புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு

மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன், என்கிறார் கீதையில் கண்ணபிரான். மார்கழி மாதத்தைப் போலவே புரட்டாசி மாதமும் இறைவனின் திருவிழாக்கள் பல நடக்கும் மாதமாக விளங்குகிறது. திருப்பதியில் பிரம்மோற்சவம் நடப்பது போலவே பல பெருமாள் கோயில்களிலும் வருடாந்திர திருவிழாக்கள் நடை பெறுகின்றன.தேவி பராசக்தியைப் போற்றும் நவராத்திரி விழாவும் இம்மாதத்தில் தான் நடை பெறுகின்றது. இது தவிர திருப்பதி வெங்கடாசலபதியைக் குலதெய்வமாகக் கொண்டுள்ள குடும்பங்களில் மாவிளக்கு ஏற்றி திருவாராதனம் செய்வது வழக்கம்.மாவிளக்கேற்றுதல்: வைணவ சம்புரதாயங்களைப் பின்பற்றும் சில இல்லங்களில் எம்பெருமான் […]
மகாளய பட்சம் -& எந்த நாளில் திதி கொடுத்தால் பலன்-?

சூரியன் கன்னி ராசியில் சஞ்சரிக்கும் புண்ணியமிகு புரட்டாசி மாதத்தில் கிருஷ்ணபட்சப் பிரதமை முதல் அமாவாசைவரை உள்ள காலத்துக்கு பித்ரு பட்சம், மகாளயம் என்று பெயர் உள்ளது.மகாளய பட்ச காலத்தில் மஹாபரணி, மத்யாஷ்டமி, மஹாவியதீபாதம், வைதிருதி, அவிதவா நவமி ஆகிய நாள்களில் தர்ப்பணம் செய்வார்கள்.இந்நாளில் நாம் பொதுவாக என்ன செய்ய வேண்டும் எவ்வாறு வழிப்பட வேண்டும் என்று பலருக்கு குழப்பம் இருக்கும். அதை தீர்க்கும் வகையில் இந்த பதிவை தொடர்ந்து படியுங்கள்.2023 மகாளய பட்சம்முன்னோர்கள் பூலோகம் வரும் மகாளய […]
சனிக்கிழமையில் ஆஞ்சநேயர் வழிபாடு…!!

ராமாயணத்தில் இணையற்ற இடத்தைப் பிடித்தவர் ஆஞ்சநேயர். இவர் அறிவு, உடல் வலிமை, துணிச்சல், புகழ், ஆரோக்கியம், வாக்கு சாதுரியம், வீரம் ஆகிய அனைத்தும் ஒருங்கே அமையப்பெற்றவர் ஆவார். அவர் பிறந்த தினமே அனுமன் ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. இவர் வாயுதேவனின் அம்சமாக அஞ்சனாதேவிக்கு மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் பிறந்தார்.இவரை எல்லா நாட்களிலும் வழிபடலாம். புதன், வியாழன் மற்றும் சனி ஆகிய மூன்று கிழமைகளில் ஆஞ்சநேயரை வழிபடுவதால் மிகுந்த நன்மைகள் கிடைக்கும். ஆஞ்சநேயரை பல விதமான முறைகளில் வழிபாடு […]
மகாபாரதத்தில் கண்ணன் அழுத இடம்

உடல் அழியக் கூடியது. ஆத்மா அழியாதது என்று அர்ஜுனனுக்கு கீதோபதேசம் செய்த கண்ணன் அழுத இடம் ஒன்று உண்டு. அது எந்த இடம் தெரியுமா? கர்ணன் அடிபட்டு இறக்கும் தருவாயில் இருக்கிறான். அவன் செய்த தர்மம் அவனைக் காத்து நின்றது. அந்த தர்மத்தையும் கண்ணன் தானமாகப் பெற்றுக் கொண்டான். கண்ணனுக்கே தாங்கவில்லை. “உனக்கு ஒரு வரம் தர விரும்புகிறேன். என்ன வரம் வேண்டுமோ கேள்” என்றான். அப்போதும் கர்ணன் “மறு பிறவி என்று ஒன்று வேண்டாம். அப்படி […]
புரட்டாசி சனிக்கிழமை பூஜை முறைகள்

புரட்டாசி சனிக்கிழமை பூஜைக்குரிய பொருட்களை முன்னதாகவே சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும். திருமலை வெங்கடேசப் பெருமாளின் படம் ஒன்றை வைத்து மாலை சூட்டி, வெங்கடேச அஷ்டகம் சொல்லிப் பூஜை செய்ய வேண்டும். சிலர் வெங்கடேசப் பெருமாளின் முகத்தை மட்டும் வைத்து பூஜை செய்வதுண்டு. துளசியால் பெருமாளை அர்ச்சிப்பது மிகவும் உகந்தது.மாவிளக்கிட்டு பூஜை செய்வதானால் பச்சரிசி மாவை தூய உடலோடும், மனதோடும் இருந்து சலித்து, மாவினாலே விளக்கு செய்து அதில் நெய் விட்டு தீபமேற்ற வேண்டும். பெருமாள் படத்தின் […]
குரு தோஷம் நீக்கும் குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள்

