துணை மேயர்‌ கோ.காமராஜ்‌ (15.08.2023) தாம்பரம்‌ மாநகராட்சி மைய அலுவலக வளாகத்தில்‌ நடைபெற்ற சுதந்திர தின விழாவில்‌ தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்‌

உடன்‌ மாமன்ற உறுப்பினர்கள்‌, மாநகராட்சி அலுவலர்கள்‌ உட்பட பலர்‌ கலந்து கொண்டனர்‌.

தமிழக அரசினால் இரண்டாவது தலைசிறந்த தாம்பரம் மாநகராட்சி என தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ளார்

தாம்பரம் நகராட்சியாக இருந்து தரம் உயர்த்தப்பட்டு 18 மாதங்கள் ஆன தாம்பரம் மாநகராட்சி தமிழக அரசினால் இரண்டாவது தலைசிறந்த தாம்பரம் மாநகராட்சி என தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் ராகுல்நாத் மற்றும் நமது தாம்பரம் மாநகராட்சியின் ஆணையாளர் அழகுமீனா, தாம்பரம் மாநகராட்சியின் மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன் மற்றும் தாம்பரம் மாநகராட்சியின் துணை மேயர் கோ.காமராஜ் மரியாதை நிமித்தமாக பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.

தாம்பரத்தில் கருணாநிதி நினைவுநாள் தி.மு.க அஞ்சலி

முத்தமிழ் அறிஞர் கலைஞரின் 5 ம் ஆண்டு நினைவு நாளையொட்டி தாம்பரம் சண்முகம் சாலையில் அமைக்கப்பட்ட கலைஞரின் திரு உருவ படத்திற்கு தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா தலைமையில் திமுகவினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். மேலும் கலைஞருக்கு வீரவணக்கம் கோஷமிட்டனர். மண்டல குழு தலைவர்கள் காமராஜ், இந்திரன், மாமன்ற உறுப்பினர்கள் ஜோதிகுமார், ரமணி ஆதிமுலம், டி.ஆர்.கோபி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினார்கள்.

புதிய வந்தே பாரத் ரயில் தாம்பரத்தில் நிற்க வேண்டும் டி ஆர் பாலு பேட்டி

தாம்பரம் மாநகராட்சி 3 வது மண்டலதிற்குட்பட்ட 3 இடங்களில் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா தொகுதி மேம்பாட்டு நிதி 21 லட்சத்தில் அமைக்கப்பட்ட மூன்று குடிநீர் சுத்திகரிப்பு மையங்களை ஸ்ரீ பெரும்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா ஆகியோர் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவைத்தனர். அதனயடுத்து புதியதாக கட்டப்பட்ட 3 வது மண்டல அலுவலக கூடுதல் கட்டிடத்தையும் திறந்துவைத்த நிலையில் கலைஞர் மகளிர் உரிமை தொகை விண்ணப்ப படிவங்கள் பெரும் மையத்தை டி.ஆர்.பாலு பார்வையிட்டு […]

பெருங்களத்தூர் ரயில் நிலையத்தில் பெண்ணுக்கு கத்திக் குத்து

செங்கல்பட்டு மக்கான் சந்து விநாயகர் கோயில் தெருவை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி இவரது மனைவி தமிழ்ச்செல்வி (வயது 47) தனது பேரனின் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக .(மொட்டை அடித்தல்) துணிமணிகள் மற்றும் பழவகைகளை வாங்கிக் கொண்டு செங்கல்பட்டுக்கு செல்ல பெருங்களத்தூர் ரயில் நிலையத்தில் பயண சீட்டு வாங்கிக் கொண்டு வரும்போது ஒன்னாவது பிளாட்பாரத்தில் அடையாளம் தெரியாத நபர் தன் கையில் இருந்த கூர்மையான கத்தியால் தமிழ்ச்செல்வியின் வலது கையில் கிழித்து விட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் கையில் பலத்த காயமடைந்த […]

தாம்பரம் மாநகராட்சியை பாஜக உண்ணாவிரதம்

மணிப்பூர் கலவரத்தை விரைவில் கட்டுக்குள் மத்திய அரசு கொண்டுவரும் மாநிலச் செயலாளர் வினோஜ் பி.செல்வம் பேட்டி தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் பொதுமக்களின் அடிப்படை வசதிகளை செய்யாமல் இருக்கும் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பாஜக சார்பில் உண்ணாவிரத போராட்டம் மாவட்டத் தலைவர் செம்பாக்கம் வேதசுப்பிரமணியம் தலைமையில் செம்பாக்கம், காமராஜபுரம் பேருந்து நிறுத்தம் அருகில் நடைபெற்றது.இதில் பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி.செல்வம் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டு தாம்பரம் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கண்டன கோஷங்கள் […]

