உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர் விராட் கோலி என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி புகழாரம் சூட்டியுள்ளார்

விராட் கோலிக்கும் தனக்கும் இடையிலான நட்பு குறித்து நிகழ்ச்சி ஒன்றில் தோனி மனம் திறந்தார். கோலியுடன் இணைந்து விளையாடியபோது அதிகமாக 2 மற்றும் 3 ரன்களை தாங்கள் எடுப்போம் என்றும் கோலியுடன் இணைந்து ஆடுவது ஜாலியாக இருக்கும் என்றும் தோனி கூறியுள்ளார்.
டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி: இந்தியா- தென் ஆப்ரிக்கா மோதல்

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியா- தென் ஆப்ரிக்கா அணிகள் இன்று மோதுகின்றன. நடப்பு தொடரில் தோல்வியே சந்திக்காமல் இந்தியா, தென் ஆப்ரிக்க அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம். கடந்தாண்டு 50 ஓவர் உலகக்கோப்பையை நூலிழையில் தவறவிட்ட இந்தியா சாம்பியன் ஆகுமா என எதிர்பார்ப்பு. டி20 உலகக்கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.20கோடி, 2ஆம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.10 கோடி பரிசாக கிடைக்கும்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஜூன் 28ம் தேதி முதல் 1ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையேயான மகளிர் டெஸ்ட் போட்டியை பார்க்க அனுமதி இலவசம் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவிப்பு

இதேபோல், ஜூலை 5, 7, 9 ஆகிய தேதிகளில் நடைபெறும் டி20 போட்டிகளுக்கான டிக்கெட்-ஐ, ஜூன் 29ம் தேதி PAYTM insider இணையத்தில் பெறலாம் எனவும் அறிவிப்பு. இந்த டிக்கெட் விலை ₹150 என நிர்ணயம்.
டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்றில் இந்தியா – வஙகதேசம் இன்று பலப்பரீட்சை!..

இரவு 8 மணிக்கு ஆண்டிகுவா மைதானத்தில் போட்டி நடைபெறுகிறது
டி20 உலகக்கோப்பை தொடரில், சூப்பர் 8 சுற்று போட்டிகள் இன்று முதல் தொடக்கம்

முதல் போட்டியில் அமெரிக்கா, தென் ஆப்ரிக்கா அணிகள் பலப்பரீட்சை
2026ல் இந்தியா, இலங்கையில் நடைபெறவுள்ள டி20 உலக கோப்பைக்கு நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பை இழந்த முன்னணி அணிகள்

ஐசிசி டி20 தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் உள்ள நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை அணிகள் நடப்பு டி20 உலக கோப்பை தொடரில் லீக் சுற்றிலேயே வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை தந்துள்ளன. சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறாததால், 2026ல் நடைபெறவுள்ள டி20 உலக கோப்பைக்கு நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பை இந்த அணிகள் இழந்ததுள்ளன. தகுதிச் சுற்று போட்டிகளில் விளையாடி வென்றால் மட்டுமே 2026 டி20 உலக கோப்பையில் விளையாட முடியும்.
தனது முதல் டி20 உலகக் கோப்பை தொடரிலேயே சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளது அமெரிக்கா அணி

அமெரிக்கா, அயர்லாந்து இடையிலான நேற்றைய போட்டி மழையால் ரத்தானதால், குரூப் A பிரிவில் இடம்பெற்றுள்ள அமெரிக்க அணி 5 புள்ளிகளுடன் 2 இடம்பிடித்தது. இதன் மூலம் 2026ல் இந்தியாவில் நடைபெறவுள்ள உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் வாய்ப்பையும் பெற்றுள்ளது. அமெரிக்க அணி தேர்வு பெற்றதால் பரிதாபமாக டி20 உலக கோப்பையில் இருந்து வெளியேறியது பாகிஸ்தான்.
உலககோப்பை கால்பந்து தகுதிப்போட்டியில் சர்ச்சை:விதியை மீறி கோல் அடித்து ஏமாற்றியதா கத்தார்..?

உலககோப்பை கால்பந்து தகுதிப்போட்டியில், இந்தியா-கத்தார் இடையேயான ஆட்டத்தில் எல்லைக் கோட்டை தாண்டி சென்ற பந்தை மீண்டும் உள்ளே கொண்டு வந்து கத்தார் வீரர்கள் கோல் அடித்ததால் பரபரப்பு. விதிப்படி தவறு என்றாலும், ரெஃப்ரீ கத்தாருக்கு சாதகமாக நடந்து கொண்டது சர்ச்சையாகியுள்ளது. 73வது நிமிடத்தில், கோட்டுக்கு வெளியே சென்ற பந்தை அல் ஹசன் உள்ளே தள்ளி விட, அய்மென் கோல் அடித்ததால் 2-1 என்ற கோல் கணக்கில் கத்தார் வெற்றி பெற்றதாக அறிவிப்பு. இப்போட்டியில், கால்பந்தில் ரிவ்யூ பார்க்கும் […]
உலகக் கோப்பை தகுதிச் சுற்று வாய்ப்பை இழந்தது இந்தியா

கத்தாரிடம் தோல்வியடைந்த இந்திய அணி பிஃபா உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் இருந்து வெளியேறியது. தோஹாவில் நடந்த போட்டியில் கத்தாரிடம் 1-2 என்ற கணக்கில் தோல்வியைத் தழுவியது இந்திய அணி. தகுதிச் சுற்று ஆட்டத்தின் முதல் பாதியில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது.
இந்திய கால்பந்து அணிக்கு புதிய கேப்டன் நியமனம்

சுனில் சேத்ரி ஓய்வு பெற்றதை அடுத்து, இந்திய கால்பந்து அணியின் புதிய கேப்டனாக கோல் கீப்பர் குர்ப்ரீத் சிங் சந்து நியமிக்கப்பட்டார். இன்று இரவு 9 மணிக்கு தோஹாவில் நடைபெறும் உலக கோப்பை தகுதிச் சுற்று போட்டியில் பலம் வாய்ந்த கத்தாரை எதிர்கொள்கிறது இந்தியா.