திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா கொடியேற்றம் கோலாகலம்

அதிகாலை 5.20 மணிக்கு ஆவணி திருவிழாவுக்கான கொடியானது கொடி மரத்தில் ஏற்றப்பட்டது கொடி மரத்திற்கு பால், மஞ்சள், பன்னீர் உள்ளிட்ட 16 வகை மங்கல பொருட்களால் அபிஷேகம் திரளான பக்தர்கள் தரிசனம் = 600-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு
வருடாந்திர பிரமோற்சவத்தையொட்டி செப். 18 முதல் 26ம் தேதி வரை திருப்பதியில் விஐபி தரிசனம் ரத்து

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் செப்.18ம்தேதி முதல் 26ம் தேதி வரை வருடாந்திர பிரமோற்சவத்தையொட்டி விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக அறங்காவலர் குழு தலைவர் கருணாகரன் தெரிவித்தார்.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களில் 2 பிரமோற்சவங்கள் நடைபெற உள்ளது. அதற்கான போஸ்டர் வெளியீடு விழா ஏழுமலையான் கோயில் முன்பு நேற்று நடைபெற்றது. திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் கருணாகரன் தலைமை தாங்கினார். தலைமை செயல் அதிகாரி தர்மா வரவேற்றார். அப்போது, தேவஸ்தான அறங்காவலர் […]
ஆவணி மாத பவுர்ணமி: திருவண்ணாமலையில் மழைக்கு நடுவே பக்தர்கள் கிரிவலம்

திருவண்ணாமலையில் மழையில் நனைந்தபடி பக்தர்கள் தொடர்ந்து கிரிவலம் மேற்கொண்டனர்.திருவண்ணாமலை, திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். இந்த நிலையில் ஆவணி மாதத்திற்கான பவுர்ணமி இன்று வருகிறது. அதன்படி நேற்று காலை 10.58 மணிக்கு கிரிவலம் தொடங்கி இன்று காலை 7.05 மணி வரை […]
மகாவிஷ்ணுவின் 10 அவதாரங்கள் உணர்த்தும் மனிதனின் வாழ்க்கை
ஆவணி அவிட்ட மகத்துவம்!

ஆவணி அவிட்டம் அந்தணர்களாக பிறந்த ஒவ்வொருவரும் எட்டு வயதில் உபநயனம் பூணூல் சடங்கை நடத்திக் கொள்ள வேண்டும். அதிபுத்திசாலியாக, மஹா மேதாவியாக இருந்தால் ஐந்து வயதில் கூட பூணூல் போட்டு விடலாம். பதினாறு வயதிற்கு மேல் உபநயனம் செய்வது என்பது பேரளவுக்கு மாத்திரமே என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.உபநயனம் என்றால் ‘நமக்கு துணையாக வரும் இன்னுமொரு “கண்” என்று பொருள். ஞானம் என்னும் கல்வி அறிவை பெற்றால் மட்டுமே ஒருவன் கண் பெற்ற பயனைப் பெறுகிறான் என்று திருவள்ளுவர் […]
ஓணம் பண்டிகையின் வரலாறு தெரியுமா?

கேரளாவில் கொண்டாடப்படும் திருவோணம் பண்டிகை மகாபலி சக்கரவர்தியின் நினைவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. மகாபலி என்னும் மன்னன் கேரள நாட்டைச் சிறப்பாக ஆண்டுவந்தான். அவன் பெற்ற தவவலிமையால் மூவுலகையும் ஆளும் மன்னனாகத் திகழ்ந்தான். இதனைப் பொறுக்காத தேவர்கள் அசுர வலிமை கொண்ட மகாபலியை அடக்கித் தங்களின் வலிமைக்குக் கொண்டுவரத் திருமாலின் உதவியை நாடிச் சென்றனர். திருமாலும் வாமன அவதாரம் எடுத்து மகாபலியிடம் மூன்றடி மண்ணைத் தானமாகக் கேட்டார். திருமாலின் சூட்சமத்தை அறிந்த அசுர குருவான சுக்ராச்சாயான் அறிவுரையைக் கேளாத […]
திருப்பதியில் தரிசன முன்பதிவு தொடக்கம்!

திருப்பதி ஏழுமலையான் கோவிலின் நவம்பர் மாத தரிசன டிக்கெட் இன்று முதல் ஆன்லைனில் வெளியிடப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
வரலட்சுமி விரதம் பிறந்த கதை

வரலட்சுமி விரதம் ஆடி மாதம் வளர்பிறையில் கடைசி வெள்ளிக்கிழமை (ஆகஸ்டு 25ந்தேதி) அனுசரிக்கவேண்டிய விரதம் இது.வரலட்சுமி விரத பூஜை செய்யும் போது, சுமங்கலிப் பெண்கள் நோன்பு சரடை வைத்து பூஜை செய்வார்கள். பூஜை முடிந்ததும் அந்த சரடை தங்கள் கணவன் கையால் கட்டிக்கொள்ள வேண்டும். இப்படிச் செய்வதால் அவர்களுக்கு தீர்க்க சுமங்கலிப் பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.மகத நாட்டைச் சேர்ந்த தெய்வ பக்தி நிறைந்த பெண் சாருமதி. இவள், தனது கணவன், மாமனார், மாமியார் ஆகியோரை சாதாரண […]
வரலட்சுமி விரதம் இருப்பது எப்படி?

வரலட்சுமி விரத பூஜையை வெள்ளிக்கிழமை காலை அல்லது மாலையில் உங்கள் வசதிக்கு ஏற்ப செய்யலாம். பணியில் இருப்பவர்களுக்கு மாலை நேரத்தில் விரத பூஜை செய்வது தான் வசதியாக இருக்கும்.விரத பூஜைக்கு தேவையான எல்லாப் பொருட்களையும் தயார் நிலையில் எடுத்து வைத்து கொண்ட பிறகு முதலில் விநாயகர் பூஜையை நடத்த வேண்டும். அதன்பிறகு வரலட்சுமி பூஜை செய்ய வேண்டும். ஒரு தாம்பாளத்தில் அரிசி பரப்பி, அதன் மேல் கலசம் வைத்து, பழம், வெற்றிலை, பாக்கு வைக்க வேண்டும். பொங்கல், […]
நாக தோஷம் போக்கும் நாகசதுர்த்தி வழிபாடு

ஜாதக ரீதியாக இருக்கும் தோஷத்தை விடவும் நாகத்தைத் தாக்குவதன் மூலம் ஏற்படும் தோஷம் அபாயகரமானது. நாக தோஷம் இருப்பவர்களுக்குப் பரிகாரமே கிடையாது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. நாகம்மன் கோவிலில் நாகசதுர்த்தி அன்று சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன.நாகதோஷம் நீங்க பலரும் இங்கு வந்து வழிபாட்டில் கலந்து கொள்கிறார்கள். நாக வழிபாடு என்பது வேத காலத்திலிருந்தே இருந்துவரும் முக்கியமான வழிபாடு. நாகத்தை வழிபடுவதற்கு உகந்த நாள் `நாக சதுர்த்தி’. சதுர்த்தியன்று விரதம் இருந்து, துள்ளுமாவு படைத்து வேண்டிக்கொண்டால் தோஷங்கள் அனைத்தும் […]