திருவண்ணாமலையில் கார்த்திகை திருவிழா நவ.21ம் தேதி கொடியேற்றம்
திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா நவ.21-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது டிசம்பர் 3ம் தேதி அதிகாலை பரணி தீபமும், மாலை 6 மணிக்கு அண்ணாமலையார் மலை மகா தீபமும் ஏற்றப்படுகிறது
மேற்கு மாம்பலத்தில் மாபெரும் கொலு விற்பனை கண்காட்சி
புரட்டாசி மாத பிறப்பு திருப்பதி கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்
புரட்டாசி மாத பிறப்பை ஒட்டி திருப்பதிஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸ் 31 அறைகளும் நிரம்பி, கிருஷ்ண தேஜா ஓய்வு அறை வரை பக்தர்கள் காத்திருக்கின்றனர். சாமி தரிசனத்துக்கு சுமார் 2 கி.மீ. தூரம் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இலவச தரிசனத்துக்கு 24 மணி நேரம் வரை காத்திருக்க நேரலாம் என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. டோக்கன் பெற்றவர்கள் 7 மணி நேரம் ரூ.300 தரிசன டிக்கெட் பெற்றவர்கள் 3 மணி […]
ஹரித்துவாருக்கு ஆன்மீக பயணம் செல்லும் செங்கோட்டையன்
இன்று டெல்லி புறப்பட்டுச் சென்ற செங்கோட்டையன்கோவையில் செய்தியாளர்களிடம் கூறியது: “ஹரித்துவாரில் உள்ள ராமர் கோயிலுக்குச் செல்கிறேன். மனம் சரியில்லாததால் கோயிலுக்குச் செல்வதற்காக வந்திருக்கிறேன். பாஜக தலைவர்கள் யாரையும் சந்திக்க செல்லவில்லை. 9-ம் தேதி செய்தியாளர் சந்திப்பு எதுவும் இல்லை. கலங்கிப் போய்விட வேண்டாம், நியாயமான கோரிக்கையைத்தான் வைத்துள்ளீர்கள் என தொண்டர்கள் சொல்கிறார்கள்.
திருப்பரங்குன்றம் மலை – தமிழக அரசு விளக்கம்
தமிழக அரசு தீட்டு என்ற சொல்லை எந்த விதத்திலும் அனுமதிக்காது – தமிழக அரசு ஒருவரின் மத வழிபாட்டில் மற்றொருவர் தலையிட முடியாது. இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட நாடு – தமிழக அரசு மத்திய தொல்லியல் துறை தரப்பில் தனது வாதங்களை வைப்பதற்காக வழக்கு விசாரணையை 13ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவு நெல்லிதோப்பு பகுதியில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்துவதற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை – தமிழக அரசு தர்காவுக்கு உட்பட்ட பகுதியில் ஆடு கோழி பலியிடுவதற்கு […]
திருப்பதி ஏழுமலையானுக்கு இரண்டரை கிலோ தங்க சங்கு சக்கரம் காணிக்கை
திருப்பதி ஏழுமலையானுக்கு ஒரு பக்தர் 2 1/2 கிலோ எடையில் தங்கத்தில் சங்கு சக்கரம் தயாரித்து அழைத்துள்ளார் இதன் மதிப்பு ரூபாய் 2 கோடியே 40 லட்சம் ஆகும்.கோவிலில் உள்ள ரங்கநாயக் உலா மண்டபத்தில் சங்கு சக்கரத்தை கோவில் நிர்வாக அதிகாரியிடம் வழங்கினார்கள்
குரோம்பேட்டையில் நடந்த ஆடிப்பூர திருவிழா
குரோம்பேட்டை புருஷோத்தமன் நகர் ஸ்ரீ விஜய கணபதி லட்சுமி நாராயண பெருமாள் ஆலயத்தில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு ஸ்ரீ நவ சக்தி துர்கைக்கு பெண் பக்தர்கள் வளையல் மலர் பந்தல் அமைத்து சிறப்பு அலங்காரம் செய்து வழிபாடு செய்தனர் இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் துர்க்கை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்
குரோம்பேட்டை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் ஆடிப்பூரத் திருவிழா
குரோம்பேட்டை பாரதிபுரம் நெமிலிச்சேரி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ அருள்மிகு முத்து மாரியம்மன் ஆலயத்தில் முத்து மாரியம்மன் க்கு ஆடிப்பூர திருவிழாவை முன்னிட்டு வளையல் அலங்காரம் மற்றும் பெண்களுக்கு நலங்கு வைத்து வழிபாடு செய்தனர் இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் விழாவின் முடிவில் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர் இவ்வாலயத்தில் 28.07.2025 திங்கள் கிழமை முதல் 3.8.2025 ஞாயிற்றுக்கிழமை வரை ஆடி திருவிழா நடைபெறுகிறது […]
ஆடி வெள்ளி சிறப்பு அலங்காரத்தில் கருமாரியம்மன்
குரோம்பேட்டை பத்மநாப நகர் ஸ்ரீ கருமாரியம்மன் ஆலயத்தில் ஆடி முதல் வார வெள்ளி முன்னிட்டு காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் அலங்காரங்கள் நடைபெற்றது மாலையில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அம்பாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார் இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து அம்மனை வழிபட்டு சென்றனர் பக்தர்கள் நேர்த்திக்கடனுக்காக பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்
ராஜேந்திர சோழனின் நினைவு நாணயம் வெளியிடுகிறார் பிரதமர் மோடி
ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் விழா, கங்கைகொண்ட சோழபுரம் கோவிலை கட்டத் தொடங்கிய ஆயிரமாவது ஆண்டு விழா மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளின் மீது படையெடுத்துச் சென்ற ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழா ஆகியவற்றையும் இணைத்து முப்பெரும் விழாவாக இந்த விழா நடைபெற இருக்கிறது. விழாவில், ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிடுகிறார். இந்த விழாவில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரியலூரில் நடைபெறும் விழாவில் பங்கேற்றுவிட்டு, தஞ்சாவூர், பெரம்பலூர் மாவட்டங்களில் […]