தாம்பரம் விமானப்படை ஆண்டு விழாவில் விமானிகள் சாகசம்

சென்னை அடுத்த தாம்பரம் விமான படை பயிற்சி மையத்தில் உள்ள விமானிகள் பயிற்றுநர் பள்ளியின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இரண்டு நாட்கள் அதன் நிறைவிழா கொண்டாடபட்டது. விமான படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் சவுத்திரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இதில் 9000 அடி உயரத்தில் இருந்து பாராசூட்டில் குதித்து சாகசம், தேசிய கொடி மூவர்ண வடிவில் பாராசூட் இயக்குவது, பாராக்லிடிங், தாழ்வாக போர் விமானம் இயக்குவது, உள்ளிட்ட பல்வேறு வான் சாகசங்களை […]

செல்போன் விபரீதம் மின்சாரம் தாக்கி ஐடி ஊழியர் பலி

சென்னை கிழக்கு தாம்பரம் அடுத்த சர்மா தெருவை சேர்ந்தவர் செந்தில் பிரசாத் (32),இவருடைய மனைவி ரன்ஜினி தேவி (30) இவருவரும் கிண்டியில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் ஒன்றாக வேலை பார்த்து வருகின்றனர். இன்று வழக்கம் போல் காலை ரன்ஜினி தேவி வேலைக்கு சென்றிருந்த நிலையில் வீட்டில் இருந்த செந்தில் பிரசாத் செல்போனில் தொடர்பு கொண்ட போது எடுக்காததால் சந்தேகமடைந்த ரன்ஜினி தேவி வீட்டிற்க்கு சென்று பார்த்த போது பால்கனியில் செந்தில் பிரசாத் உயிரிழந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து […]

நீட் விலக்கு கோரி தாம்பரத்தில் கையெழுத்து இயக்கம்

நீட் தேர்வுக்கு விலக்கு கோரி கிழக்கு தாம்பரத்தில் கையெழுத்து இயக்கம்,காஞ்சி வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி மாணவரணி மருத்துவர் அணி சார்பில் தாம்பரம் மாநகராட்சி மேயர் வந்தகுமாரி கமலக்கண்ணன் தலைமையில் இந்த நிகழ்ச்சியில் தாம்பரம் மாநகர கழக துணைச் செயலாளர் பொன் சதாசிவம், அமைப்புசாரா ஓட்டுனர் அணியின் மாவட்ட அமைப்பாளர் தாம்பரம் நாராயணன், மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் இன்ஜினியர் ராமமூர்த்தி, மாவட்ட சிறுபான்மை அணி துணை தலைவர் ஷாஜகான், மாவட்ட மகளிர் தொண்டரணி துணை […]

டெல்லி சுதந்திர பூங்காவுக்கு ம.பொ.சி வீட்டு மண்

சுதந்திரப் போராட்ட வீரர்கள் வாழ்ந்த பகுதி மண் சேகரிக்கப்பட்டு டெல்லி கொண்டு செல்லப்பட்டது. என் மண் என் தேசம் என்ற திட்டத்தின் படி சுதந்திர போராட்ட வீரர்கள் பிறந்த, வாழ்ந்த வரலாற்று சிறப்புமிக்க பகுதிகளில் இருந்து ஒரு பிடி மண் எடுக்கப்பட்டு தலைநகர் டெல்லியில் போர் நினைவு சின்னம் இருக்கக்கூடிய பகுதியில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சிலையை சுற்றி அந்த மண் தூவப்பட்டு 7500 மரங்களை நடை திட்டமிட்டுள்ளனர்.இதற்காக செங்கல்பட்டு மாவட்டத்தில் சுதந்திர போராட்ட வீரர்களின் […]

மது போதையில் மகன் தாக்கியதால் தந்தை பலி

தாம்பரம் அடுத்த பதுவஞ்சேரி, பஞ்சாயத்து காலனியை சேர்ந்தவர் மணி, (55) இவரது இளைய மகன் சந்துரு( 19) குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர் 18ம் தேதி இரவு, மது அருந்துவிட்டு வீட்டிற்கு வந்தார். இதைபார்த்த மணியின் மூத்த மகன் கார்த்திக், 32, என்பவர் தம்பியை தட்டி கேட்டுள்ளார். இதனால், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதைபார்த்த தந்தை மணியும், இளைய மகன் குடித்துவிட்டு வந்ததை தட்டிகேட்டுள்ளார். அப்போது, ஆத்திரமடைந்த சந்துரு, தந்தையை தாக்கி கீழே தள்ளிவிட்டுள்ளார் அதில், அவருக்கு தலையில் […]

