்டி 3 ஆயிரம் பணம் பறித்து சென்றதாக மணிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்ட நிலையில் உதவி ஆனையாளர் ரவி உத்திரவின் பேரில், குற்றப்பிரிவு ஆய்வாளர் ராஜ்குமார் விசாரணையில் ஆரம்பாக்கம் பகுதியில் பதுங்கிய ஏரிவாக்கம் விஷ்ணு(21), ஆதனஞ்சேரி […]
தாம்பரம் அருகே மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் பலி

தாம்பரம் அருகே மின்சாரம் பாய்ந்து எலட்ரீசியன் உயிரிழப்பு மேடவாக்கம், ஜலடியான்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி (45) எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் தாம்பரம் அடுத்த சந்தோஷ்புரம் கலைஞர் கருணாநிதி நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குளிர்சாதன பெட்டியை ஒயர் மூலம் மின்சார பெட்டியில் இணைப்புதற்காக முயன்ற போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்டார். அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் உடனடிகாக கோவிந்தசாமியை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு […]
மணிப்பூர் கலவரம் தாம்பரத்தில் கிறிஸ்தவர்கள் ஆர்ப்பாட்டம்

மணிப்பூர் இன கலவரத்தை அடக்காத ஒன்றிய, மணிப்பூர் மாநில பாஜக அரசை கண்டித்து தாம்பரத்தில் அனைத்து கிறிஸ்தவ மக்கள் கண்டன ஆர்பாட்டம், திமுக, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள், கிறிஸ்தவ மதபோதகர்கள் உள்ளிட்ட ஜனநாயக கட்சியினர் பங்கேற்பு வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில் இரண்டு மாதங்களாக நடைபெரும் இனக்கலவரதை ஒன்றிய, மணிப்பூர் மாநில பாஜக அரசுகள் கட்டுபடுத்த தவறியதை கண்டித்தும், கிறிஸ்தவர்கள், தேவாளையங்கள் மீதான தாக்குத்லை கண்டித்தும் தாம்பரம் சண்முகம் சாலையில் தாம்பரம் அனைத்து கிறிஸ்தவமக்கள் இயக்கம் சார்பில் […]