ரூ.7.00 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ அமைக்கப்பட்டுள்ள குடிநீர்‌ சுத்திகரிப்பு நிலையம்‌

செங்கல்பட்டு மாவட்டம்‌, தாம்பரம்‌ மாநகராட்சிக்குட்பட்ட செம்பாக்கம்‌ மண்டலம்‌, திருமலை நகர்‌ பகுதியில்‌ தாம்பரம்‌ சட்டமன்ற உறுப்பினர்‌ தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.7.00 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ அமைக்கப்பட்டுள்ள குடிநீர்‌ சுத்திகரிப்பு நிலையத்தை திருபெரும்புதூர்‌ நாடாளுமன்ற உறுப்பினர்‌ டி.ஆர்‌.பாலு திறந்து வைத்தார்‌. இந்நிகழ்ச்சியில்‌ தாம்பரம்‌ சட்டமன்ற உறுப்பினர்‌ எஸ்‌.ஆர்‌.ராஜா, தாம்பரம்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ ஆர்‌.அழகுமீனா, மண்டலக்குழு தலைவர்கள்‌, ச.ஜெயபிரதீப்‌, தூ.காமராஜ்‌, சு.இந்திரன்‌, மாமன்ற உறுப்பினர்கள்‌, அரசு அலுவலர்கள்‌ உட்பட பலர்‌ கலந்து கொண்டனர்‌.

செம்பாக்கம்‌ மண்டலம்‌ அலுவலகத்‌தில்‌ ரூ.50.00 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ புதியதாக கட்டப்பட்டுள்ள கூடுதல்‌ அலுவலக கட்டடம்‌

தாம்பரம்‌ மாநகராட்சி, செம்பாக்கம்‌ மண்டலம்‌ அலுவலகத்‌தில்‌ ரூ.50.00 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ புதியதாக கட்டப்பட்டுள்ள கூடுதல்‌ அலுவலக கட்டடத்தினை திருபெரும்புதூர்‌ நாடாளுமன்ற உறுப்பினர்‌ டி.ஆர்‌.பாலு திறந்து வைத்தார்‌. இந்நிகழ்ச்சியில்‌ தாம்பரம்‌ சட்டமன்ற உறுப்பினர்‌ எஸ்‌.ஆர்‌.ராஜா‌, தாம்பரம்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ ஆர்‌.அழகுமீனா, மண்டலக்குழு தலைவர்கள்‌, ச.ஜெயபிரதீப்‌, தூ.காமராஜ்‌, சு.இந்திரன்‌, மாமன்ற உறுப்பினர்கள்‌, அரசு அலுவலர்கள்‌ உட்பட பலர்‌ கலந்து கொண்டனர்‌.

தாம்பரம் மாநகராட்சி, 4வது மண்டல குழு கூட்டம் ரூபாய் 3.64 கோடி மதிப்பீட்டில் 20 தீர்மானங்களுக்கு அனுமதி

பெருங்களத்தூர் பகுதியில் உள்ள தாம்பரம் மாநகராட்சியின் 4வது மண்டல அலுவலகத்தில் மண்டல குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.கூட்டத்திற்கு மண்டல குழு தலைவர் டி.காமராஜ் தலைமை தாங்கினார். மாநகராட்சி உதவி ஆணையர் ஷகிலா முன்னிலை வகித்தார்.இதில் 4வது மண்டலத்திற்கு உட்பட்ட மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் 50வது வார்டு மாமன்ற உறுப்பினர் தாம்பரம் எம்.யாக்கூப் பேசுகையில், தாம்பரம் காந்தி சாலை – முத்துரங்க முதலி சாலை சந்திப்பில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே வேகத்தடை இல்லாததால் அடிக்கடி விபத்துகள் […]

பெருங்களத்தூர் பகுதியில் எல்இடி தெருவிளக்குகள்

நகராட்சி நிர்வாகத்துறை நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதி 55 கோடியே 81 லட்சம் மதிப்பீட்டில் தாம்பரம் மாநகராட்சி முழுவதும் பழைய மின் விளக்குகளை அகற்றிவிட்டு புதிய எல்.ஈ.டி பொருத்தும் திட்டத்தை குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசரன் துவக்கி வைத்தார். முதற்கட்டமாக தாம்பரம் ஜி.எஸ்.டி சாலையில் பொருத்தப்பட்ட எல்.ஈ.டி விளக்குகளை இயக்கி வைத்தார். தாம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, பல்லாவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன், துணை மேயர் […]