சென்னை விமான நிலைய அவலம்

“இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரத்தின் நுழைவாயில் – சென்னை விமான நிலையத்திலிருந்து வெளியேறும் மக்களை இப்படித்தான் வரவேற்கிறார்கள்: எங்கும் போஸ்டர்கள் மயம். தெருவிளக்குகள் எரிவதில்லை. இதற்குக் சென்னை மாநகராட்சி, தாம்பரம் மாநகராட்சி அல்லது நெடுஞ்சாலைத்துறை என எந்த அமைப்பும் பொறுப்பேற்பதில்லை. இது மிகவும் மோசமானது.

படப்பை அருகே அதிகாலை மின்கசிவு காரணமாக பர்னிச்சர் தயாரிக்கும் கம்பெனியில் தீவிபத்து, பல லட்சம் மதிப்புள்ள மரப்பொருகள், இயந்திரம், மேற்கூரை எரிந்து நாசம்.

தாம்பரம்:- சென்னை தாம்பரம் அடுத்த படப்பை ஒரத்தூர் சாலையில் அபரஜித்தன் என்பவர் பர்னிச்சர் தயாரிக்கும் நிறுவனம் நடத்திவந்தார், டேபிள், சேர் உள்ளிட்ட மரப்பொருள்கள் தயாரித்துவந்த நிலையில் நேற்று வழக்கம்போல் கம்பெனியை மூடி சென்ற நிலையில் இன்று அதிகாலை 5 மணியளவில் தீடீர் தீபற்றி எரிந்துள்ளது, இங்கு இதில் மரப்பொருள்கள், இயந்திரங்கள், கம்பெனியில் இரும்பு கூரை உள்ளிட்டவை மல மலவென தீ பிடித்து எரிந்துந்துள்ளது, தகவல் அறிந்த படப்பை, ஒரகடம் தீயணைப்பு வாகனத்தில் வந்த வீரர்கள் தீயை முழுமையாக […]

தாம்பரம் அருகே லாரி இருசக்கர வாகன மோதல் – 3 பேர் பலி…

தாம்பரம்:- பல்லாவரத்தில் இருந்து, ஜல்லி ஏற்றி வந்த லாரி, ஈச்சங்காடு சந்திப்பில், கீழ்க்கட்டளை நோக்கி செல்ல, இடப்புறமாக திரும்பியது. அப்போது, கீழ்கட்டளையில் இருந்து, கோவிலம்பாக்கம் நோக்கி செல்ல, எதிர் திசையில் வந்த, இருசக்கர வாகனத்தின் மீது, எதிர்பாராத விதமாக லாரி மோதியது. இதில், இருசக்கர வாகனத்தில் வந்த கோகுல்ராஜ், தனாய் மண்டேல் இருவரின் மீதும், லாரியின் சக்கரம் ஏரி இறங்கியதில், சம்பவ இடத்திலேயே இருவரும் உடல் நசுங்கி பலியாகினர். இச்சம்பவம் குறித்து, பள்ளிக்கரணை போக்குவரத்து புலானாய்வு பிரிவு […]

தாம்பரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல்

தென்​மாவட்​டங்​களின் பல்​வேறு பகு​தி​களில் இருந்து சென்​னைக்கு வாக​னங்​கள் படையெடுத்​த​தால், செங்​கல்​பட்டு அருகே பரனூர் சுங்​கச்சாவடி பகு​தி​யில் நேற்று காலை முதல் கடும் போக்​கு​வரத்து நெரிசல் ஏற்​பட்​டது. இதுத​விர சிங்​கப்​பெரு​மாள்​கோ​வில், மறைமலை நகர், கூடு​வாஞ்​சேரி, கிளாம்​பாக்​கம், பெருங்​களத்​தூர், தாம்​பரம் உள்​ளிட்ட புறநகர் பகு​தி​களி​லும் ஓஎம்​ஆர், ஈசிஆரிலும் போக்​கு​வரத்து நெரிசல் ஏற்​பட்​டது. இதனால் இன்று காலை வரை செங்​கல்​பட்டு மாவட்ட மற்​றும் சென்னை மாநகர போலீ​ஸார் போக்​கு​வரத்தை சீரமைக்​கும் பணி​களில் ஈடு​பட்​டனர்.

