சபரிமலையில் பிளாஸ்டிக் கழிவுகளுக்கு தடை
சபரி மலைக்கு சுற்றுலா செல்லும் பயணிகள் பிளாஸ்டிக் கழிவுகளை அங்கேயே விட்டு வருகிறார்கள். இதனை சாப்பிடும் விலங்குகள் இறந்து விடுகின்றன சமீபத்தில் ஒரு ஆண் யானை இது போன்று பிளாஸ்டிக் கழிவுகளை தின்று இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து கேரள உயர்நீதிமன்றம் இதுபோன்று மலைப்பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்துபவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். சபரிமலை பகுதியில் ஹோட்டல்கள் மூலம் 24 டன் கழிவுகள் உருவாகின்றன. அதனையும் நீதிமன்றம் கண்டித்து […]
குரோம்பேட்டையில் நடைபெற்ற குரு பெயர்ச்சி விழா
குரோம்பேட்டை புருஷோத்தம நகர் ஸ்ரீ விஜய கணபதி லட்சுமி நாராயண பெருமாள் ஆலயத்தில் குரு பெயர்ச்சி முன்னிட்டு குரு பகவான் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார் இதனைத் தொடர்ந்து சிறப்பு நவகிரக பரிகார ஹோமம் அபிஷேகம் ஆராதனைகள் வெகு விமர்சையாக நடைபெற்றன காலை10மணிக்கு அனுக்ஜை, .விக்னேஸ்வர பூஜை.ஹோம சங்கல்பத்தை தொடர்ந்து சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றதுகாலை 11:30 மணிக்கு குருபகவானுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் மற்றும் அர்ச்சனைகள் நடைபெற்றன நண்பகல் 12:30 மணி அளவில் […]
அழகர் ஆற்றில் இறங்கினார் மதுரை குலுங்கியது
சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி இன்று காலை 6 மணி அளவில் நடைபெற்றது பச்சை பட்டு உடுத்தி அழகர் தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கினார் அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு இருந்து பக்தி முழக்கமிட்டனர்.ஆழமான பக்தர்கள் தண்ணீர் பீய்ச்சி அடித்தனர்.பக்தர்கள் கூட்டத்தால் மதுரை குலுங்கியது
திருப்பதி கோவிலில் ஜுலை 15 வரை வி.ஐ.பி. தரிசனம் ரத்து
கோடை விடுமுறையால் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது . வார இறுதி நாட்களில் தரிசனம் செய்ய 20 முதல் 25 மணி நேரம் ஆகிறது. இதனால் வரும் ஜுலை 15 வரை வி.ஐ.பி. தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது
சபரிமலைக்கு போகும் ஜனாதிபதி
ஜனாதிபதி திரௌபதி முர்மு மே 18ம் தேதி சபரிமலை தரிசனத்திற்காக கேரளா வரவுள்ளார் இரண்டு நாள் சுற்றுப்பயணம் ஆக கேரளா வரும் அவர் 18 மற்றும் 19ம் தேதிகளில் அவர் கோட்டயம் குமரகத்தில் தங்கி இருப்பார். ஜனாதிபதியின் வருகையை ஒட்டி, தேவஸ்வம் போர்டும் காவல்துறையும் முன்னேற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன. சபரிமலையில் ஜனாதிபதி வரும் நாளில் கடுமையான பாதுகாப்பும் கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்படும். மெய்நிகர் முன்பதிவு உள்ளிட்ட ஏற்பாடுகள் மாற்றம் செய்யப்படும். வழக்கமான பக்தர்கள் அனுமதி அனேகமாக ரத்து செய்யப்படும் […]
காஞ்சி இளைய சங்கராச்சாரியார் பொறுப்பேற்றார்.
காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 70 ஆவது பீடாதிபதியாக ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அருள்பாலித்து வருகிறாா். இவருக்கு அடுத்த 71 ஆவது மடாதிபதியாக ஆந்திர மாநிலம், அன்னாவரத்தைச் சோ்ந்த ஸ்ரீசுப்பிரமணிய கணேச சா்மா திராவிட் தோ்வு செய்யப்பட்டுள்ளாா். இவருக்கு விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் உள்ள பஞ்ச கங்கா தீா்த்த திருக்குளத்தில் அட்சய திருதியை நாளான புதன்கிழமை இன்று சன்யாச ஆசிரம தீட்சை வழங்கினார். பின்னா், இருவரும் இணைந்து மூலவர் காமாட்சி […]
குரோம்பேட்டை ராதா நகர் வசந்த மண்டபத்தில் மகா சுதர்சன யாகம், தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு பிரார்த்தனை
குரோம்பேட்டை ராதா நகர் கிருஷ்ணமாச்சாரி தெருவில் உள்ள வசந்த மண்டபத்தில் இன்று 23ஆம் தேதி மகா சுதர்சன ஹோமம் வெகு விமர்சையாக நடைபெற்றது காலை 5 மணிக்கு சுவாமி திருமஞ்சனத்துடன் ஓமம் தொடங்கியது மதியம் 12:30 மணிக்கு பூர்ணாகூதி நடந்துஹோமம் முடிந்து தீபாரனை காட்டப்பட்டு தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது மேலும் பரீட்சைக்கு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு பிரார்த்தனையும் செய்யப்பட்டது ஹோமத்தில் கலந்து கொண்ட உபயதாரர்களுக்கு தன்வந்திரி விக்ரம் வழங்கப்பட்டது இவ்விழாவில் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி […]
காரடையான் நோன்பு புராணக்கதை
பத்ர தேசத்தை ஆண்டு வந்த அச்வபதி என்ற மன்னன் மகா தர்மசீலன். அவன் மனைவி மாலதி தேவியோ மகா பதிவிரதை. ஆனால் குழந்தை பாக்கியம் தான் அவர்களுக்கு வாய்க்க வில்லை.மகாராணி மாலதி தேவி பெரும் விரதமிருந்து வஷிஷ்ட மகரிஷியிடம் வேத மாதாவான சாவித்ரி தேவியின் ஆராதனா மந்திர உபதேசத்து, அதன் பலனாக அவர்களுக்கு அழகான ஒரு பெண் குழந் தை பிறக்கிறது. “சாவித்ரி” என்றே பெயரிட்டு வளர்த்து வந்தார்கள். அவள் மணப்பருவத்தை அடை கிறாள்.அவள் விரும்பிய சத்யவானையே […]
காணிக்கை உண்டியலில் போடும் சுற்றறிக்கை வாபஸ்
கோயிலில் அர்ச்சகர் தட்டில் விழும் காணிக்கையை உண்டியலில் போடும் உத்தரவு வாபஸ் மதுரையில் பாலதண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கடந்த 7ம் தேதி செயல் அலுவலர் பிறப்பித்த உத்தரவு திரும்பப்பெறப்பட்டது கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் உத்தரவை வாபஸ் பெற்றது கோவில் நிர்வாகம் கோயில் தக்காரிடம் ஆலோசிக்காமல் தன்னிச்சையாக உத்தரவு பிறப்பித்ததால் மதுரை மண்டல இணை ஆணையர் நடவடிக்கை
திருப்பரங்குன்றம் கோவிலுக்கு செல்வதை தடுக்க கூடாது – நீதிமன்றம்
மதுரை மாவட்டத்தில் கடைசி நேரத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. 144 தடை உத்தரவை பயன்படுத்தி பக்தர்கள் திருப்பரங்குன்றம் கோவிலுக்கு செல்வதை தடுக்க கூடாது. அவர்கள் வழிபாட்டு உரிமையை பறிக்க கூடாது. மேலும் 144 தடை உத்தரவை நீக்க கோரியும் மனுக்களை அவசர வழக்காக விசாரிக்க கோரி உயர்நீதிமன்றம் மதுரை கி ளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் நீதிபதிகள் ஜெயசந்திரன், பூர்னிமா அமர்வு முன் முறையீடு செய்யப்பட்டது. இன்று கடைசி வழக்காக விசாரிக்க நீதிபதிகள் […]