தாம்பரத்தில் முஸ்லிம் முன்னேற்ற கழக ஆண்டு விழா

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் 29ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு தாம்பரம் சண்முகம் சாலையில் 500 க்கும் மேற்பட்டவர்களு மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மனிதநேய மக்கள் கட்சி மாநில துணைப் பொது செயலாளர், தாம்பரம் மாநகராட்சி 50வது வார்டு மாமன்ற உறுப்பினருமான எம்.யாகூப் கலந்துக்கொண்டார் பொதுமக்களுக்கு உணவு வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தமிழ்நாடு முஸ்லிம் முன்னே கழகம் சமுதாய வேறுபாடுகள் இல்லாமல் தொண்டாற்றி வருகிறது. தமிழ்நாடு முழுவதும் அவசர […]
தாம்பரத்தில் பள்ளத்தில் விழுந்த மாடு மீட்பு

தாம்பரத்தில் பள்ளத்தில் விழுந்த மாட்டை தீயணைப்பு படையினர் மீட்டனர்தாம்பரம் மாநகராட்சி 50-வது வார்டு காதர்பாய் தெருவில் ஒரு மாடு குழியில் விழுந்து விட்டது. இதனை தொடர்ந்து தீயணைப்பு படைக்கு தகவல் தரப்பட்டது.அவர்கள் வந்ததும் மாமன்ற உறுப்பினர் எம் யாகூப் மற்றும் த.மு.மு.க கட்சி தொண்டர்கள் இணைந்து மாட்டை குழியில் இருந்து மீட்டு பத்திரமாக அனுப்பி வைத்தனர்..
நடிகர் விட்டு நீச்சல் குளத்தில் முதலைக்குட்டி, ஆமை

பழம்பெரும் நடிகர் பாலையா பேரன் பாலாஜி தங்கவேல் வீட்டின் நீச்சல் குளத்தில் இருந்த முதலை குட்டி மற்றும் ஆமையை வனத்துறையினரிடம் ஒப்படைப்பு. சென்னை தாம்பரம் அடுத்த நெடுங்குன்றம் பகுதியில் வசித்து வருபவர் மறைந்த பழம்பெரும் நடிகரான பாலைய்யாவின் பேரன் பாலாஜி தங்கவேல் இவர் இன்று காலை அவரது வீட்டின் நீச்சல் குளத்தை பராமரிப்பதற்காக குளத்தை சுத்தபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஒன்றரை அடி நீளத்தில் ஏதோ தண்ணீரில் நீந்துவதை கண்ட அவர், நீச்சல் குளத்தில் இருந்த நீரினை […]
சந்திராயன்- 3 இயக்குனர் வீரமுத்துவேல் சாய்ராம் கல்லூரி பழைய மாணவர்

சந்திரயான்-3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் படிர்ர் தாம்பரம் அடுத்த ஸ்ரீசாய்ராம் கல்லூரியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பிரமாண்ட திரையில் சந்திரயான்-3 வின்கல விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவத்தில் தடம் பதிக்கும் காட்சியை கண்டுகளித்தனர். இந்த ஸ்ரீ சாய்ராம் கல்லூரியில் தான் சந்திரயான்-3 முழு திட்ட இயக்குனராக உள்ள வீரமுத்துவேல் தனது முதல் மெக்கனிகல் பி.டெக் பொறியியல் படிப்பை 1998 ல் துவங்கினார். ஏற்கனவே டிப்ளோமா படித்த அவர் இரண்டாம் ஆண்டு கல்லூரியில் சேர்ந்து 2001 வரை மூன்று […]
திருவஞ்சேரி பள்ளி மாணவர்கள் 118 பேருக்கு இலவச மிதிவண்டி

தாம்பரம் அடுத்த திருவஞ்சேரியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 118 மாணவ மாணவியர்களுக்கு மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தாம்பரம் சட்டபேரவை உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா மாணவர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கினார். திருவஞ்சேரி ஊராட்சிமன்ற தலைவர் ஜனனி சுரேஷ், ஒன்றிய கவுன்சிலர் அமுதா வேல்முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்…
பத்திரப்பதிவு கட்டண உயர்வுக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவோர் எதிர்ப்பு

