கிழக்கு தாம்பரத்தில் சூப்பர் மார்க்கெட்டில் தீ விபத்து

தாம்பரம் அடுத்த அகரம் தென் பிரதான சாலையில் ஜெயராஜ் என்பவருக்கு சொந்தமான மூன்று அடுக்குகள் கொண்ட முருகன் பல் பொருள்அங்காடி இயங்கி வந்தது. இந்த நிலையில் இரவு மூடும்போது இரண்டாம் தளத்தில் திடீரென தீபற்றியது. இதனால் உள்ளே பணியாட்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். மேலும் தீயணைப்பு துறை, மின்சாரவாரியத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. இதனையடு தாம்பரம் தீயணைப்பு நிலையத்தில் இருந்து ஒரு வாகனத்தில் வந்த வீரர்கள் தீயை அணைக்க முற்பட்டனர். அதற்குள் தீ கொளுந்துவிட்டு எரிந்ததால் மேல் தளத்திற்கும் அதிகமாக […]

தாம்பரத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு விநியோகம்..!!

தாம்பரத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள குடியிருப்புகளுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. குமரன் நகர், சி.டி.ஓ. காலனி, எஃப்.சி.ஐ. நகர், மூவேந்தர் நகரில் விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் உணவு விநியோகம் செய்யப்பட்டது.

தாம்பரம் மண்டலம் 2க்கு உட்பட்ட பல்லாவரம் தெற்கு பகுதி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மழையால் பாதிக்க பட்ட மக்களை இ.எஸ்.பெர்னார்ட் பார்வையிட்டார்

தாம்பரம் மாநகராட்சி மண்டலம் 2க்கு உட்பட்ட பல்லாவரம் தெற்கு பகுதி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மழையால் பாதிக்க பட்ட மக்களை பாதுகாக்கும் சிறப்பு முகாமிற்கு நேற்று காலை பல்லாவரம் தெற்கு பகுதி செயலாளர் இ.எஸ்.பெர்னார்ட் அவர்கள் மற்றும் 27வது வார்டு மாமன்ற உறுப்பினர் T.K.கார்த்திகேயன் மகேஸ்வரி அவர்களுடன் சென்று அங்குள்ளவர்களை சந்தித்து நலம் விசாரித்தார்.அப்போது மாநகராட்சியால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காலை சிற்றுண்டி அவர்களுக்கு அளித்தனர்

மிக்ஜாம் புயல் மழை பாதிப்பால் செங்கல்பட்டு மாவட்டத்தில் 6 தாலுகாக்களுக்கு மட்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு .

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் புயல் காரணமாக கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இதன்காரணமாக இந்த 4 மாவட்டங்களிலும், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், சென்னை பொறுத்தவரை மீட்புப்பணிகள் தொடர்ந்து வரும் நிலையில், பெரும்பாலான பகுதிகளில் இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை. தேங்கிய மழைநீர் இன்னும் வடியாமலே இருக்கிறது. லட்சக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், […]

காஞ்சிபுரம்‌ மாவட்ட வெள்ளமிீட்பு பணிக்காக நியமிக்கப்பட்ட அமைச்சர்‌ முத்துசாமியை டிரக்டரில்‌ அமரவைத்து வெள்ள பாதிப்பு பகுதிகளை பார்வையிட வண்டலூர்‌-மிஞ்சூர் வெளிவட்ட சாலையில்‌ காங்கிரஸ்‌ சட்டமன்ற உறுப்பினர்‌ செல்வபெருந்தகை ஓட்டி சென்றார்‌.

மின்சார சப்ளை கொடுக்கபோலிஸ் பாதுகாப்புடன் செல்லும் மின்சார ஊழியர்கள்.

தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் புயல் வெள்ளம் பாதிப்பு கடுமையாக உள்ளது.குறிப்பாக முடிச்சூர் வரதராஜபுரம் போன்ற பகுதிகளை அடக்கிய மேற்கு தாம்பரம் தொடர்ந்து வெள்ளத்தில் தத்தளிக்கிறது. செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறக்கப்பட்டபோது முடிச்சூர் வரதராஜபுரம் பகுதிகளில் தண்ணீர் உள்ளே செல்ல முடியாமல் தேங்கி இருப்பதால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. கடந்த பல ஆண்டுகளாக இந்த பகுதி ஒவ்வொரு மழையின் போதும் வெள்ளத்தில் தான் மூழ்கி தவிக்கிறது. காரணம் இந்த பகுதியில் ஏராளமான வீடுகள் ஆக்கிரமிப்பு பகுதியில் கட்டப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. […]

தாம்பரம்‌ மாநகராட்சியின்‌ மாமன்ற கூட்டம்‌ மேயர்‌ வசந்தகுமாரி கமலகண்ணன்‌ தலைமையில்‌ (30.11.2023) மாநகராட்சி மைய அலுவலக மாமன்ற கூட்டரங்கில்‌ நடைபெற்றது

இக்கூட்டத்தில்‌ துணை மேயர்‌ கோ.காமராஜ்‌, மண்டலக்‌ குழு தலைவர்கள்‌, நிலைக்‌ குழு தலைவர்கள்‌ மாமன்ற உறுப்பினர்கள்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ ஆகியோர்‌ கலந்து கொண்டனர்‌.

அப்பாவிப் பெண்கள் பெயரில் கடன் வாங்கிய மோசடி பெண் இன்ஜினியர் கைது

சென்னை தாம்பரம் கண்ணடபாளையம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன், இவர் மனைவி சித்திரா(48) இவர்கள் வீட்டிற்கு வந்த Prefer Finance கடன் வசூலிப்பவர் சசிக்குமார் வாங்கிய கடனுக்கு ஏன் இரண்டுமாதமாக தவனை தொகை கட்டவில்லை என கேட்டுள்ளார். அதற்கு வெங்கடேசன்- சித்திரா தம்பதியினர் தங்கள் யாரும் தனியார் பைனாசில் கடன் வாங்க வில்லை என கூறியுள்ளனர். மேலும் இது குறித்து தம்பதி யோசித்து பார்த்தபோது கடந்த மூன்று மாதம் முன்பாக 7.8.23ம் தேதி அவர்களின் மகள் […]

கிழக்கு தாம்பரத்தில் மரம் வெட்டிய தொழிலாளி கீழே விழுந்து பலி

கிழக்கு தாம்பரம் ரெயில்வே குடியிருப்பில் மரம் வெட்டும்போது கிளை முறிந்து கீழே விழுந்த திருவண்ணாமலை மாவட்டம் அணியாலை காம்பம்பட்டு கிராமத்தை குமரேசன்(32) பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது உயிரிழப்பு. இறந்த மரம் வெட்டும் கூலித்தொழிலாளிக்கு மனைவி, ஒருமகள் உள்ளனர். பிரேத்தை கைப்பற்றிய சேலையூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்துவருகிறார்கள்.