இந்திய கிரிக்கெட் அணியை புறக்கணிக்க பாகிஸ்தான் முடிவு
அடுத்த மாதம் தொடங்கவுள்ள ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் அணி புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சச்சின் சாதனையை முறியடித்த கோலி
இந்தூரில் நேற்று நடந்த கடைசி ஒரு நாள் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்று கோப்பையை வென்றது. இந்த போட்டி மூலம் கோலி 35 மைதானங்களில் தன் ஒரு நாள் சதங்களை எடுத்துள்ளார். இதில் இந்தூர் சதம் கடைசியாக சேர்ந்தது. இதிலும் சச்சின் டெண்டுல்கரை கடந்து விட்டார் கோலி. சச்சின் 34 மைதானங்களில் சதம் எடுத்து சாதனை புரிந்துள்ளார்.
அஜித் குமார் உடன் கார் பந்தயத்தில் செல்ல கட்டணம்
துபாயில் கார் பந்தயம் நடைபெற்று வருகிறது இதில் அஜித் குமார் ரேசிங் அணி தொடர்ந்து பங்கேற்று வருகிறது. வரும் 25ஆம் தேதி துபாய் ஆட்டோடிரோமில் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த போட்டியின் போது அஜித்குமார் ஓட்டும் காரில் அவருடன் செல்வதற்கு 86 ஆயிரத்து 475 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது யார் வேண்டுமானாலும் இந்த பணத்தை கட்டி காரில் அவருடன் பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டள்ளது.
உலக கோப்பை கால்பந்து நடுவர்களாக மூன்று இந்தியர்கள் தேர்வு
உலக கால்பந்து சம்மேளன (பிபா) நடுவர்களாக இந்தியாவைச் சேர்ந்த 3 பேர் தேர்வாகியுள்ளனர். இதுதொடர்பாக அகில இந்திய கால்பந்து சம்மேளனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: குஜராத்தை சேர்ந்த ரச்சனா கமானி, புதுச்சேரியைச் சேர்ந்த அஸ்வின் குமார், டெல்லியைச் சேர்ந்த ஆதித்யா புர்கயஸ்தா ஆகியோர் பிபா நடுவர்களாக தேர்வாகியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் முரளிதரன் பாண்டுரங்கன்(புதுச்சேரி), பீட்டர் கிறிஸ்டோபர் (மகாராஷ்டிரா) ஆகியோர் பிபா உதவி நடுவர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்தச் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.இந்த ஆண்டின் முக்கிய நிகழ்ச்சியாக உலக கோப்பை […]
விளையாட்டு வீராங்கனை பி.வி சிந்துவுக்கு புதிய பதவி
உலக பாட்மிண்டன் சம்மேளனம் (பிடபிள்யூஎப்) சார்பில் செயல்படும் விளையாட்டு வீரர்கள் ஆணையத்தின் தலைவராக இந்திய பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் 2026ம் ஆண்டு முதல் 2029ம் ஆண்டு வரை இந்தப் பதவியை வகிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விராட் கோலி புதிய சாதனை
15 ஆண்டுகளுக்கு பிறகு பெங்களூரில் நடந்த விஜய் ஹசாரே போட்டியில் களமிறங்கிய விராட் கோலி ஆந்திர அணிக்கு எதிராக 131 ரன்கள் எடுத்தன் மூலம் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிவேகமாக 16 ஆயிரம் ரன்களைக் கடந்த வீரர் என்ற சாதனையை படைத்தார். தனது 330-வது இன்னிங்ஸில் விராட் கோலி இந்த சாதனையைப் படைத்துள்ளார். இதற்கு முன்னர் இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 391 இன்னிங்ஸ்களில் 16 ஆயிரம் ரன்களைக் கடந்திருந்ததே […]
இந்தியா வந்த மெஸ்ஸிக்கு கிடைத்த ரூ 89 கோடி
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட அர்ஜெண்டினா கால்பந்து அணியின் ஜாம்பவான் லயோனல் மெஸ்ஸிக்கு ரூ.89 கோடி வழங்கப்பட்டதாகத் தெரியவந்துள்ளது. கடந்த 13-ம் தேதி கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியாவுக்கு வருகை தந்திருந்தார். கொல்கத்தா, ஹைதராபாத், மும்பை, டெல்லி ஆகிய நகரங்களில் அவர் சிறப்பு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு.
சூர்யகுமார் யாதவ் கேப்டன்; அக்ஷர் படேல் துணை கேப்டன். இந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த வருண் சக்ரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர் இடம் பிடித்தனர்; சுப்மன் கில்லுக்கு இடமில்லை. பிப்ரவரி 7ஆம் தேதி போட்டிகள் தொடக்கம்.
உலகக்கோப்பை கால்பந்து அணிக்கு ரூ.450 கோடி பரிசு
நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா, பிரேசில், பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி உட்பட 48, அணிகள் பங்கேற்கும் 23-வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் வரும் 2026-ம் ஆண்டு ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய 3 நாடுகளில் நடைபெறுகிறது. இந்த தொடருக்கான பரிசுத்தொகையை ஃபிபா அறிவித்துள்ளது. இதன்படி தொடருக்கான மொத்த பரிசுத்தொகை சுமார் ரூ.6 ஆயிரம் கோடியாகும். சாம்பியன் பட்டம் வெல்லும் அணி ரூ.450 கோடியை பரிசாக அள்ளிச்செல்லும். 2022-ம் […]
ஐபிஎல் ஏலம்: அதிக விலைக்கு எடுக்கப்பட்ட வீரர்கள்!
2026ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான மினி ஏலம் அபுதாபியில் நடைபெற்றது. அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டவர்கள்… 1) முதலிடத்தில் இருப்பவர் கேமரூன் கிரீன். அவரை ரூ.25.20 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. 2) இரண்டாமிடத்தில் மதீஷா பதிரானா உள்ளார். அவரையும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியே அதிக விலைக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. ரூ. 18 கோடிக்கு பதிரானா ஏலத்தில் வாங்கப்பட்டார். 3, 4) மூன்றாம், நான்காம் இடங்களில் இளம் வீரர்களான கார்த்திக் சர்மாவும் […]