இந்திய வீரர் ஹர்ஷல் படேலை ₹11.75 கோடிக்கு ஏலம் எடுத்தது பஞ்சாப் கிங்ஸ் அணி
ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக ₹20.5 கோடிக்கு பேட் கம்மின்ஸை ஏலத்தில் எடுத்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி

கடந்த ஆண்டு சாம் கரணை ₹18.5 கோடிக்கு பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்ததே அதிகபட்ச தொகையாக இருந்தது
மீண்டும் சென்னை அணியில் ஷர்துல் தாக்கூர்.. ₹4 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது சி.எஸ்.கே அணி
அடிப்படை விலையான ₹1.5 கோடிக்கு இலங்கை சுழற்பந்து வீச்சாளர் ஹசரங்காவை ஏலத்தில் எடுத்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!
இங்கிலாந்து வீரர் ஹாரி ப்ரூக்கை ₹4 கோடிக்கு ஏலத்தில் வாங்கியது டெல்லி கேபிடல்ஸ் அணி
ஐபிஎல் 2024 மினி ஏலத்தில் முதல் வீரராக மே.இ.தீவுகள் வீரர் ரோவ்மன் பவலை ₹7.4 கோடிக்கு வாங்கியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி
ஐபிஎல் 2024 மினி ஏலத்தின் முதல் சுற்றில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்தை வாங்க எந்த அணியும் முன்வரவில்லை
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் கடும் போட்டியிட்டு ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட்டை ரூ.6.80 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது சன்ரைஸர்ஸ் ஹைதராபாத்
முதல் டி20 போட்டி மழையால் ரத்து

இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி மழையால் ரத்து. மழை நிற்பதற்காக காத்திருந்த நிலையில், டாஸ் போடாமலே ஆட்டம் ரத்து என அறிவிப்பு
வெறும் 43 பந்தில் 193 ரன்கள்: டி10 கிரிக்கெட்டில் இமாலய சாதனை

பார்சிலோனா: ஐரோப்பியன் கிரிக்கெட் ‘டி10’ தொடரில் ஹம்சா சலீம் தார் என்பவர் வெறும் 43 பந்துகளில் 193 ரன்கள் விளாசி சாதனை படைத்துள்ளார். ஸ்பெயினின் பார்சிலோனாவில் ஐரோப்பியன் கிரிக்கெட் டி10 தொடர் நடக்கிறது. அதில் கடந்த டிச.,5ம் தேதி கேடலுன்யா ஜாகுவார் (சி.ஜே.ஜி) அணியும், சோஹல் ஹாஸ்பிடல்டெட் (எஸ்.ஓ.எச்) அணியும் மோதின. 10 ஓவர்கள் கொண்ட இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கேடலுன்யா அணிக்கு ஹம்சா சலீம் தார் மற்றும் யாசிர் அலி ஆகியோர் துவக்கம் தந்தனர். […]