தன் மகன் கசனுக்காக நலம் வழங்கும் நாராயணரை நோக்கி குரு பகவான், தவம் செய்த சிறப்பு மிக்க தலம் தான் சித்திர ரத வல்லப பெருமாள் கோவிலாகும். மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகிலுள்ள குருவித்துறையில் அமைந்துள்ளது இக்கோவில், சுமார் 1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த இத்திருத்தலத்தில் குரு பகவானும், சக்கரத்தாழ்வாரும் சுயம்பு மூர்த்தியாக அமர்ந்து அருள் பாலிக்கிறார்கள். இக்கோவில் வரலாறானது குரு பகவான் தன் மகனுக்காக வைகை நதிக்கரையில் தவம் மேற்கொண்டு வந்தார் அப்போது குருவின் தவத்தால் மகிழ்ந்த […]
திருப்பதி பிரம்மோற்சவத்தின் 4-ம் நாளான நேற்று காலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பர் கற்பகவிருட்ச வாகனத்தில் மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்

இதில் யானை, குதிரை, காளை ஆகிய பரிவட்டங்கள் முன்னால் செல்ல, பல்வேறு மாநிலநடனக் கலைஞர்கள் மாட வீதிகளில் நடனமாடியவாறு சென்றனர். இதைத்தொடர்ந்து இரவு சர்வபூபால வாகனத்தில் உற்சவ மூர்த்திகள் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். பிரம்மோற்சவத்தின் 5-ம் நாளான இன்று காலை மோகினி அலங்காரத்தில் மலையப்பரும், ஸ்ரீ கிருஷ்ணரும் கோயில் முகப்பு கோபுர வாசலில் இருந்து வெளியே வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பர். பின்னர் 4 மாட வீதிகளில் ஊர்வலமாக வந்துஅருள் பாலிப்பர். இதைத்தொடர்ந்து இன்று இரவு […]
விநாயகர் சஷ்டி விரதம்
இவ்விரதம் கார்த்திகை மாதம் வளர்பிறை பிரதமை முதல் தொடங்கி மார்கழி மாதம் வளர்பிறை சஷ்டி வரை மொத்தம் 21 நாட்கள் கடைப்பிடிக்கப்படுகிறது. இவ்விரத முறையில் ஆண்கள் வலக்கையிலும், பெண்கள் இடக்கையிலும் 21 இழைகளாலான காப்பினைக் கட்டிக் கொள்கின்றனர்.முதல் 20 நாட்களும் ஒரு வேளை மட்டும் உணவினை உட்கொள்கின்றனர் விரதமிருப்போர் கடைசிநாள் முழுஉபவாசம் மேற்கொள்கின்றனர். விரதத்தின் நிறைவு நாள்அன்று பலவிதமான உணவுப்பொருட்களை தானமாகக் கொடுப்பர். இவ்விரதத்தின் பலனாக நல்ல வாழ்க்கைத்துணை, நற்புத்திரப்பேறு ஆகியன கிடைக்கும்.
விநாயகர் சதுர்த்தி பூஜை செய்வது எப்படி?

விநாயகர் சதுர்த்தி தினத்தன்று மண் அல்லது சந்தனத்தால் செய்யப்பட்ட விநாயகரை வைத்து வழிபாடு செய்ய வேண்டும். படமும் வைத்துக்கொள்ளலாம். வாசலில் கோலமிட்டு மாவிலை, வாழை தோரணம் கட்ட வேண்டும். பச்சரிசியை பரப்பி, அதில் விநாயகப் பெருமானின் களி மண் சிலையை வைக்க வேண்டும்.விநாயகரின் திரு மேனியில் வெடிப்பு, விரிசல், குறை ஏதும் இல்லாத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும். நிவேதனமாக அவல், பொரி, கடலை, கொழுக்கட்டை, சுண்டல் என்று படையல் செய்தல் வேண்டும். விநாயகர் துதிகளான சீதக்களப என […]
புரட்டாசி முதல் சனிக்கிழமை..விரதம் இருந்தால் தீரும் பிரச்சனைகள்

இன்று புரட்டாசி முதல் சனிக்கிழமை. புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்து பெருமாளை வழிபட்டால் எல்லா விதமான துன்பங்களும் நீங்கும் என்பது ஐதீகமாகும்.ஆடி வெள்ளிக்கிழமைக்கும், ஆவணி ஞாயிற்றுக்கிழமைக்கும் எந்த அளவுக்கு சிறப்புகள் உண்டோ அதை விட அதிக சிறப்புகள் கொண்டது புரட்டாசி சனிக்கிழமை ஆகும்.புரட்டாசி சனிக்கிழமைதான் சனி பகவான் அவதரித்தார். எனவே சனிக்கிழமை விரதம் இருந்து மகா விஷ்ணுவை வழிபட்டால் சனியால் ஏற்படும் பாதிப்புகள் வரவே வராது. சனிக்கிழமையன்று விரதம் இருந்து பச்சரிசி மாவு, வெல்லம், ஏலக்காய் கலந்த […]