ஆசிய கோப்பை தொடர் : இந்தியா 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நேபாளம் அணியை வீழ்த்தியது

முதலில் ஆடிய நேபாளம் அணி 48.2 ஓவர்களில் ஆல் அவுட் ஆகி 230 ரன்களில் சுருண்டது. மழை காரணமாக இந்திய அணிக்கு டக்வொர்த் லூயிஸ் விதிப்படி 23 ஓவர்களில் 145 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்திய அணியின் ஓப்பனர்கள் ரோகித் மற்றும் கில் ஆட்டமிழக்காமல் 20.1 ஓவர்களில் இலக்கை எட்டினர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி சூப்பர் – 4 சுற்றுக்கு தகுதி பெற்றது.
இந்த உலகக்கோப்பை தொடரில் மேக்னஸ் கார்ல்சனுடன் விளையாடுவேன் என நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை;

நான் அவருடன் விளையாடுவதற்கான ஒரே வழி இறுதிப்போட்டி தான், அந்த இறுதிப் போட்டியில் நான் இருப்பேன் என்றும் எதிர்பார்க்கவில்லை; என்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் இறுதிப் போட்டியில் மேற்கொள்வேன்”
விராட்கோலியின் விக்கெட்டை வீழ்த்துவதே தனது இலக்கு என இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் மகீஷ் தீக்சனா தெரிவித்துள்ளார்

இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள 50 ஓவர் உலககோப்பை தொடரில், விராட்கோலியின் விக்கெட்டை வீழ்த்துவதே தனது இலக்கு என இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் மகீஷ் தீக்சனா தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிரதான பவுலர்களில் ஒருவராக செயல்பட்டு வரும் மகீஷ் தீக்சனா செய்தியாளர்களிடம் பேசுகையில், ஐபிஎல் தொடரில் விராட்கோலியின் விக்கெட்டை தன்னால் கைப்பற்ற முடியவில்லை என கூறியுள்ளார். மேலும், விராட் கோலியின் விக்கெட்டே தனது இலக்கு எனவும் தெரிவித்தார்.
கால்பந்து உலகக்கோப்பையை முதல்முறை வென்ற ஸ்பெயின் பெண்கள் அணி – கேப்டன் ஒல்கா கர்மோனாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி செய்தி

வெள்ளி அன்று தந்தை இறந்த செய்தியை, ஞாயிறு அன்று உலகக் கோப்பையை வென்ற பிறகு அறிந்த ஸ்பெயின் கேப்டன் உருக்கம் 9-வது பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் இங்கிலாந்து – ஸ்பெயின் அணிகள் இடையே சிட்னியில் ஞாயிறு இரவு நடைபெற்றது. இதில், ஸ்பெயின் அணி 1-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி முதல்முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றியது. மகளிர் உலகக் கோப்பையை ஸ்பெயின் அணி முதன்முறையாக வெல்ல காரணமாக இருந்தவர் […]
புச்சிபாபு கிரிக்கெட் தொடர்; 15ம் தேதி தொடக்கம்

புச்சிபாபு கிரிக்கெட் தொடர் கோவை, திண்டுக்கல், சேலம், திருநெல்வேலி ஆகிய 4 இடங்களில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. டிஎன்சிஏ பிரசிடண்ட் லெவன், டிஎன்சிஏ லெவன், இந்தியன் ரயில்வே, பரோடா, ஹரியாணா, மும்பை, டெல்லி, கேரளா, திரிபுரா, மத்தியபிரதேசம், பெங்கால், ஜம்மு மற்றும் காஷ்மிர் ஆகிய 12 அணிகள் கலந்துகொள்ளும் இப்போட்டி வரும் 15ம் தேதி தொடங்குகிறது.
ஹாக்கி சாம்பியன்ஷிப்; 2 அரையிறுதி போட்டிகள்

7வது ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் இன்று(ஆக.11) இரண்டு போட்டிகள் நடக்கிறது. மாலை 6 மணிக்கு நடைபெறும் முதல் அரையிறுதி போட்டியில் மலேசியா-தென் கொரியா அணிகள் மோதுகின்றன. இரவு 8.30க்கு நடைபெறும் 2வது அரையிறுதி போட்டியில் இந்தியா-ஜப்பான் அணிகள் மோதுகின்றன. முன்னதாக மாலை 3.30க்கு நடைபெறும் 5வது இடத்துக்கான போட்டியில் பாகிஸ்தான்-சீனா அணிகள் மோதுகின்றன.
37 வருட சாம்ராஜ்ஜியத்தை தகர்த்த 17வயது சிறுவன்! விஸ்வநாதனை பின்னுக்கு தள்ளி No.1 வீரரானார் குகேஷ்!

இளம் தமிழக செஸ் வீரரான ஜிஎம் குகேஷ், இந்தியாவின் முதல் தரவரிசை செஸ் வீரராக இருந்த விஸ்வநாதன் ஆனந்தை பின்னுக்குத் தள்ளி அசத்தியுள்ளார். உலக செஸ் கூட்டமைப்பு (FIDE) ஆனது இம்மாதம் இறுதியில் அதன் தரவரிசை பட்டியலை வெளியிடும்போது, கடந்த 37 ஆண்டுகளில் முதல்முறையாக விஸ்வநாதன் ஆனந்த் முதலிடம் வகிக்கும் இந்திய வீரராக இருக்க மாட்டார். கடந்த 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தரவரிசை பட்டியலில் முதல் 100 இடங்களுக்குள் நுழைந்த 17 வயதான குகேஷ், தனது […]
முதல் டி20 கிரிக்கெட்: 4 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி திரில் வெற்றி

இந்திய அணிக்கு எதிரான முதல் டி 20 போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி திரில் வெற்றி பெற்றதுதரோபா, வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி ஏற்கனவே டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரை கைப்பற்றியது. அடுத்ததாக 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்கிறது. இதன்படி இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி டிரினிடாட்டின் தரோபாவில் உள்ள பிரையன் லாரா ஸ்டேடியத்தில் […]
சென்னையில் 16 ஆண்டுகளுக்கு பிறகு ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி தொடர்

எழும்பூர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் இன்று தொடங்கி வரும் 12ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தியா, பாகிஸ்தான், தென் கொரியா, ஜப்பான், மலேசியா, சீனா ஆகிய 6 அணிகள் பங்கேற்பு இந்திய அணி தனது முதல் போட்டியில் சீனாவை எதிர்கொள்கிறது.
முதலமைச்சர் கோப்பை – 2023

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (25.07.2023) சென்னை, ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கத்தில் நடைபெற்ற “முதலமைச்சர் கோப்பை -2023” மாநில அளவிலான போட்டிகள் நிறைவு விழாவில், அதிக பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் இரண்டாம் இடத்தை பெற்ற செங்கல்பட்டு மாவட்ட அணிக்கு பரிசுக் கோப்பையை, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.ஆர்.ராகுல்நாத், மாவட்ட விளையாட்டு அலுவலர், விளையாட்டு வீரர் -வீராங்கனைகள் ஆகியோரிடம் வழங்கி பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை […]