சோகம் தீர்க்கும் சோமவார விரதம்

திங்கட்கிழமையை குறிக்கும் சொல்லுக்கு சோமவாரம் என்று பெயர். கார்த்திகை திங்கட்கிழமையான சோமவாரத்தில் சிவபெருமானை விரதமிருந்து வழிபடுவது சிறப்புக்குரியது.திங்கட்கிழமையை குறிக்கும் சொல்லுக்கு சோமவாரம் என்று பெயர். இந்த நாளில் சிவபெருமானை வழிபடுவது சிறப்புக்குரியது. சோம என்பதற்கு பார்வதியுடன் கூடிய சிவபெருமான் என்றும், சந்திரன் என்றும் பொருள்.சாபத்தின் காரணமாக நோயில் விழுந்த சந்திரன், தன் சாபமும், நோயும் நீங்க சிவபெருமானை நினைத்து தவம் இருந்தான். அதன் பயனாக அவன் நோய் நீங்கப்பெற்றான். மேலும் நவக்கிரகங்களில் ஒருவராகும் வாய்ப்பையும் பெற்றான். அவன் […]

யானையிடம் ஆசீர்வாதம் வாங்குவது ஏன்-?

தினமும் மூலிகை தாவரங்களை மட்டும் உண்டு மிருகங்களில் பலமுள்ளதாக திகழும் உயிரினம் யானை! மகத்தான தெய்வீக அம்சங்கள் பொருந்தியது. உலகில் வாழும் உயிரினங்களில் இரண்டு நாசித் துவாரங்கள் வழியாகவும் ஒரே நேரத்தில் சுவாசிக்கும் தன்மை யானைக்கு மட்டுமே உண்டு. மனிதர்களாகிய நமக்கு கூட தினமும் 24 நிமிடங்களுக்கு ஒருமுறை நம்முடைய சுவாசமும் ஒரு நாசித் துவாரத்திலிருந்து இன்னொரு நாசி துவாரத்தில் மாறிக்கொண்டே இருக்கும்.சுவாசத்தை கட்டுப்படுத்தும் மற்றும் முறைப்படுத்தும் ஆன்மீக முயற்சிகளுக்கு சரகலை என்று பெயர்.பிராணயாமம், வாசியோகம் போன்றவைகளும் […]

வீட்டில் மயிலிறகை வையுங்கள்

மயிலிறகை வீட்டில் வைக்க சிறந்த திசை என்றால் அது கிழக்கு திசை தான். வேண்டுமானால் வடமேற்கு திசையிலும் மயிலிறகை வைக்கலாம்ஜாதகத்தில் ராகு தோஷம் உள்ளவர்கள், மயிலிறகை வீட்டின் வடமேற்கு திசையில் வைத்தால், ராகு தோஷத்தால் ஏற்படும் தாக்கம் குறையும்.மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்க வேண்டுமானால், மயிலிறகை பாட புத்தகம் அல்லது படிக்கும் மேஜையின் மேல் வைத்துக் கொள்வது நல்லது. இதனால் மனதை ஒருநிலைப்படுத்தி, படிப்பில் முழு கவனத்தை செலுத்த முடியும்.வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகமாக சுற்ற வேண்டுமானால், […]

சங்கடங்கள் தீர்க்கும் சங்கு வளையல்

பெண்கள் பொதுவாகவே மகாலக்ஷ்மியின் அம்சம் என்று சொல்லப்படுபவர்கள்தான். பெண்களுக்கு இருக்கக்கூடிய சக்தியை மேலும் வலுப்படுத்த, பெண்கள் தங்களுடைய இரு கைகளில் இந்த வளையலை போட்டுக் கொண்டாலே போதும்.கண்ணாடி வளையல்கள், தங்க வளையல்கள், பஞ்சலோக வளையல்கள், பித்தளை வளையல்கள் என்று பலவகையான உலோகங்களில் செய்யப்பட்ட வளையல் இருக்கத்தான் செய்கின்றது.இவைகளையும் தாண்டி இன்றைய சூழ்நிலையில் பிளாஸ்டிக், ஃபைபர், மெட்டல், என்று பல ரகங்களில் வளையல்கள் வந்துவிட்டது. இருப்பினும் பெண்களுடைய கைகளுக்கு அழகு சேர்ப்பதோடு, லட்சுமி கடாட்சத்தையும் கொடுக்கக்கூடிய ஒரு வளையலை […]

அஷ்டதிக்கு பாலகர்கள் யார்?வழிபடுவதால் பலன்கள் என்ன…?

கிழக்கு, தென்கிழக்கு, தெற்கு, தென்மேற்கு, மேற்கு, வடமேற்கு, வடக்கு, வடகிழக்கு ஆகியவற்றையே எண் திசைகள் என்கிறோம். இந்த எண்திசைகளுக்குரிய அதிபதிகளாக முறையே இந்திரன், அக்னி தேவன், எமன், நிருதி, வருண தேவன், வாயு தேவன், குபேரன், ஈசானன் விளங்குகின்றனர்.அஷ்டதிக்கு பாலகர்கள் நாம் செய்யும் ஒவ்வொரு செயல்களையும் கண்காணிக்கின்றனர். இவர்கள் உயிர்களின் செயல்களுக்கு சாட்சியாக இருப்பதாகவும் நம்பப்படுகிறது. இவர்களை வணங்கினால் எல்லா வளங்களும் கிடைப்பதாக ஐதீகம்.அஷ்டம் என்ற சொல்லுக்கு ‘எட்டு’ என்று பொருள். எட்டு திசைகளுக்கு உரிய காவலர்களையே, […]

