உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதல்

டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் பிற்பகல் 2 மணிக்கு போட்டி நடைபெறுகிறது.
கிரிக்கெட் வீரர் சுப்மன் கில் டிஸ்சார்ஜ்

உடல் நிலை சீரான நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் சுப்மன் கில் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். வீட்டில் இருந்தபடியே ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள அவருக்கு ரத்தத்தில் உள்ள தட்டணுக்கள் குறைந்து வந்ததால் சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் உடல்நிலை சற்று தேறியதால் கில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். டெங்கு காய்ச்சல் காரணமாக உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் கில் பங்கேற்கவில்லை. அடுத்த போட்டியிலும் அவர் பங்கேற்க வாய்ப்பு […]
உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்தியா-ஆஸ்திரேலியா ஆட்டத்தில் கோலி, வார்னர் சாதனை

உலகக்கோப்பை கிரிக்கெட்டில் சென்னையில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதின.சென்னை, ஐ.சி.சி. நடத்தும் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஈட்டி எறிதலில் தங்கம் வென்றது இந்தியா

ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஈட்டி எறிதலில் இந்திய வீராங்கனை அன்னு ராணி தங்கம் வென்றார்; 62.92 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து அசத்தல்.
ஆசிய போட்டிகள் – ஆடவர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் மேலும் ஒரு தங்கம் வென்றது இந்தியா

சரோவர் சிங், தமிழக வீரர் பிருத்வி ராஜ் தொண்டைமான் உள்ளிட்டோர் அடங்கிய இந்திய அணி துப்பாக்கி சுடுதல் ட்ராப் பிரிவில் தங்கம் வென்று சாதனை
இதுவே எனது கடைசி உலகக் கோப்பை போட்டியாக இருக்கலாம் என்று இந்திய கிரிக்கெட் அணி வீரர் அஸ்வின் கூறினார்

உலகக் கோப்பைப் போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டிருந்த சுழற்பந்து வீச்சாளர் அக்சர் பட்டேல், காயம் காரணமாக விலகினார். இதையடுத்து கடைசி நேரத்தில் அணிக்குள் கொண்டு வரப்பட்டார் 36 வயதான அஸ்வின். இந்நிலையில் நேற்று குவாஹாட்டியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: உண்மையை சொல்ல வேண்டும் என்றால், உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்படுவேன் என்று சிறிதும் எதிர்பார்க்கவில்லை. எப்போதும் கிரிக்கெட்டை ரசித்து விளையாட வேண்டும் என்பதே கடந்த 5 ஆண்டுகளில் எனது தாரக மந்திரமாக உள்ளது. இந்த உலகக்கோப்பை […]
ஆசிய விளையாட்டு போட்டி – 3 நிலை கொண்ட 50 மீட்டர் ஏர் ரைஃபிள் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு தங்கம்

ஜஸ்வரி, ஸ்வப்னிஸ், அகில் ஆகியோர் அடங்கிய இந்திய ஆடவர் அணி 1,769 புள்ளிகளுடன் தங்கப்பதக்கம் வென்றது
ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று – இந்திய அணிக்கு 266 ரன்களை இலக்காக நிர்ணயித்தது வங்கதேசம் அணி

முதலில் ஆடிய வங்கதேசம் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 265 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக வங்கதேச அணி கேப்டன் ஷகிப் அல்ஹசன் – 80, டவ்ஹித் ஹ்ரிடோய் – 54, நசும் அகமது – 44 ரன்கள் விளாசல் இந்திய அணியின் பந்துவீச்சாளர் ஷர்துல் தாகூர் – 3, முகமது ஷமி – 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
ஆசிய கோப்பை இறுதிப்போட்டி: 8-வது முறையாக இந்திய அணி சாம்பியன்..!

ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.கொழும்பு, 16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா – இலங்கை அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இந்த நிலையில் மழை காரணமாக ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர் மழை நின்றதும் ஆட்டம் தொடங்கியது. போட்டியின் முதல் ஓவரிலேயே பும்ரா, குசல் பெராரே […]
உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிப்பு!

இந்தியாவில் வரும் அக்டோபர் 5ம் தேதி உலகக்கோப்பை தொடர் தொடங்க உள்ளது.