தாம்பரத்தில் சென்னை அடுக்குமாடி குடியிப்பு கட்டுமான உரிமையாளர்களின் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் சென்னை சுற்றியுள்ள அடுக்குமாடி குடியிப்புகள் கட்டுமான உரிமையாளர்கள் கலந்துக்கொண்டனர். சமிபத்தில் அரசு பதிவுத்துறை கட்டண உயர்வு, நடைமுறை சட்டங்கள் குறித்தும், பொது அதிகாரம் பெற நிர்ணையம் கட்டணம், புதியதாக சென்னை மாநகர குழுமம் விரிவாக்கம் செய்யப்பட்டது குறித்தும் ஆலோசனை செய்தனர். அதனையடுத்து செய்தியாளர்களிம் பேசிய அச்சங்க நிர்வாகி சுரேஷ்:- அனைவருக்கும் வீடு என்கிற தமிழக முதல்வரின் என்னத்தை செயலாற்றும் விதமாக […]
வேங்கை வாசலில் வீடு புகுந்து 75 பவுன் நகை கொள்ளை

வேங்கைவாசல் பாரதிதாசன் தெருவை சேர்ந்தவர் பாபு(56) பொறியாளரான இவர் அதே வேங்கைவாசலில் உள்ள டியானோ நிறுவனத்தில் பொது மேளாளராக பணி செய்கிறார். இவர் மனைவி சகுந்தலா ஆசிரியராகவும் மகள்கள் இரண்டுபேர் மாணவிகளாகவும் உள்ளனர். இன்று வழக்கம்போல் கதவை பூட்டி சென்ற நிலையில் மாலை வீடு திரும்பியபோது முன் கதவு கடபாரையால் உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் வீட்டில் இருந்த இரண்டு பிரேக்களில் வைக்கப்பட்ட 75 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இது குறித்து சேலையூர் காவல் நிலையத்தில் புகார் […]
தாம்பரத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் ஆர்பாட்டம்

தாம்பரத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட தலைவர் முருகன் தலைமையில் தாம்பரம் பேரூந்து நிலையத்தில் நீட் தேர்வு தேர்வு ரத்து செய்திடவும், தமிகத்திற்கு விலக்கு அளித்திடவேண்டும் என ஒன்றிய அரசை கண்டித்து ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழக வாரிவுரிமை கட்சியினர், விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள், இந்திய தேசிய லீக கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். அப்போது இரண்டுமுறை நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றும் அரசு மருத்துவகல்லூரியில் இடம் கிடைக்காத விரத்தியிம் […]
தாம்பரம் மாநகராட்சி 4 வது மண்டலத்தில் டி.காமராஜ் தேசிய கொடியேற்றினார்

பெருங்களத்தூரில் உள்ள தாம்பரம் மாநகராட்சி 4வது மண்டலகுழு அலுவலகத்தில் சுந்ததிர தினவிழா உற்சாக கொண்டாட்டம், மண்டலகுழு தலைவர் டி.காமராஜ் மூவர்ண தேசிய கொடியை ஏற்றிவைத்து இனிப்புகளை வங்கினார். அங்கு அமைக்கப்பட்ட மகாத்மா காந்தியடிகள் படத்திற்கும் மலர்துவி மறியாதை செய்த நிலையில் நலச்சங்கத்தினர், பொதுமக்களிடம் நடைபெறும் திட்டப்பணிகள் குறித்து பேசினார். இந்த விழாவில் மாநகராட்சி பொறியாளர் ஆனந்தஜோதி, நியமனகுழு உறுப்பினர் சேகர், மாமன்ற உறுப்பினர்கள் புகழேந்தி, சுரேஷ், பெரியநாயகம், மேற்கு தாம்பரம் பீர்கன்காரணை பெருங்களத்தூர் நலச்சங்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் […]
தாம்பரத்தில் மூவர்ண தேசிய கொடி பந்தலில் பொதுமக்களுக்கு பொதுவிருந்து அமைச்சர் சி.வெ.கணேசன் பங்கேற்பு

சுதந்திர தினத்தையொட்டி இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தாம்பரம் செல்வ விநாயகர் கோயிலில் பொதுவிருந்து நடைபெற்றது. இதில் தொழிலாளர் நலன் அமைச்சர் சி.வெ.கணேசன், தாம்பரம் சட்டபேரவை உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா உள்ளிட்ட உள்ளாட்சி பிரமுகர்கள் மூவர்ண தேசிய கொடி பந்தலில் பொதுமக்களுடன் பொருவிருந்தில் கலந்துகொண்டு 50மேற்பட்ட பெண்களுக்கு புடவைகளை அமைச்சர் சி.வெ.கணேசன் வழங்கினார். தாம்பரம் மாநகராட்சி மண்டல குழு தலைவர்கள் டி.காமராஜ், இந்திரன்அறநிலையத்துறை உதவி ஆணையாளர் நிர்வாகிகள் பங்கேற்றனர்.