கூட்டணியை இறுதி செய்ய அதிமுக பாஜக தீவிரம்
கூட்டணியை இறுதி செய்ய அதிமுகவும் பாஜகவும் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர். இன்று மத்திய மந்திரி பியூஸ் கோயல் தலைமையில் பாஜக தலைவர்கள் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து, அப்போது யாருக்கு எத்தனை தொகுதி என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் கூட்டணியில் மற்ற கட்சிகளையும் பேசி முடித்து பிரதமர் சென்னை வரும்போது மேடையில் ஏற்றுவதற்காக ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
புதுச்சேரியில் முதன்முறையாக மாத உதவித் தொகை ரூபாய் பத்தாயிரத்துடன் ஓராண்டு “டிஜிட்டல் பயிற்சி திட்டம்”
புதுச்சேரியில் முதன்முறையாக மாத உதவிதொகை ரூ.10 ஆயிரத்துடன் 12 மாதங்களுக் கான கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப படிப்பு முடித்த பட்டதாரிகளுக்கான ‘டிஜிட்டல் பயிற்சித் திட்டம்’ தொடங்கப்பட்டுள்ளது. இதனை பொதுப்பணி மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் லட்சமிநாராயணன் தொடங்கி வைத்தார்.
சட்டசபையில் 4-வது ஆண்டாக கவர்னர் மோதல்
கடந்த 3 ஆண்டுகளைப் போலவே, தமிழ்நாடு அரசின் உரையை வாசிக்காமல் சட்டமன்றத்தில் இருந்து வெளியேறினார் ஆளுநர் ரவி. அவையின் தொடக்கத்தில் தேசிய கீதம் பாட வேண்டும் என ஆளுநர் கூறவே, தொடக்கத்தில் தமிழ்தாய் வாழ்த்து பாடுவது மட்டுமே மரபு என சபாநாயகர் விளக்கம் அதனை ஏற்க மறுத்து அவையில் இருந்து ஆளுநர் வெளியேறினார்.
தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி -புதிய தலைவர் உறுதி
பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைவராக நிதின் நவீன் இன்று அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டார். அவர் அளித்த பேட்டியில் தமிழ்நாடு கேரளா மேற்குவங்கம் குறிப்பிட ஐந்து மாநிலங்களிலும் பாரதிய ஜனதா ஆட்சி அமைக்கும். கார்த்திகை தீபத்தை எதிர்ப்பவர்களுக்கும் ராமர் பாலத்தை மறுப்பவர்களுக்கும் அரசியலில் இடமில்லை மரபுகளை தடுக்க முயற்சிக்கும் சக்திகளை எதிர்கொள்வது அவசியம் என்று கூறியுள்ளார்.
சபரிமலை தங்கம் திருட்டு தமிழகத்தில் அமலாக்க பிரிவு சோதனை
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் திருடப்பட்டதன் மூலம் கிடைத்த சட்டவிரோத வருமானத்தை பணமோசடி செய்திருக்கலாம் என்ற அடிப்படையில் கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மொத்தம் 21 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
பெண்ணுடன் உல்லாசம்:கர்நாடகா டிஜிபி சஸ்பெண்ட்
கர்நாடக மாநில போலீஸ் டிஜிபி ராமசந்திர ராவ், தனது அலுவலகத்தில் பணியில் இருந்தபோது பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது. இது சர்ச்சையான நிலையில், அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது கர்நாடக மாநில அரசு. பெண்ணுடன் அவர் இருக்கும் சுமார் மூன்று வீடியோக்கள் ஒரே கிளிப்பாக வெளியானது. இது சமூக வலைதளத்தில் அதிகளவில் பகிரப்பட்டது. ஏற்கெனவே, டிஜிபி ராமசந்திர ராவின் வளர்ப்பு மகளான நடிகை ரன்யா ராவ், தங்கம் கடத்திய […]
மோடி கூட்டத்தில் தினகரன் பங்கேற்பு
23ஆம் தேதி, பிரதமர் மோடி தலைமையில் நடக்கும் NDA பொதுக்கூட்டத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பங்கேற்கிறார். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அன்று அதிகாரப்பூர்வமாக இணைகிறார். அந்த கூட்டத்திற்கு அமமுக தொண்டர்களை அழைத்து வருமாறு மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவு.
எடப்பாடி டெல்லி பயணம்
பாமக உடன் தொகுதி பங்கீட்டை முடிவு செய்த எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை டெல்லி செல்கிறார். நாளை அவர் பாஜக தலைவர்கள் சந்தித்து பேசுகிறார் அப்போது தொகுதி பங்கீடு முடிவாகும் என்று தெரிகிறது.
தங்கம் சவரனுக்கு ரூ.320, வெள்ளி ரூ.12,000 உயர்வு
தங்கம்ஒரு கிராம் ரூ.40 உயர்ந்து ரூ.12,870க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.12,000 உயர்ந்த நிலையில், ரூ.2,83,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது
தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து மேற்கு – வடமேற்கு திசையில் நகரும்.