தாம்பரத்தில் அண்ணா சிலைக்கு அதிமுகவினர் பேரணியாக சென்று மாலை அணிவிப்பு

பேரறிஞர் அண்ணாவின் 115 ஆவது பிறந்தநாள் விழா இன்று நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன் அவர்களின் தலைமையில் தாம்பரம் மத்திய பகுதி கழகச் செயலாளர் எல்லார் செழியன் ஏற்பாட்டில் அண்ணாவின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. தாம்பரம் சண்முகம் சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பேரறிஞர் அண்ணாவின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. பின்பு அங்கிருந்து அனைவருக்கும் இனிப்புகளும் வழங்கப்பட்டது. பின்பு தாம்பரம் […]
தாம்பரத்தில் புதிய நியாய விலை கடை திறப்பு ..

தாம்பரம் மாநகராட்சி 3 ஆவது மண்டலத்திற்கு உட்பட்ட 34 ஆவது வார்டு SBI காலனி பகுதியில் ரூ 10 லட்சம் மதிப்பீட்டில் நியாய விலை கடை மற்றும் 40 ஆவது வார்டு செம்பாக்கம் அம்பேத்கர் நகரில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் நியாய விலை கடை மற்றும் 42 ஆவது வார்டு ராஜகீழ்ப்பக்கம் மாருதி நகர் பகுதியில் ரூ .10 லட்சம் மதிப்பீட்டில் நியாய விலை கடை ஆகிய இம்மூன்று கடைகளும் ,தாம்பரம் சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி […]
தாம்பரம் அருகே நேற்று பெய்த கனமழை வங்கி சுவர் இடிந்து விழுந்ததில் சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழப்பு …

தாம்பரம் அருகே நேற்று பெய்த கனமழை மற்றும் சூறாவளி காற்றினால் வங்கி சுவர் இடிந்து செக்யூரிட்டி மீது விழுந்ததில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த்வர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு மேலும் இருவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர் இது குறித்தான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்து குரோம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சுந்தர்ராஜன் (64) சிட்லப்பாக்கம் ராகவேந்திரா தெருவில் உள்ள சிட்டி யூனியன் வங்கியில் செக்யூரிட்டியாக பணியாற்றி வந்தார், நேற்று இரவு வழக்கம் போல் பணியில் இருந்த போது தாம்பரம் […]
குரோம்பேட்டையில் ஜி.எஸ்.டி சாலையில் அதிமுகவினர் கோஷ்டி மோதல்..

குரோம்பேட்டையில் அண்ணா பிறந்தநாளையொட்டி மேடை விழா நடத்த முன்னாள் பல்லாவரம் எம்.எல்.ஏ மகன் ஜெயபிரகாஷ் ஏற்பாடு செய்துள்ளார், அந்த தகவல் அறிந்த தற்போது புதிய பகுதி நிர்வாகியாக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் சதீஷ் அவரின் ஆதரவாளர்களுடன் அங்கு வந்த ஏற்பாடுகளை தடுத்துள்ளனர், இதனால் இருதரப்பிலும் வாய் தகராறு ஏற்பட்டு, அதனை தொடந்து இரு கோஷ்டியாக நடு சாலையிலேயே மோதிக்கொண்டனர், இது குறித்து தகவல் அறிந்த குரோம்பேட்டை போலீசார் தடுத்து அவர்களை களைத்தனர். இதனால் ஜி.எஸ்.டி சாலையில் அதிமுகவினர் கோஷ்டி […]
குரோம்பேட்டையில் பெண் போலீசை கல்லால் தாக்கியவர் கைது
தாம்பரம் அடுத்த சானிடோரியம் அரசு நெஞ்சக நோய் மருத்துவமனை அருகே குரோம்பேட்டை போக்குவரத்து காவல் நிலையத்தில் பணிபுரியும், பெண் காவலர் குமுதா(26), சம்பவ இடத்தில் வாகன நெரிசல் சீர் செய்து கொண்டிருந்தார், அப்போது அங்கு ஒரு குறிப்பிட்ட இடத்தில் அதிக நெரிசல் இருந்ததால் அங்கு சென்று பார்த்த போது மது போதையில் இருந்த போதை ஆசாமி ஒருவர் கைகளில் ரத்த காயங்களுடன் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு செய்து கொண்டிருந்தார், அவரை எச்சரித்து பெண் காவலர், மீண்டும் போக்குவரத்தை […]
கலைஞர் மகளிர் உரிமைதொகை 15ம் தேதி முதல் வழங்க காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் துவக்கிவைக்கிறார்.

ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைக்கு ஒத்துவராது, பல மாநிலங்களில் மெஜாரிட்டி இல்லை என்றால் மீண்டும் நாடு முழுவதும் தேர்தல் நடத்தவா முடியும், மோடி மீது ஓராயிரம் குற்றச்சாட்டுகள் சொல்லலாம் கூடுதல் செலவில் கட்டப்பட்ட நாடாளுமன்ற கட்டிடம் (பாரத் மண்டபம்) தண்ணீரால் நிறம்வழிகிறது டி.ஆர்.பாலு பேட்டி:- தாம்பரம் முத்துரங்கம் பூங்காவில் ரூபாய் 25 லட்சம் செலவில் கட்டப்பட்ட உடற்பயிற்சி கூடம், யோகா மையம் ஆகியவற்றை இன்று டி.ஆர்.பாலு எம்.பி பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து 49, […]
பீர்க்கங்காணையில் ராணுவ வீரர் வீட்டில் நகை திருட்டு

தாம்பரம் அடுத்த பீர்க்கன்காரணை மறைமலை அடிகல் தொருவை சேர்ந்தவர் செல்வராஜ்(62) ஓய்வு பெற்ற ராணுவ வீரர் சொந்த வேலைகாரணமாக நான்கு நாட்களுக்கு முன்னர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் பெங்களூரு சென்று இன்று காலை வீடு திரும்பியுள்ளார். கிரில் கேட், கதவு உடைத்து உள்ளே. சென்ற கொள்ளையர்கள் பீரோவில் இருந்த 7 சவரன் நகை, வைர தோடு ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர். தகவல் அறிந்த பீர்க்கன்காரணை போலீசார் தடயங்களை பதிவு செய்து விசாரனை செய்துவருகிறார்கள்.
தாம்பரம் விமானப்படை தளத்தில் ஏரோ பார்க்

தாம்பரத்தில் விமானப் படைத்தளம் உள்ளது. இங்கு பொதுமக்கள் செல்ல அனுமதி வழங்கப்படுவது இல்லை. ஆனால் இப்போது மத்திய அரசு பொதுமக்கள் உள்ளே சென்று பார்வையிட அனுமதி வழங்கி உள்ளது. ஒரு ஓடு தளத்தை தனியார் பயிற்சி விமானிகள் பயன்படுத்த அனுமதிக்க உள்ளனர். மேலும் இங்கு ஒரு குளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதை சுற்றி சாலைகளும் பொதுமக்கள் கூடியிருந்து ஓய்வெடுக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில் தனிப்பட்ட குழுக்கள் மற்றும் பொதுமக்களுக்கு அனுமதி வழங்க உள்ளனர். பழைய ராணுவ விமானங்களை இங்கு […]
இருசக்கர வாகனத்தில் தலைகீழாக நின்று ஓட்டி சாதனை

சென்னை அசோக்நகர் பகுதியை சேர்ந்த இளைஞர் உதயசந்திரன், இருசக்கர வாகனத்தில் பல்வேறு சாகச சாதனைகளை புரிந்த இவர் இருசக்கர வாகன இருக்கையில் தலைகிழாக நின்றவாறு இயக்கி சாதனை புரிய திட்டமிட்டு தாம்பரம் கிழக்கு புறவழிச்சாலையில் சாதனை முயற்சியில் ஒரு கி.மீ தூரம் இருகைகளால் இருசக்கர வாகனத்தை பிடித்தவாறு தலைகவசம் அணிந்த நிலையில் தலையை இருக்கையில் வைத்து கால்களை உயரமாக செங்குத்தாக தூக்கியவாறு ஓட்டிசென்றார். குறிப்பிட்ட இலக்கை அடைந்ததால் சோழன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் உலக சாதனையாக […]
செம்பாக்கத்தில் கண் தானம் குறித்து பள்ளி கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

தாம்பரம் அடுத்த செம்பாக்கத்தில் பம்மல் சங்கர கண் மருத்துவமனை சார்பில் கண் தானம் குறித்து நடத்திய விழிப்புணர்வு பேரணியை தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா துவக்கிவைத்து பேரணியில் கலந்துகொண்டார். இதில் 200 க்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவர்கள் கண் தானம் குறித்து விளம்பர பதாகை கலை கைகளில் ஏந்தியும், விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியவாறு செம்பாக்கம் முதல் சேலையூர் ஸ்ரீ சங்கர பள்ளி வரை 3 கி.மீ தூரம் பேரணியாக சென்றனர். இந்த நிகழ்ச்சியில் அரிமா சங்க […]