மாவட்ட ஆட்சித்தலைவர்‌ ஆ.ர.ராகுல்நாத்‌, ‌ தலைமையில்‌ ஆலோசனைக்‌ கூட்டம்

தாம்பரம்‌ மாநகராட்சி அலுவலக கூட்ட அரங்கில்‌, மாநகராட்சி ஆணையாளர்‌ ஆர்‌.அழகுமீனா‌ முன்னிலையில்‌, சென்னை பெருநகர தென்பகுதிக்கான பாதாள சாக்கடை திட்டத்திற்காக விரிவான திட்ட அறிக்கை தயாரித்தல்‌ கலந்தாய்வுக்‌ கூட்டம்‌ மற்றும்‌ மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்‌ குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ ஆ.ர.ராகுல்நாத்‌, ‌ தலைமையில்‌ ஆலோசனைக்‌ கூட்டம்‌ நடைபெற்றது. இக்கூட்டத்தில்‌, மாநகராட்சி துணை ஆணையாளர்‌ எம்‌.செந்தில்முருகன்‌, தலைமை பொறியாளர்‌ கு.பாண்டுரங்கன்‌, நகர்‌ நல அலுவலர்‌ டாக்டர்‌. அருள்‌ஆனந்த்‌, உதவி ஆணையாளர்கள்‌, எஸ்‌.சகிலா மற்றும்‌ மாரிச்செல்வி மற்றும்‌ பிற துறை […]

மணிமங்கலம் அருகே ஏரியில் பெயிண்டர் பிணம் கொலையா? போலீஸ் விசாரணை

தாம்பரம் அடுத்த மணிமங்கலம் பகுதியில் உள்ள பெரிய ஏரியிலிருந்து கரசங்கால் பகுதி வழியாக அடையாறு ஆற்றுக்கு செல்லும் உபரிநீர் கால்வாயில் காயங்களுடன் ஆண் சடலம் கிடப்பதாக அப்பகுதியினர் 108 ஆம்புலன்ஸ்க்கும்,மணிமங்கலம் போலீசாருக்கும் தகவல் கொடுத்துள்ளனர். அந்த தகவலின் பேரில் நிகழ்வு இடத்திற்கு வந்த போலீசார் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் உதவியோடு கால்வாயில் கிடந்த நபரை பரிசோதனை செய்தனர். இதில் தலை, மற்றும் உடலில் ரத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்திருப்பது தெரிய வந்தது. பின்னர் சடலத்தை கைப்பற்றி குரோம்பேட்டை […]

மழைநீர்‌ வடிகால்‌ பணிகளை வசந்தகுமாரி கமகைண்ணன்‌ பார்வையிட்டு ஆய்வு

தாம்பரம்‌ மாநகராட்சிக்குட்பட்ட கிழக்கு தாம்பரம்‌, மாடம்பாக்கம்‌, வார்டு-67, சுதர்சன்‌ நகர்‌ பகுதியில்‌ மேற்கொள்ளப்பட்டு வரும்‌ மழைநீர்‌ வடிகால்‌ பணிகளை வசந்தகுமாரி கமகைண்ணன்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்‌. இந்த ஆய்வின்‌ போது கோ.காமராஜ்‌ மாமன்ற உறுப்பினர்கள்,‌ துணை ஆணையாளர், மாநகராட்சி செயற்பொறியாளர்‌, உதவி செயற்பொறியாளர்‌ உட்பட பலர்‌ உள்ளனர்‌.

நியாய விலைக்‌ கடையினை வசந்தகுமாரி கமலகண்ணன்‌ பார்வையிட்டு ஆய்வு

தாம்பரம்‌ மாநகராட்சிக்குட்பட்ட கிழக்கு தாம்பரம்‌, வார்டு–67, பார்வதி நகர்‌ பகுதியில்‌ அமைந்துள்ள நியாய விலைக்‌ கடையினை வசந்தகுமாரி கமலகண்ணன்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்‌. இந்த ஆய்வின்‌ போது கோ.காமராஜ்‌ மாமன்ற உறுப்பினர்கள், ‌துணை ஆணையாளர்‌, மாநகராட்சி செயற்பொறியாளர்‌, உதவி செயற்பொறியாளர்‌ உட்பட பலர்‌ உள்ளனர்‌.