சென்னையில் ஐஏஎஸ் பயிற்சி மாணவியிடம் செயின் பறிப்பு

சென்னை தாம்பரம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் சிவில் சர்வீஸ் பயிற்சி நிறுவனத்தில் கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த 22 வயது மாணவி ஒருவர் பயிற்சி பெற்று வருகிறார். இவர் நேற்று மதியம் வகுப்பு முடிந்து பேருந்து நிலையம் நோக்கி நடந்து சென்றுள்ளார். இந்து மிஷன் மருத்துவமனை அருகே தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, லுங்கி மற்றும் சட்டை அணிந்துகொண்டு சாதாரணமாக வந்த மர்ம நபர் ஒருவர், திடீரென பாய்ந்து வந்து, மாணவி அணிந்திருந்த 7 பவுன் தாலி […]

புத்தாண்டு கொண்டாட்டம்: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

1) காமராஜர் சாலையில் போர் நினைவிடம் முதல் கலங்கரை விளக்கம் வரை இன்று இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை வாகனப் போக்குவரத்து நிறுத்தப்படும். 2) அனைத்து மேம்பாலங்களிலும் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை போக்குவரத்துக்கு அனுமதி இல்லை. 3) மெரினா கடற்கரை உட்புற சாலையில் இன்று இரவு 7 மணி முதல் காலை 6 மணி வரை வாகனப் போக்குவரத்து மூடப்படும். வாகனங்கள் நிறுத்த […]

சென்னை : 502 ஆண்டுகள் பழமையான புனித தோமையார் மலை தேசிய பசிலிக்கா தேவாலையத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிராத்தனை

ஏழை எளியேரை நேசிக்கவே இயேசு பிரான் மண்ணில் அவதரித்தார். தமிழகம், இந்தியா, உலகம் முழுவதும் அமைதி நிலவி சகோதரத்துவம் பெருக, அருட்தந்தை ஏ.டி.மைக்கல் சிறப்பு பிராத்தனை செய்தனர். 502 ஆண்டுகள் பழமையான சென்னை புனித தோமையார் மலை தேசிய பசிலிக்கா தேவாலையத்தில் கிறிஸ்துமஸ் நள்ளிரவு சிறப்பு திருப்பலில் அருட்தந்தை ஏ.டி.மைக்கல் தலைமையில் நடைபெற்றது, ஆலைய வளாகம் முழுவதிலும் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு இயேசு பிறப்பை எல்.ஈ.டி திரையில் ஏ.ஐ தொழில்நுட்ப உதவியால் விடியோ காட்சி திரையிட்டுட்டு […]

கிழக்கு தாம்பரத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

கிழக்கு தாம்பரம் பாரதமாதா தெருவில் மழை நீர் கால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கு வசதியாக அந்தப் பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த கடைகள் விளம்பர தட்டிகள் போன்றவற்றை மாநகராட்சி அதிகாரிகள் பொக்லைன் என்ற உதவியுடன் இடித்து அகற்றினர்.பூட்டு போட்டு வைக்கப்பட்டிருந்த தள்ளு வண்டிகளையும் அகற்றி எடுத்துச் சென்றனர் இவற்றை அகற்றுவதற்கு அவகாசம் கொடுக்காமல் மாநகராட்சி நடவடிக்கை எடுத்ததால் வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர் . எதிர்ப்பையும் மீறி ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது

தாம்பரம் பாரதமாதா தெருவில், தேசிய உயர்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு 100 ஆண்டுகள் பழமையான மரங்கள் பள்ளி நிர்வாகத்தால் அகற்றப்படுகிறது.

தாம்பரம் பாரதமாதா தெருவில், தேசிய உயர்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு 100 ஆண்டுகள் பழமையான மரங்கள் பள்ளி நிர்வாகத்தால் அகற்றப்படுகிறது.மறைந்த முன்னாள் சபாநாயகர் முனு ஆதி ஏழை மாணவர்களுக்காக உருவாக்கிய பள்ளி, இது. பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை தேவை என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

தாம்பரம் மாநகராட்சியில் அதிமுகவினரின் வார்டுகள் புறக்கணிப்பா?

தாம்பரம் மாநகராட்சியில் அதிமுக வாடு உறுப்பினர்களின் பகுதிகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக கூறி கழக உறுப்பினர்கள் இன்று வெளிநடப்பு செய்தனர் தாம்பரம் மாநகராட்சியில் போதிய பொறியாளர்கள் இல்லாததால் பணிகள் மந்தமாக நடப்பதாக மாமன்ற கூட்டத்தில் ஆணையர் ஒப்புதல். தாம்பரம் மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் இன்று மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன் தலைமையில் நடைபெற்றது. அப்போது மாநகராட்சி முழுவதும் இப்ப பிரச்சனை தலை விரித்து ஆடுவதாக அதிமுக மற்றும் திமுக உறுப்பினர்கள் தொடர்ந்து குற்றச்சாட்டு முன்வைத்தனர். இதனால் பொதுமக்கள் கடும் […]