ஐபிஎல் 2026-ல் தோனி விளையாடுவார்! சென்னை சூப்பர் கிங்ஸ் அறிவிப்பு!
ஐபிஎல் 2026 தொடரில் மகேந்திர சிங் தோனி விளையாடுவார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் அறிவித்துள்ளார். இந்த தகவல் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் தோனி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
சாம்பியன் பட்டம் என்ற கிரிக்கெட் அணிக்கு 125 கோடி பரிசு
உலகக்கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டியில் சாம்பியனான இந்திய அணிக்கு ரூ. 40 கோடி பரிசுத்தொகை வழங்கப்படவுள்ள நிலையில், பிசிசிஐ தரப்பில் ரூ.125 கோடி பரிசாக வழங்கப்படக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, வெற்றிபெற்ற இந்திய அணியின் வீராங்கனைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.இந்தப் போட்டியை தொலைக்காட்சி மூலம் 21 கோடி பேர் பார்த்துள்ளனர்
மகளிர் உலகக் கோப்பை! முதல்முறை பட்டம் வென்ற இந்தியா!
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி அபார வெற்றி அடைந்து சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை இறுதி ஆட்டம், ஞாயிற்றுக்கிழமை மாலை நவி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் கிரிக்கெட் திடலில் நடைபெற்றது. இந்தப் போட்டியில், டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து, களமிறங்கிய இந்திய அணியின் வீராங்கனைகள் 50 ஓவர்கள் முடிவில், 7 விக்கெட்டுகளை இழந்து […]
ரோனோல்டா மகன் போர்ச்சுக்கல் அணியில் சேர்ப்பு
16 வயதுக்குட்பட்டோர் போர்ச்சுகல் கால்பந்து அணியில், கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் மகன் இடம்பெற்று விளையாடினார். கிறிஸ்டியானோ ரொனால்டோவின் மூத்த மகன் கிறிஸ்டியானோ டாஸ் சான்டோ என்று அழைக்கப்படும் கிறிஸ்டியானின்ஹோ கால்பந்து பயிற்சி பெற்று உள்ளூர் போட்டிகளில் பங்கேற்று வந்தார்.
பந்து தாக்கியதில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் உயிரிழப்பு
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இளம் வீரர் உயிரிழந்ததைத் தொடர்ந்து சர்வதேச 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலிய அணியினர் கருப்புப் பட்டை அணிந்து விளையாடினர். இந்தப் போட்டி மெல்பர்ன் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. மெல்பர்ன் நகரைச் சேர்ந்த 17 வயது இளம் வீரரான பென் ஆஸ்டின் என்பவர், பெர்ன்ட்ரீ கல்லி கிரிக்கெட் கிளப்பில் வலைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவரது கழுத்துப் பகுதியில் பந்து அதிவேகமாகத் தாக்கியது. இதில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 2 நாள் தீவிர […]
ஆசிய விளையாட்டு சாதனை படைத்த தமிழக வீராங்கனை
பஹ்ரைன் நாட்டில் நடைபெற்று வரும் 3வது இளையோர் ஆசிய விளையாட்டு போட்டியில் திருநெல்வேலி மாவட்டம் நாரணமாள்புரம் விளையாட்டு கழக வீராங்கனை எட்வினா ஜெய்சன் 400 மீட்டர் ஓட்ட போட்டியில் இரண்டாம் இடம் வெள்ளி பதக்கம் வென்றார்
ஷிகர் தவானுக்கு சம்மன்
சுரேஷ் ரெய்னாவை தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஷிகர் தவானுக்கும் அமலாக்கத்துறை சம்மன். சட்டவிரோத சூதாட்ட செயலிகளை ஊக்குவிக்கும் விளம்பரங்களில் நடித்த புகாரில் நேரில் ஆஜராக நோட்டீஸ்.
ஆன்லைன் விளையாட்டு. பொதுமக்களுக்கு ரூ.20,000 கோடி இழப்பு
ஆன்லைன் மூலமாக பணம் கட்டி விளையாடும் விளையாட்டுகள் சமூகத்துக்கு ஒரு பெரிய பிரச்சினையாக மாறி வருகிறது. அதனால்தான் தடையால் ஏற்படும் வருவாய் இழப்பை விட மக்களின் நலனுக்கு முன்னுரிமை அளிக்க முடிவு செய்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 45 கோடி பேர் ரூ.20,000 கோடி பணத்தை ஆன்லைன் விளையாட்டுகள் மூலம் இழப்பதாக அரசு மதிப்பீ |டுகள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் இது சம்பந்தப்பட்ட தீய விளைவுகள் குறித்து கவலை எழுப்பியுள்ளனர் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
34 ஆண்டுக்குப் பிறகு கிரிக்கெட்டில் பாகிஸ்தானை வென்ற மேற்கு இந்திய அணி
மேற்கு இந்தியத் தீவுகள் அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை 2-1 என கைப்பற்றி கோப்பையை வென்றது. முதல் போட்டியில் பாகிஸ்தான் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. 2-வது போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்திருந்தது.பாகிஸ்தானுக்கு எதிராக இருதரப்பு ஒருநாள் போட்டி தொடரை 34 வருடங்களுக்கு பிறகு தற்போதுதான் வென்றுள்ளது மேற்கு இந்தியத் தீவுகள் அணி. கடைசியாக அந்த அணி பாகிஸ்தானுக்கு எதிரான […]
ஒரே ஓவரில் 45 ரன்கள் குவித்து ஆப்கானிஸ்தான் வீரர் சாதனை
இ.சி.எஸ். 10 ஓவர் கிரிக்கெட் போட்டி இங்கி லாந்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன் தினம் இரவு நடந்த ஆட்டத்தில் லண்டன் கவுண்டி, கில்ட்போர்ட் அணியை எதிர் கொண்டது. இதில் முதலில் பேட் செய்த லண் டன் கவுண்டி அணி 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 226 ரன்கள் குவித்தது. 28 பந்து களில் சதத்தை எட்டிய லண்டன் கவுண்டி அணி வீரர் உஸ்மான் கானி (ஆப்கானிஸ் தான்) 153 ரன்களுடன் (43 பந்து, 11 […]