விபூதியால் நெற்றியில் போடும் 3 கோடுகளின் மகிமை

முதல் கோடுஅகாரம், கார்ஹபத்யம், ரிக்வேதம், பூலோகம், ரஜோகுணம், ஆத்மா, க்ரியாசக்தி, அதிகாலை மந்திரத்தின் தேவதை மஹாதேவன் ஆகியவை அடங்கியது.இரண்டாவது கோடுஉகாரம், தக்ஷிணாக்னி, ஆகாயம், யஜுர்வேதம், சத்வகுணம், பகல்நேர மந்திரதேவதை இச்சாசக்தி, அந்தராத்மா, மகேஸ்வரன் ஆகியோர் இதில் உள்ளனர்.மூன்றாவது கோடுமகாரம், ஆஹவனீயம், பரமாத்மா, தமோகுணம், சுவர்க்கம், ஞானசக்தி, ஸாமவேதம், மாலைநேர மந்திர தேவதை, சிவன் ஆகியோர் இதில் உள்ளனர்.

நாகவழிபாடு செய்யும் முறைகள்

புற்று இருக்கும் இடத்தைச் சுற்றி முதலில் சாணத்தால் மெழுகிக் கோலமிட வேண்டும். தினமும் காலையும், மாலையும் விளக்கேற்றிப் பால் வைத்து வழிபடுவது மிகவும் நல்லது. சூடம் ஏற்றி வழிபாடு செய்து புற்றுக்குப் பால் ஊற்றினால் நல்லது நடக்கும்.புற்று முழுவதும் மஞ்சளைப் பூசி, அங்கங்கே குங்குமப் பொட்டு வைப்பது தமிழ்நாட்டில் சில இடங்களில் வழக்கமாக உள்ளது. சில பெண்கள் புற்றுக்கு முன்பாகப் பொங்கல் இட்டு படைப்பதுண்டு தங்களது வேண்டுதல்கள் நிறைவேறப் பிரார்த்தித்து மஞ்சள் நிற எலுமிச்சையை புற்றின் மீது […]

1500 ஆண்டு பழமையான வேலூர் ஜலகண்டேஸ்வரர் திருக்கோவில்

வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவிலில் இருக்கும் கிணற்றில் உள்ள தண்ணீரானது, கங்கை நதிக்கு இணையாக கூறப்படுகிறது. ஈஸ்வரலிங்கம் லேசான கூம்பு வடிவத்தில் காணப்படுகிறது. ஜலகண்டேஸ்வரர் வீற்றிருக்கும் வேலூர் என்ற ஊரானது வேலங்காடு என்ற புராண பெயரைக் கொண்டது. இந்த கோவில் சுமார் 1,500 ஆண்டுகள் பழமையான கோயிலாக கருதப்படுகிறது. இத்தலத்தில் உள்ள லிங்கம் சப்தரிஷிகளில் ஒருவரான அத்திரி என்பவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது.இந்த சிவலிங்கத்திற்கு கீழே தண்ணீர் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இங்கு அருள்பாலிக்கும் சிவபெருமானுக்கு ஜலகண்டேஸ்வரர் என்ற பெயர் […]

குரோம்பேட்டை சிவன் கோவில்களில் அன்னாபிஷேக விழா

குரோம்பேட்டையில் உள்ள சிவன் கோவில்களில் ஐப்பசி மாத அன்னாபிஷேகத்தை முன்னிட்டு புருஷோத்தம நகர் விஜய கணபதி லட்சுமி நாராயண பெருமாள் ஆலயத்தில் காசி விஸ்வநாதர் அன்னாபிஷேக அலங்காரத்திலும், காந்திஜி நகர் துர்க்கை அம்மன் ஆலயத்தில் அமிர்தகடேஸ்வரர் அன்னாபிஷேக காட்சியிலும், ராதா நகர் ஸ்ரீ ராமசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் காசி விஸ்வநாதர் அன்னாபிஷேக காட்சியிலும், பத்மநாப நகர் கருமாரியம்மன் ஆலயத்தில் சுந்தரேஸ்வரர் ஸ்ரீ ரங்கநாதர் அன்னாபிஷேக அலங்காரத்திலும் கருமாரியம்மன் பவுர்ணமி அபிஷோகம் அலங்காரம் செய்து பக்தர்களுக்கு காட்சியளித்த போது […]

நவக்கிரகங்கள் இல்லாத சிவாலயங்கள் பற்றி தெரியுமா?

மும்மூர்த்திகளில் ஒருவரான சிவபெருமான் சைவசமயத்தின் முழுமுதற் கடவுளாக போற்றப்படுகிறார்.படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் ஐந்து பணிகளுக்கும் அடிப்படையான ஓம் என்ற பிரணவ மந்திரத்தை உருவாக்கிய சிவபெருமான் அருவம், அருவுருவம், உருவம் என மூன்று வடிவங்களில் காட்சியளிக்கிறார்.தமிழகத்தில் அனைத்து சிவாலயங்களிலும் நவக்கிரக சன்னதி இருக்கும்.சிவாலயங்களில் நவக்கிரகங்கள் இல்லை என்றால் அதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுவது எங்கெல்லாம் சிவனை எமன் வழிபட்டுள்ளாரோ அங்குள்ள சிவன் ஆலயங்களில் நவக்கிரக சன்னதி இருக்காதாம்.அப்படி நவக்கிரக சன்னதி இல்லாத 11 சிவாலயங்கள் […]