இந்திராணி

இந்திரனின் அம்சமான இத்தேவி அம்பிகையின் தனஸ்தானத்திலிருந்து தோன்றியவள். இத்தேவி மகேந்திரி, ஐந்திரி என்று போற்றப்படுகிறாள்.பொன்னிற மேனியளான இவ்வம்மை யானையைக் கொடியாகவும், வாகனமாகவும் உடையவள். இத்தேவி பின்னிரு கரங்களில் சக்தி ஆயுதமும், வஞ்சிராயுதமும் கொண்டும், முன்னிரு கைகளில் அபயவரத முத்திரை காட்டியும் அருள்புரிகிறாள்.இரத்தின கிரீடம் தரித்த இவ்வம்மையை வழிபட உயர்ந்த பதவிகள், அரச சம்பத்துக்கள், சொத்து சுகம், நல்ல வாழ்க்கைத்துணை ஆகியவற்றை அருளுவாள்.

சிலுவை வடிவ தேவாலயம்

இது தனிப்பாறைகளால் அமைக்கப்பட்ட 11 தேவாலயங்களில் ஒன்றாகும். கிரேக்க சிலுவை சின்னத்தின் அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. எத்தியோப்பியாவின் அம்காரா நகரில் லலிபெலா என்ற இடத்தில் அமைந்துள்ளது. இந்த புனித ஜார்ஜ் தேவாலயம். இது தனிப்பாறைகளால் அமைக்கப்பட்ட 11 தேவாலயங்களில் ஒன்றாகும். இந்த ஆலயம் ஒருவித ஒன்றை சுண்ணாம்புக்கல் பாறையைக் குடைந்து செதுக்கப்பட்டுள்ளது. 12 அல்லது 13-ம் நூற்றாண்டில், கெம்ரே மெஜ்கல் லலிபெலா அரசின் கீழ் இந்த தேவாலயம் அமைக்கப்பட்டிருக்கிறது. யுனெஸ்கோ அமைப்பால் உலக பாரம்பரிய நினைவுச்சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த […]

சாம்பிராணி தூபமிட்டால் வீட்டில் லட்சுமி கடாட்சம் கிடைக்கும்

சாம்பிராணிப் புகை, உடலில் எந்த நோயும் அணுகாமல் காக்கும். தலையில் இந்தப் புகையைக் காட்டினால், தலைமுடி கறுப்பாக வளரும். மேலும் பெண்களின் கருப்பை சார்ந்த பாதிப்புகளையும் சரி செய்யும்.சாம்பிராணிப் பிசினில் உள்ள வேதிப்பொருட்கள், புற்றுநோயைத் தீர்க்கும் என ஆய்வுகள் கூறுகின்றன. இதனால் தான் நம் முன்னோர்கள், எண்ணெய் தேய்த்துக் குளித்ததும் வீடுகளில் சாம்பிராணியைப் போடச் சொன்னார்கள். வீடுகளில் அடிக்கடி சாம்பிராணிப் புகையைக் காட்டினால் நச்சுக்கிருமிகள் அழிந்து விடும்.சாம்பிராணி சிறந்த கிருமிநாசினி. இது உடைந்த எலும்புகளை இணைக்கும். சிறுநீரகப் […]

கற்பூரத்தை வீட்டில் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்

வீட்டில் வாஸ்து தோஷம் இருந்தால், அனைத்து அறைகளின் மூலையிலும் கற்பூரத்தை ஒரு மஞ்சள் துணியில் சுற்றி வைக்க வேண்டும். இதனால் வீட்டில் வசிப்பவர்களை வாஸ்து தோஷங்கள் பாதிக்காது. வீட்டில் தினமும் காலையிலும், மாலையிலும், கற்பூரத்தை பசு நெய்யில் நனைத்து வீடு எங்கும் தெளிக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் வாஸ்து தோஷங்கள் நீங்கி வீட்டில் மகிழ்ச்சியும், அமைதியும் நிலவும்.இரவில் சமையலறை வேலைகளை முடித்துவிட்டு சுத்தமான பாத்திரத்தில் கிராம்பு மற்றும் கற்பூரத்தை சேர்த்து ஒன்றாக எரிப்பதன் மூலம் பல […]

மாசி மகம் புனித நீராடி விரதம் இருந்தால் கிடைக்கும் பலங்கள்

பித்ரு தோஷம் நீங்கும் பித்ரு தோஷ நிவர்த்திக்கு அருமையான பரிகார தினம் மாசிமகம். இதனால், மாசிமகத் தீர்த்தவாரியின்போது நீராடினால் பலவித நன்மைகள் கிடைக்கும். மாசிமகத்தன்று பிரசித்திபெற்ற புண்ணிய தலங்களில் உள்ள ஆறு, கடல், குளம் போன்ற தீர்த்தங்களில் நீராட வேண்டும். ராமேஸ்வரம், தஞ்சை மாவட்டம் திருவையாறு, கும்பகோணம், நாகை மாவட்டம் வேதாரண்யம் போன்ற இடங்களில் நீராடி தர்ப்பணம் பிதுர்க்கடன் செய்வதன் மூலம் பித்ரு தோஷம் நீங்கும். பித்ரு தோஷ நிவர்த்திக்கு அருமையான பரிகார தினம் மாசிமகம். இதனால், […]