தாம்பரம் பஸ் நிலையத்தில் பெருக்கி சுத்தம் செய்த மேயர்

நாடு முழுவதும் ஸ்வச் பாரத் அபியான் – ஸ்வச்டா ஹாய் சேவா என்ற சிறப்பு தூய்மை பணிகள் மேற்கொள்ள பாரத பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருந்தார்.அதன்படி சிறப்பு தூய்மை பணிகள் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. தாம்பரம் மாநகராட்சியில் உள்ள 5 மண்டலங்களிலும் தீவிர தூய்மைப் பணிகள் நடைபெற்றது. தாம்பரம் சானடோரியம் பஸ் நிலையத்தில் நடைபெற்ற தூய்மை பணிகளை தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி தொடங்கி வைத்து உறுதிமொழி ஏற்றார். பின்னர் பஸ் நிலையத்தில் நடைபெற்ற […]

தாம்பரம்‌ மாநகராட்சியின்‌ மாமன்ற கூட்டம்

தாம்பரம்‌ மாநகராட்சியின்‌ மாமன்ற கூட்டம்‌ மேயர்‌ வசந்தகுமாரி கமலகண்ணன்‌ தலைமையில்‌ (29.09.2023) மாநகராட்சி மைய அலுவலக மாமன்ற கூட்டரங்கில்‌ நடைபெற்றது. இக்கூட்டத்தில்‌ துணை மேயர்‌ கோ.காமராஜ்,‌ ஆணையர்‌ ஆர்‌.அழகுமீனா, மண்டலக்‌ குழு தலைவர்கள்‌, நிலைக்‌ குழு தலைவர்கள்‌ மற்றும்‌ மாமன்ற உறுப்பினர்கள்‌ ஆகியோர்‌ கலந்து கொண்டனர்‌.

தாம்பரம் மேயர் மழைநீர்‌ வடிகால்‌ பணிகள் பார்வையிட்டு ஆய்வு

தாம்பரம்‌ மாநகராட்சிக்குட்பட்ட செம்பாக்கம்‌ மண்டலம்‌, வார்டு-41 மசூதி காலனி பகுதியில்‌ மழைநீர்‌ வடிகால்‌ பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட பின்னர்‌, தூர்வாரும்‌ பணிகளை உடனடியாக மேற்கொள்ள மேயர்‌ வசந்தகுமாரி கமலகண்ணன்‌ அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்‌. இந்த ஆய்வின்‌ போது துணை மேயர் கோ.காமராஜ்‌ மாமன்ற உறுப்பினர்கள்‌, உதவி செயற்பொறியாளர்‌, உதவி/இளநிலை பொறியாளர்‌, மாநகராட்சி அலுவலர்கள்‌ உட்பட பலர்‌ உள்ளனர்‌.

தாம்பரம் மாநகராட்சி மண்டலம் 3 உட்பட்ட 43-வது வார்டில் மக்கள் குறை தீர்ப்பு

தாம்பரம் மாநகராட்சி மண்டலம் 3 உட்பட்ட 43வது வார்டில் உள்ள பாலாஜி அவென்யூ, சாந்தி அவென்யூ, பாலு அவென்யூ, கனகராஜ் அவென்யூ மற்றும் அப்பகுதியில் உள்ள மக்கள் குறைகளை, தெரிந்துகொள்ள மாமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் சி.ஜெகன் MC தலைமையில், சுகாதாரப்பிரிவு அதிகாரி திரு.நாகராஜ்(SO), கண்காணிப்பாளர் திரு.கார்மேகம்(SS), வருவாய்ப்பிரிவு ஆய்வாளர் திரு.பிரபாகரன்(RI), திரு.ரவிச்சந்திரன்(BC) மற்றும் பொறியாளர் பிரிவு திருமதி.ஜீவித்ரா(TA) மற்றும் அங்குள்ள பொதுமக்கள்கள் கலந்து கொண்டு மாநகராட்சியின் மூலம் எடுக்கப்படவேண்டிய வளர்ச்சி பணிகள் மற்றும் குறைகளும் அதற்குண்டான பொருட்கள் […]

தாம்பரம் வீட்டில் பிரபல ரவுடி தலை சிதைக்கபட்ட நிலையில் வெட்டி கொலை

பல்லாவரம் அடுத்த பம்மல் பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி மோகன் ராஜ் இவர் மீது காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது, இந்நிலையில் மோகன்ராஜ் மணிமங்கலம் அடுத்த ஆதனூர் பகுதியில் தனியாக வீடு எடுத்து தங்கியிருந்து வந்துள்ளார், இன்று காலை மோகன்ராஜை சில மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்துவிட்டதாக அவரது தங்கையின் செல்போனுக்கு தொடப்பு கொண்ட நபர் ஒருவர் கூறியதை அடுத்து பதறி போனவர் சம்பவ இடத்திற்க்கு சென்று பார்தத போது தலை […]