2வது போட்டி டிரா: தொடரை வென்றது இந்தியா

இந்தியா – மேற்கிந்திய தீவுகள் இடையேயான 2வது டெஸ்டின் கடைசி நாள் ஆட்டம் மழையால் முழுவதும் தடைபட்டது. இதனால் போட்டி டிரா ஆனதாக அறிவிக்கப்பட்டது. முதல் போட்டியில் வெற்றி பெற்றதால் இந்தியா 1-0 கணக்கில் கோப்பை வென்றது. சிராஜ் ஆட்டநாயகன் விருது பெற்றார். ஸ்கோர்: IND 1st In-438 & 2nd In-181/2 d. WI 1st In-255 & 2nd In-76/2.

ரிஷப் பண்ட் இடத்தை நிரப்புவாரா இஷான் கிஷன்?

இஷான் கிஷன் அறிமுக டெஸ்ட் போட்டியில் அரை சதம் (34 பந்தில் 52 ரன்) அடித்து அசத்தினார். அதிரடியாக ஆடுவதாலும், விக்கெட் கீப்பிங்கில் சிறப்பாக செயல்படுவதாலும் இவரால் ரிஷப் பண்ட் இடத்தை நிரப்ப முடியும் என்ற கருத்துகள் உலா வருகின்றன. ஆனால் பல இன்னிங்ஸ் ஆடினால்தான் இஷான் கிஷன் திறமையை கணிக்க முடியும் என்று முன்னாள் வீரர்கள் சிலர் கூறியுள்ளனர்.

48 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறை… – மே.இ.தீவுகள் இல்லாமல் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை

ஹராரே: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான தகுதி சுற்று ஆட்டங்களில் தோல்வி கண்டு மேற்கிந்திய தீவுகள் அணி வெளியேறியுள்ளது. தகுதி சுற்றில் இன்று நடந்த சூப்பர் சிக்ஸ் ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணியை எதிர்கொண்டது ஷாய் ஹோப் தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் அணி. முதலில் களமிறங்கிய அந்த அணி, 43.5 ஓவர்களில் 181 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி மோசமான பெர்ஃபாமென்ஸை வெளிப்படுத்தியது. மேற்கிந்திய தீவுகள் தரப்பில் ஹோல்டர் மட்டுமே ஓரளவுக்கு விளையாடி, 45 ரன்கள் எடுத்திருந்தார். […]