மேற்கு தாம்பரம் பள்ளி பவள விழா எஸ் ஆர் ராஜா பங்கேற்பு

செங்கல்பட்டு மாவட்ட ம் மேற்கு தாம்பரம் மாந்தோப்பு பகுதியில் 1948 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட எம்.சி.சி.ஆர்.எல் உயர் நிலை பள்ளி துவங்கி 75 ஆண்டு ஆவதை முன்னிட்டு இன்று இப் பள்ளியில் 75 ஆண்டு பவள விழா இன்று கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். பின் பவள விழா மலர் வெளியிடப்பட்டது. நிகழ்ச்சியில் சென்னை கிறிஸ்தவ கல்லூரியின் முதல்வர் வில்சன், மற்றும் […]

தாம்பரம் ரெயில்வே விளையாட்டு மைதானத்தில் தண்டவாளம் அமைக்க எதிர்ப்பு

கிழக்கு தாம்பரம் ரெயில்வே மைதானம் ஆங்கிலேயர் ஆட்சிகாலம் முதல் தாம்பரம், கிழக்கு தாம்பரம், சிட்லப்பாக்கம், சேலையூர், செம்பாக்கம் என சுற்றுவட்டாரத்தை சேர்ந்தவர்கள் நடைப்பயிற்சி, தடகளம், கால்பந்து, கிரிகெட் என பல்வேறு விளையாட்டு விளையாடவும் இலவச பயிற்சி பெறவும் பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் தாம்பரம் ரெயில் முனைய விரிவக்கம் காரணமாக இந்த ரெயில்வே மைதானத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் கான்கீரிட் சீப்பர் கட்டைகள், ஜல்லிகளை ரெயில்வே நிர்வாக சேமித்து வைத்துள்ளது. மேலும் இந்த மைதானத்தையும் முழுமையாக தண்டவாளங்கள் அமைக்க […]

வருமான வரி ஏய்ப்பை கண்டுபிடிப்பது எப்படி? அதிகாரி பேட்டி

சென்னையை அடுத்த தாம்பரத்தில் வருமான வரித்துறையினர் சார்பில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் சென்னை-1 தலைமை வருமானவரி ஆணையாளர் ஜெயந்திகிருஷ்ணன், முதன்மை வருமானவரி ஆணையாளர் பிரேமோத் குமார் சிங் உள்ளிட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் கலந்துக்கொண்டு வியாபாரிகள், ரியல் எஸ்டேட், கட்டுமான நிருவனத்தினர் உள்ளிட்ட பலதரப்பு வருமான வரி செலுத்துவோர்களின் பிடித்தம் செய்யப்பட்ட தொகை திரும்ப பெருவது குறித்தும், பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது குறித்தும் எடுத்துரைத்தனர். நாட்டின் முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் வரிமான வரி செலுத்துவோரின் பங்கு […]

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக தாம்பரத்தில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்

பாலஸ்தீன தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேலை கண்டித்து தாம்பரம் வட்டார முஸ்லிம் ஐக்கிய ஜமாத் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தாம்பரம் வட்டார ஐக்கிய ஜமாத் தலைவர் எம் கே நாகூர் கனி தலைமையில் நடைபெற்றது. தாம்பரம் ஜும்மா பள்ளிவாசலில் இருந்து ஊர்வலமாக வந்த 5ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் சண்முகம் சாலை பாரதி திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் மதிமுக துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா விடுதலை […]

தாம்பரம் :மதுக்கடையை மூடக்கோரி பாஜக ஆர்ப்பாட்டம்

தாம்பரம் அடுத்த பீர்க்கன்காரணை, சீனிவாசா நகர் பகுதியில் மேம்பாலத்தின் கீழ் அரசு மதுபான கடை (கடை எண் : 4161) இயங்கி வருகிறது. இதன் அருகே தேவாலயம், கோவில்கள், பெருங்களத்தூர் ரயில் நிலையம், பள்ளி, அத்தியாவசிய தேவைக்கான கடைகள் என பல உள்ளது.மேலும் அவ்வழியாக பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், அலுவலகம் செல்லும் இளைஞர்கள், பெண்கள் என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தினமும் ரயில் நிலையம் சென்று ரயில்கள் மூலம் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.இவ்வாறு […]