தெய்வீக சக்கரங்கள்

1.சிதம்பரம்- இரகசியம் இடம்- திருவம்பலச்சக்கரம் எனும்’சிதாகாச சக்கரம்2.திருக்கடையூர் – காலசம்ஹார மூர்த்தி சன்னதி -மிருத்யுஞ்ஜய யந்திரம்3.திருவானைகாவல் – அகிலேண்டேஸ்வரி செவியின் தாடங்கள்- ஸ்ரீசக்கரம்,4.மாங்காடு- மூலக்காமாட்சி-‘ மூலிகைகளான அர்த்தமேரு5.விழுப்புரம்- அனந்தபுரம் தண்டாயுதபாணி -ஸ்ரீசக்கரம்,6.காஞ்சிபுரம் – காமாட்சியம்மன் -‘ ஸ்ரீசக்கரம்7.திருத்தணி – முருகன் பாதம்- சடாட்சரச் சக்கரம்,8.திருப்போரூர் கந்தசாமி- ‘ஸ்ரீசக்கரம்’,9.கங்கைகொண்ட சோழபுரம்- 8 கோள்கள்- 12 ராசிகள்- கமலயந்திரம்- சூரியசக்கரம்’,10.திருச்செந்தூர்- முருகன் மார்பில்- ஷடாட்சரம்11.திருவாரூர்- தியாகராஜர்மார்பு-‘ஸ்ரீசக்கரம்’,12.சிதம்பரம்- அன்னாகர்ஷண யந்திரம்.13.கொல்லூர் மூகாம்பிகை-ஸ்ரீஸ்ரீசக்கரம்,14.திருவிடைமருதூர்- ஸ்ரீஸ்ரீசக்கரம்,15.திருவொற்றியூர்- ஸ்ரீஸ்ரீசக்கரம்,16.விழுப்புரம்- ஸ்ரீஸ்ரீசக்கரம்17.காருகுடி- திடசிந்தனை-காலசக்கரம்

கல் உப்பை பூஜை அறையில் வைப்பதால் கிடைக்கும் நன்மைகள்

கல் உப்பு என்பது பாற்கடலில் இருந்து எடுக்கப்படுவதால், ஆன்மிகத்தில் மகாலட்சுமிக்கு இணையாக பார்க்கப்படுகிறது. பாற்கடலில் வீற்றிருக்கும் மகாலட்சுமியின் பாதம்பட்ட இந்த கல் உப்பு வீட்டில் இருந்தாலே, அந்த வீடு சுபிட்சம் பெறும் என்பது ஐதீகம். அதனால் தான் நம் முன்னோர்கள் சாதாரண உப்பை விட கல் உப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்தனர்.தூள் உப்பை தவிர்த்து விட்டு இன்றே கல் உப்பை பயன்படுத்த துவங்குங்கள். கல் உப்பை வெள்ளிக் கிழமைகளில் வாங்குவது சகல, சவுபாக்கியங்களையும் பெருக செய்யும் […]

அஷ்டமி நாளில் பைரவரை வணங்குங்கள்

அகங்காரத்தை அழிக்கும் கடவுளாகவும், சுக்கிர தோஷத்தை நீக்கும் இறைவனாகவும் பைரவர் விளங்குகிறார். அஷ்டமி நாளில் இவரை வணங்கினால் எண்ணியது நடக்கும். தடைகள் யாவும் விலகும்.ஏழரைச் சனி, அஷ்டமச் சனி யாவும் பைரவரை வணங்கினால் நன்மையாக முடியும். தாமரை, வில்வம், தும்பை, செவ்வந்தி, சந்தன மாலைகள் பைரவருக்கு விருப்பமானவை. பரணி நட்சத்திரத்தில் பைரவர் அவதரித்தார். எனவே அந்த நட்சத்திரக்காரர்கள் இவரை வணங்கினால் நல்லது.பைரவருக்கு நள்ளிரவு பூஜையே உகந்தது எனப்படுகிறது. எனினும் உச்சி காலம் எனப்படும் நண்பகல் பூஜை சிறப்பானது. […]

அர்ச்சனை பொருட்களும் அர்த்தங்களும்:

அர்ச்சனை, ஆராதனை இரண்டும் இறைவனுக்கு மிக முக்கியமாகும். எங்கும், எதிலும் நிறைந்தவன் இறைவன். நிம்மதி தேடி கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் சாமிக்கு அர்ச்சனை செய்ய தேங்காய், வாழைப்பழம் என நிறைய பூஜை பொருட்கள் வாங்கி சென்று இறைவனை தரிசித்து வருகின்றனர். இறைவனுக்கு ஏன் அர்ச்சனை பொருட்களை வைத்து படைக்கின்றனர் என்று தெரிந்துக் கொள்வது அவசியமாகும்.தேங்காய் :தேங்காயின் ஓடு மிகவும் வலுவாகவும், கடினமாகவும் இருக்கும். அதை இரண்டாக உடைக்கும் போது வெண்மையான தேங்காய் பருப்பும், இனிமையான தண்ணீரும் கிடைக்கின்றது. […]

எதிரிகள் தொல்லை விலக வழிபடவேண்டிய கோவில்

அருணகிரிநாதர் இத்தல முருகனை குறித்து திருப்புகழ் பாடி உள்ளார். முருகப்பெருமான் சூரனை அழித்து தேவர்களை காத்தார். அம்மனின் 64 சக்தி பீடங்களில் சிக்கல் சிங்காரவேலவர் கோவிலும் ஒன்று. விசுவாமித்திரர், அகத்தியர், காத்தியாயனர், நாரதர், முசுகுந்த சக்கரவர்த்தி ஆகியோர் இத்தலத்தில் வழிபாடு செய்து உள்ளனர். சிவன், பெருமாள், முருகன், அனுமன் என 4 பேரும் இத்தலத்தில் அருள்பாலிப்பது இக்கோவிலின் சிறப்பாகும். அருணகிரிநாதர் இத்தல முருகனை குறித்து திருப்புகழ் பாடி உள்ளார். கோச்செங்கட் சோழன் கட்டிய 72 மாட கோவில்களில் […]