இஸ்ரேலில் இருந்து 160 இந்தியர்கள் மீட்பு
இஸ்ரேலில் இருந்து சுமார் 160 இந்தியர்கள் பேருந்துகள் மூலமாக ஜோர்டான் நாட்டு எல்லைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர் இஸ்ரேல், ஜோர்டானில் உள்ள இந்திய தூதரகங்கள் இணைந்து `ஆப்ரேஷன் சிந்து’ நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன கார்டன் நாட்டில் தங்க வைக்கப்பட்டுள்ள இந்தியர்கள் விரைவில் விமானம் மூலம் இந்தியா அழைத்து வரப்பட உள்ளனர்
பதுங்கு குழிகளுக்குள் செல்ல இஸ்ரேல் வேண்டுகோள்
அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து ஈரான் ராணுவம் இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி வருகிறது இதன் காரணமாக மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும் பதுங்கு குழிகளுக்குள் சென்று பாதுகாப்பாக இருக்க வேண்டும் என இஸ்ரேல் தனது நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது
ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக ஈரான் மிரட்டல் -பெட்ரோல் விலை உயரும்
அமெரிக்க தாக்குதலால் கோபம் அடைந்துள்ள ஈரான் உலகளவில் 20 சதவீத கச்சா எண்ணெய் போக்குவரத்து நடைபெறும் ஹோமுஸ் ஜலசந்தியை மூடப்போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத் மற்றும் ஈராக் போன்ற பெட்ரோலியப் பொருட்கள் ஏற்றுமதி செய்யும் நாடுகள் எல்லாம் ஈரான் மற்றும் ஓமன் இடையே உள்ள குறுகலான ஹோமுஸ் ஜலந்தியைத்தான் பயன்படுத்துகின்றன உலகளாவிய எண்ணெய் ஏற்றுமதியில் 20 சதவீதம் இந்த வழித்தடம் வழியாகத்தான் நடைபெறுகிறது. நாள் ஒன்றுக்கு 18 மில்லியன் பேரல் […]
அமலாக்க துறைக்கு வீட்டை சீல் வைக்க அதிகாரம் இல்லை
திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி சீல் வைக்கப்பட்ட வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. வீடு, அலுவலகங்கள் பூட்டியிருந்தால் சீல் வைக்க தங்களுக்கு அதிகாரமில்லை என ED ஒப்புக்கொண்டது. சீல் வைத்த நோட்டீசை திரும்பப் பெற்றுக் கொள்வதாகவும், ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரன் வீடுகளில் பறிமுதல் செய்த பொருட்களை திருப்பித் தர ஒப்புதல் அளித்தது. இதனை தொடர்ந்து இடைக்கால மனு மீதான தீர்ப்பை […]
பல்வேறு காரணங்களால் ஒரே நாளில் மட்டும், ஏர் இந்தியாவின் 787-8 ட்ரீம்லைனர் விமானங்களின் *6 சர்வதேச சேவைகள் ரத்து செய்யப்பட்டன்
பல்வேறு காரணங்களால் ஒரே நாளில் மட்டும், ஏர் இந்தியாவின் 787-8 ட்ரீம்லைனர் விமானங்களின் *6 சர்வதேச சேவைகள் ரத்து செய்யப்பட்டன் டெல்லி – துபாய், டெல்லி – வியன்னா, டெல்லி – பாரீஸ், அகமதாபாத் [-லண்டன், பெங்களூரு – லண்டன், லண்டன் – அமிர்தரசஸ் சேவைகள் ரத்து செய்யப்பட்டன
கலைஞர் டிவி பொறுப்பில் இன்ப நிதி
முதல் மந்திரி ஸ்டாலின் பேரனும் துணை முதல்வர் உதயநிதி மகனுமான இன்ப நிதி வெளிநாட்டில் படித்து விட்டு சென்னை திரும்பி விட்டார் அவருக்கு கலைஞர் டிவியில் நிர்வாக பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது அவர் தினசரி காலையிலிருந்து மாலை வரை அலுவலகம் வந்து பணி செய்கிறார்.விரைவில் அவரும் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
விமான விபத்து: டி.என்.ஏ மூலம் 99 உடல் அடையாளம் கண்டுபிடிப்பு
குஜராத்விமான விபத்தில் இறந்தவர்களுடைய உடல்நிலை அடையாளம் கண்டுபிடிக்கும் பணி நடந்து வருகிறது இது குறித்து டாக்டர் ரஜ்னிஷ் படேல் கூறும்போது, ‘‘டிஎன்ஏ பரிசோதனையில் இதுவரை 99 உடல் பாகங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதுவரை 87 பேரின் அடையாளம் தெரியவந்துள்ளது. இதில் 64 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன’’ என்றார்.
அதிமுக பாஜக கூட்டணி ஆட்சியில் எடப்பாடி தான் முதல்வர் – நைனார் நாகேந்திரன் உறுதி
திருவாரூரில் பாஜக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இதில் கட்சியின் தலைவர் நைனார் நாகேந்திரன் கலந்து கொண்டார்.அந்தக் கூட்டத்தில் அவர் பேசும்போது தமிழகத்தில் அடுத்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக பாரதிய ஜனதா கூட்டணி ஆட்சியை ஏற்படும். எடப்பாடி முதலமைச்சர் ஆக இருப்பார் என்று தெரிவித்தார்
அகமதாபாத் விமான விபத்தில் 274 பேர் உயிரிழப்பு.
அகமதாபாத் விமான விபத்தில் பலி எண்ணிக்கை 274 ஆக உயர்வு. ஏற்கனவே விமானத்தில் பயணித்த 241 பேர் உயிரிழந்த நிலையில், மருத்துவக் கல்லூரி மீது மோதியதில் மாணவர்கள் 10 பேர், பொதுமக்கள் என 33 பேர் உயிரிழப்பு என அதிகாரப்பூர்வ தகவல்.
கயிலாய யாத்திரை மீண்டும் ஆரம்பம்
5 வருடங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கயிலாய யாத்திரை மீண்டும் ஆரம்பிக்கப்படுகிறது.* முதல் தவணையாக 50 பக்தர்கள் வரும் 15ம் தேதியன்று கேங்டாக்கிலிருந்து நாதுலா கணவாய் வழியாக கயிலாய தரிசனம். ஒரு வழியாக இந்தியா – சீனா இடையேயான நீண்ட பேச்சு வார்த்தைகளுக்கு பிறகு இந்த வருடத்திலிருந்து கயிலாய நாதர் தரிசனம்.