ஐபிஎல் தொடர் மூலம் பிசிசிஐ சம்பாதித்தது எவ்வளவு தெரியுமா?
ஐபிஎல் 2025 போட்டி தொடரின் மூலமாக பிசிசிஐக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக வருமானம் கிடைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிசிசிஐயின் பெரும்பான்மையான வருமானம் ஒளிபரப்பு கட்டணத்தில் தான் உள்ளது. நடப்பு ஐபிஎல் தொடருக்கு ஒளிபரப்பு கட்டணமாக 9,678 கோடி ரூபாயை வயாகாம் 18 நிறுவனத்தின் மூலமாக பிசிசிஐ பெற்றுக் கொண்டது. டைட்டில் ஸ்பான்சர்ஷிப் வருவாய் மூலம் இந்த தொடரில் 500 கோடி ரூபாயை பெற்றது பிசிசிஐ. 5 ஆண்டுகளுக்கு டைட்டில் ஸ்பான்சர்சிப் 2500 கோடி ரூபாயை […]
கூட்டணி மாறுவார் திருமா – மத்திய மந்திரி முருகன் தகவல்
மத்திய மந்திரி முருகன் கூறியதாவது..தமிழகத்தில் 2026-ல் தேசிய ஜனநாயகக் கூட்டணி தமிழகத்தில் பெரும் வெற்றி பெறும். ஆனால், திருமாவளவன் திமுக கூட்டணியில் இருப்பாரா என தெரியவில்லை. வேறு கூட்டணிக்குச் செல்லலாமா என தடுமாற்றத்தை வெளிப்படுத்தும் விதத்தில் அவரது பேச்சு உள்ளது. என்றார் அவர்
உக்ரைன் மீது 500 டுகோன் ஏவி ரஷ்யா தாக்குதல்
மூன்று ஆண்டுகளாக தொடரும் போரில் மிகப்பெரிய இரவு நேர ட்ரோன் தாக்குதலாக, உக்ரைன் மீது ரஷ்யா சுமார் 500 ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியுள்ளது என உக்ரைன் விமானப்படை கூறியது. உக்ரைன் மீது நேற்று இரவு 479 ட்ரோன்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் திங்கள் வரை 20 ஏவுகணைகள் பல்வேறு பகுதிகளில் ஏவப்பட்டதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது. ரஷ்யா முக்கியமாக மத்திய மற்றும் மேற்குப் பகுதிகளை குறிவைத்து தாக்கியதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது
எவரெஸ்ட் சிகரத்தை சுற்றி ராஜ நாகங்கள்
இமயமலையில் உள்ள எவரெஸ்ட் சிகரம் உலகிலேயே உயரமான சிகரத்தில் ஒன்றாகும்.தற்போது எவரெஸ்ட் சிகரத்தில் இருந்து 160 கிலோமீட்டர் சுற்று வட்டாரத்தில் கடந்த ஒரு வாரத்தில் 10 ராஜ நாகங்கள் பிடிபட்டுள்ளன.வழக்கமாக காட்டு பகுதியில் இருக்கும் இவை இவ்வாறு தொடர்ந்து பிடிபடுவது காலநிலை மாற்றத்தை குறிக்கிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்
தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் -அமித்ஷா உறுதி
மதுரையில் நடந்த பாஜக மாநாட்டில் மத்திய மந்திரி அமித்ஷா பேசியதாவது 2025 ம்ஆண்டு மிகப்பெரிய சாதனை படைத்தோம். டெல்லியில் கெஜ்ரிவால் ஆட்சியை முடித்து, 27 ஆண்டுக்கு பிறகுெல்லியில் பா.ஜ.க, ஆட்சி அமைத்து உள்ளது. 2025 ல் டெல்லியில் எப்படி ஆட்சி அமைத்தோமோ, 2026ல் தமிழ்நாட்டி ஆட்சி அமைப்போம். 2026 ல் நடக்கும் தேர்தலில் தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் பா.ஜ., கூட்டணி ஆட்சி அமைக்கும் என்பதை உறுதியாக தெரிவித்து கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார் இந்த கூட்டத்திற்கு அண்ணாமலை […]
மியான்மர் நாட்டில் பூகம்பம்
மியான்மர் நாட்டில் அதிகாலை 3.56 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.8ஆக பதிவாகியுள்ளது
வேகமெடுக்கும் கொரோனா.. 59 பேர் பலியான சோகம்
வீரியம் குறைவான கொரோனா என அரசு விளக்கம் அளித்து வரும் நிலையில், பலி எண்ணிக்கை உயர்வதால் லாக்டவுன் அச்சம் ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 391 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒருவர் உள்பட புதிதாக 4 பேரும், நடப்பாண்டில் மொத்தமாக 59 பேரும் உயிரிழந்தது மத்திய சுகாதாரத்துறை அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது
திமுக மீது உதயநிதி அதிருப்தி.. ஆர்.பி. உதயகுமார் தாக்கு
உதயநிதி ஸ்டாலின் அதிருப்தியில் இருப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் விமர்சித்துள்ளார். திமுக துணை பொதுச் செயலாளர்பதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உதயநிதி இருந்ததாகவும், ஆனால் அப்பதவி அளிக்கப்படாததால் அவர் அதிருப்தியில் உள்ளார் என்றும் ஆர்.பி. உதயகுமார் கூறியுள்ளார். குடும்பத்தில் நிலவும் அதிருப்தியை மறைக்கவே, தொகுதி மறுசீரமைப்பு குறித்து ஸ்டாலின் பேசுவதாகவும் சாடியுள்ளார்.
அதிமுகவுடன் கூட்டணி: டிடிவி தினகரன்
2026 தேர்தலில் அதிமுகவுடன் அமமுக கூட்டணி அமைத்திருப்பதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தங்கள் கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை என்று கூறியுள்ள அவர், அமமுகவின் உயரம் என்னவென்பது தங்களுக்கு தெரியும், அதையறிந்து உரிய இடங்களை கூட்டணியில் பெற்று போட்டியிடுவோம் என்றும் டிடிவி தினகரன் குறிப்பிட்டார். 2026 தேர்தலில் பொது எதிரியான திமுகவை வீழ்த்துவதே தங்களது குறிக்கோள் என்றும் கூறினார்.
.எங்கள் கூட்டணிக்குதான் அதிமுக வந்துள்ளது: டிடிவி’
அதிமுக கூட்டணிக்கு தங்கள் கட்சி செல்லவில்லை, தங்கள் கூட்டணிக்கே அதிமுக வந்துள்ளது என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். அம்மாவின் தொண்டர்களைதான் தாங்கள் அழைத்ததாகவும், ஆனால் அம்மாவின் கட்சியே தங்களிடம் வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பாஜக கூட்டணியின் வாக்கு வங்கி கணிசமாக அதிகரித்துள்ளதாகவும், வரும் தேர்தலில் தங்கள் கூட்டணி வெல்லும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.