தேசியக்கொடி வண்ணத்தில் ஒளிரும் மாமல்லபுரம் வெண்ணை உருண்டைக்கல்

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை கண்டுகளிக்க நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். வருகிற 15-ந்தேதி சுதந்திர தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் மத்திய தொல்லியல் துறை நிர்வாகம் சுற்றுலா பயணிகளிடம் சுதந்திர தினத்தை பிரபலப்படுத் தும் வகையில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் உள்ள தொல்லியல் துறையின் பாரம்பரிய நினைவு சின்னங்களை தேசியக்கொடி நிறத்தில் ஒளிரும் வகையில் வண்ண விளக்குகளை பொருத்தி ஒளிருட்டப்பட்டி ருந்தது. அந்த வகையில் மாமல்லபுரம் […]

ஆந்திராவில் பெண்களுக்கு இலவச பஸ் பயணம்

ஸ்ரீ சக்​தி’ எனும் பெயரில் வரும் 15-ம் தேதி முதல் ஆந்​திர மாநில அரசு பேருந்​துகளில் பெண்​களுக்கு இலவச பயணத் திட்​டம் அமலாக​வுள்​ளது. ஆந்​திர மாநிலம் அமராவ​தி​யில் உள்ள தலைமைச் செயல​கத்​தில் நேற்று மாநில போக்​கு​வரத்து துறை அமைச்​சர் எம். ராம்​ பிர​சாத் ரெட்டி தலை​மை​யில் அதி​காரி​களின் ஆலோ​சனை கூட்​டம் நடை​பெற்​றது. இதில் வரும் 15-ம் தேதி முதல் அமல்​படுத்​தப்​போகும் பெண்​களுக்​கான இலவச பேருந்து பயணத் திட்​டம் குறித்து விரி​வாக விவா​திக்​கப்​பட்​டது.

நிமிஷா மரண தண்டனை ரத்து இல்லை

ஏமன் நாட்டில் கேரள மாநில செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவலை இந்திய வெளியுறவு அமைச்சக வட்டாரம் மறுத்துள்ளது. கேரளா​வின் இஸ்​லாமிய மதத் தலை​வர் அபுபக்​கர் முஸ்​லி​யாரின் ‘கிராண்ட் முப்தி’ அலுவலகம் உறுதிப்படுத்திய நிலையில் வெளியுறவு அமைச்சகம் மறுத்துள்ளது

காதல் கொலை எஸ் ஐ தம்பதி நீக்கம்

நெல்லையில் கவின் என்ற பொறியியல் பட்டதாரி கூலிப்படையால் கொல்லப்பட்டார் காதலர் விவகாரத்தில் காதலின் சகோதரர் ஆள் வைத்துக் கொண்டதாக குற்றச்சாட்டப்பட்டது அவர் கைது செய்யப்பட்டார் இந்த நிலையில் அவரது பெற்றோர் காவல் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர் இவர்கள் இருவரும் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் என்பது குறிப்பிடத்தக்கது

வளர்ப்பு நாய்க்கு குடியிருப்பு சான்றிதழ்

பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலை முன்னிட்டு வாக்​காளர் பட்​டியலில் சிறப்பு திருத்​தப் பணி மேற்கொள்ளப்படுகிறது. இதன்​படி 2003-ம் ஆண்​டுக்கு பிறகு வாக்​காள​ராக பதிவு செய்து கொண்​ட​வர்​கள், தாங்​கள் இந்​திய குடிமகன் என்​பதை நிரூபிக்க பிறப்பு சான்​று, பாஸ்​போர்ட், குடி​யிருப்பு சான்று போன்ற கூடு​தல் ஆவணங்​களை சமர்ப்​பிக்க வேண்​டிய கட்​டா​யம் எழுந்​து உள்​ளது. இந்த சூழலில் பிஹார் தலைநகர் பாட்​னா​வின் சவுரி பகு​தி​யில் ‘டாக் பாபு’ என்ற பெயரில் வளர்ப்பு நாய்க்கு குடி​யிருப்பு சான்றிதழ் வழங்​கப்​பட்டு உள்​ளது. டாக் பாபு​வின் […]

இந்தியர்கள் தாய்லாந்து செல்ல வேண்டாம் – மத்திய அரசு

இந்தியர்கள் அதிகம் சுற்றுலா செல்லும் நாடுகளில் முதன்மையானது தாய்லாந்து ஆகும் தற்போது அந்த நாட்டுக்கும் கபோரியாவுக்கும் மோதல் ஏற்பட்டு 15 பேர் பலியாகி விட்டனர் இதன் காரணமாக இந்தியர்கள் தற்போது தாய்லாந்து செல்ல வேண்டாம் என்று மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

மேகாலயாவில் திருமணத்திற்கு முன்பு எயிட்ஸ் பரிசோதனை.

இந்தியாவில் எய்ட்ஸ் பாதித்தவர்கள் அதிகம் வசிக்கும் மாநிலங்களில் மேகாலயா ஆறாவது இடத்தை பிடித்துள்ளது. இந்த பிரச்சனை காரணமாக மேகாலயாவில் திருமணத்திற்கு முன்பு ஆண்களுக்கு எய்ட்ஸ் பரிசோதனை நடத்தப்படும் என்று அந்த மாநில சுகாதார அமைச்சர் தெரிவித்தார்

இந்தியாவில் பாகிஸ்தான் விமானங்கள் பறக்க தடை நீடிப்பு

சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் முரளிதர மொஹோல், “இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் பறப்பதற்கான தடை ஆகஸ்ட் 23, 2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் வியூகம் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.” என தெரிவித்துள்ளார்.

தேனீயை ராணுவ வீரர்களாக்கும் சீனா..!

உலகின் மிக மெல்லிய மூளை கட்டுப்பாட்டு சிப்பை சீனாவிலுள்ள பீஜிங் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி உருவாக்கி உள்ளது. 74 மி.கி. எடை மட்டுமே கொண்ட இந்த சிப்பை தேனீக்களின் மூளையில் செலுத்தி அதனை தங்கள் விருப்பப்படி பறக்க வைத்து ராணுவத்தில் பயன்படுத்த விஞ்ஞானிகள் திட்டமிட்டு உள்ளனர்

பெற்றோர்களே உஷார்!

4ஆம் வகுப்பு சிறுமியை தூக்கி சென்று சீரழித்த `காம மிருகம்’ – நெஞ்சை பதறவைக்கும் அதிர்ச்சி வீடியோ? திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை அன்று, சாலையில் நடந்து சென்ற பத்து வயது சிறுமியை, வாயை மூடிக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த சிசிடிவி காட்சி, நெஞ்சைப் பதைபதைக்க வைக்கிறது.