முருகர் மாநாட்டில் ஏழு லட்சம் பேர் தரிசனம்
மதுரையில் நடந்த முருகர் மாநாட்டை ஒட்டி அறுபடைவீடு முருகன் கண்காட்சி நடைபெற்றது இந்த கண்காட்சியை 7 லட்சம் பேர் தரிசனம் செய்ததாக இந்து முன்னணி தலைவர் தெரிவித்தார்.இந்த மாநாட்டுக்கு விளம்பரம் தேடி தந்தவர்கள் சேகர்பாபு திருமாவளவன் வைகோ என்றும் அவர் கிண்டல் செய்தார்
பள்ளிக் குழந்தைகளுக்கு ருத்ராட்சம் அணிந்து அனுப்புங்கள் – அண்ணாமலை
மதுரையில் நடந்த முருகர் மாநாட்டில் அண்ணாமலை பேசும் போது இந்த மாநாடு பலருக்கு எச்சரிக்கை மணியாக இருக்கும் என்று கூறினார் மேலும் இதில் அரசியல் எதுவும் கிடையாது என்றும் தெரிவித்தார். இனிமேல் . இந்துக்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் போது திருநீறு பூசி உத்திராட்சக் கொட்டை அணிவித்து அனுப்புங்கள் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்
முருகர் மாநாட்டில் அதிமுக தலைவர்கள்
மதுரையில் நடந்த இந்து முன்னணி முருகர் மாநாட்டில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் உதயகுமார் கடம்பூர் ராஜு செல்லூர் ராஜு பங்கேற்றனர் இந்த மாநாட்டில் பேசிய அண்ணாமலை எங்கள் வேண்டுகோளை ஏற்று அழைப்பிதழை பெற்ற தலைவர்களின் கட்சி தொண்டர்கள் இந்த மாநாட்டுக்கு வந்துள்ளனர் அவர்களுக்கு நன்றி என்று தெரிவித்தார்
50 ஆயிரம் பேர் பாடிய கந்த சஷ்டி கவசம்;
மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாட்டின் நிறைவாக, 50 ஆயிரம் பக்தர்கள் சேர்ந்து கந்த சஷ்டி கவசம் பாடி, பரவசம் ஏற்படுத்தினர். மதுரை வண்டியூர் டோல்கேட் அருகே உள்ள மைதானத்தில் ‘குன்றம் காக்க.. கோயிலை காக்க…’ எனும் தலைப்பிலான முருக பக்தர்களின் பிரமாண்ட மாநாடு நடந்தது.. கந்தசஷ்டி கவசம்மாநாட்டில், ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண், மடாதிபதிகள், ஹிந்து முன்னணி, பா.ஜ., நிர்வாகிகள் கலந்து கொண்டனர்..
அறுபடை வீடு கண்காட்சிக்கு மக்கள் படையெடுப்பு
மதுரை பாண்டி கோயில் அருகே உள்ள அம்மா திடலில் (ஜூன் 22) முருக பக்தர்கள் மாநாடு நடைபெறுகிறது. இதையொட்டி மாநாட்டு வளாகத்தில் முருகனின் அறுபடை வீடுகளின் மாதிரி கோயில்கள் தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கோயில்களில் முருகனின் அறுபடை வீடுகளில் பூஜை செய்யப்பட்ட வேல்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. தினமும் காலை, மாலையில் 2 மணி நேரம் பூஜைகள் செய்து பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்கப் படுகிறது. மதுரையில் ஒரே இடத்தில் அமைக்கப் பட்டுள்ள அறுபடை வீடுகளை தரிசிக்க தமிழகம் முழுவதும் […]
நித்தியானந்தா இருக்கும் நாடு
பிரபல சாமியார் நித்தியானந்தா வழக்குகள் தொடர்பாக வெளிநாட்டுக்கு தப்பி ஓடினார் பின்னர் கைலாச ” என்ற நாட்டை ஒரு தீவில் அமைத்ததாக செய்தி வெளியானது. அங்கிருந்து கொண்டு அவர் பக்தர்களுக்கு ஆசி வழங்கி வருகிறார். இந்த நிலையில் மதுரை ஆதீனம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது .மதுரை உயர்நீதிமன்ற கிளையில் விசாரணை நடைபெறும் போது நித்தியானந்தா எங்கே இருக்கிறார் என்று நீதிபதி கேட்டதற்கு அவரது சிஷ்யை அர்ச்சனா என்பவர் ஆஜராகி விளக்கினார். ஆஸ்திரேலியாவில் கைலாச நாடு இருப்பதாகவும் […]
இந்து முன்னணி மாநாட்டில் அறுபடை வீடுகள் காட்சி .
மதுரை பாண்டி கோயில் அருகே அம்மா திடலில் இந்து முன்னணி சார்பில் முருக பக்தர்கள் மாநாடு ஜூன் 22-ல் நடைபெறுகிறது. இதையொட்டி மாநாட்டு வளாகத்தில் முருகனின் அறுபடை வீடுகளின் மாதிரிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மாதிரி அறுபடை வீடுகளை புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் நேற்று திறந்து வைத்தார்.இதனை பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர் ஆறு கோடி வீடுகளில் மூலவர் அப்படியே காட்சிப்படுத்தப்பட்டு இருக்கிறார். இது அனைவரையும் கவர்ந்துள்ளது
முருக பக்தர்கள் மாநாட்டிற்கு அனுமதி*
மதுரையில் ஜூன் 22 ஆம் தேதி நடைபெற உள்ள முருக பக்தர்கள் மாநாட்டிற்கு நிபந்தனையுடன் அனுமதி வழங்கியது உயர்நீதிமன்ற மதுரை அமர்வு. ஆன்மீகம் எனும் பெயரில் அரசியல் நிகழ்வு எதையும் முன்னெடுக்கக் கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டு உள்ளது.
விமான விபத்தை முன்கூட்டியே கணித்த சாமியார் வீடியோ வைரல்
கர்நாடக மாநிலம் பெலகாவி (மாவட்டம்) டவுன் நயாநகரில் சுக்தேவானந்தா சுவாமி மடம் உள்ளது. இந்த மடத்தின் மடாதிபதியாக இருப்பவர் அபிநவ சித்தலிங்க சுவாமிஜி. இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 20-ந்தேதி மடத்தின் திருவிழா நடைபெற்றது. அந்த சமயத்தில் அபிநவ சித்தலிங்க சுவாமிஜி, எதிர்காலத்தை கணித்து அருள்வாக்கு கூறியிருந்தார். அதில் அவர், எதிர்வரும் நாட்களில் பலத்த தீவிபத்து ஏற்படும். அதுவும் விமான விபத்தில் சிக்கி பயங்கர தீப்பிடிக்கும். ஒரு நகரம் நாசமாகும் என்று கூறியிருந்தார். ஆமதாபாத்தில் நடந்த […]
திருப்பதியில் தரிசனம் செய்ய 18 மணி நேரம் காத்திருப்பு
திருப்பதி ஏழுமலையானை இந்த கோடை காலத்தில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்சர்வ தரிசனம் செய்ய தற்போது 18 மணி நேரம் வரை பக்தர்கள் காத்திருந்து ஏழுமலையானை தரிசித்து வருகின்றனர். மேலும் இன்று சனிக்கிழமை என்பதாலும், நாளை ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.