யோக நிலையில் காட்சி தரும்கல்வி தெய்வம் ஹயக்ரீவர்

கல்வி தெய்வமான ஹயக்ரீவர், சென்னைக்கு அருகே, செங்கல்பட்டு அருகிலுள்ள செட்டிபுண்ணியம் தேவனாத பெருமாள் கோயிலில், யோக நிலையில் காட்சி தருகிறார்.இவரை மாணவர்கள் தரிசித்தால், நினைவாற்றல் பெருகி, நல்ல மதிப்பெண் பெற வாய்ப்பு கிடைக்கும். 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலுக்கு, 1848, கடலூர் அருகிலுள்ள திருவஹீந்திரபுரத்திலிருந்து ஹயக்ரீவர் சிலையை எடுத்து வந்தனர்.அந்த சிலையை வைகாசி மக நட்சத்திரத்தில், செட்டிப் புண்ணியத்தில் பிரதிஷ்டை செய்தனர். பின்னர் தாயார் ஹேமாம்புஜவல்லி ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் ஆண்டாள் சந்நிதிகள் அமைக்கப்பட்டன. […]
காலபைரவர் பற்றி சில சுவாரஸ்ய தகவல்கள்

சிவன் ஸ்தலங்களில் கால பைரவர் சன்னதி கண்டிப்பாக இருக்கும். இவருக்கென தனி சன்னதிகளும் உண்டு. நம்மை காத்து நிற்கும் கடவுளாக நமக்கு எப்போதும் பாதுகாப்பாக இருப்பவராக விளங்குபவர் காலபைரவர். இவரைப் பற்றிய சில சுவாரசியமான தகவல்களை பார்ப்போம்.தினந்தோறும் காலையில் பைரவரை வழிபட்டால் நோய் நீங்கும். மதியம் வழிபட்டால் நாம் நினைத்தவை நடக்கும், விரும்பியவை நிறைவேறும், மாலையில் வழிபட்டால் பாவம் தீரும். இரவில் வழிபட்டால் வாழ்வு வளம் பெறும்.காலபைரவருக்கு பிடித்தமானது சந்தன காப்பு ஆகும். இதில் புனுகு, அரகஜா […]
கடன் பிரச்சனையை தீர்க்கும் குளிகை நேரமும்… கிழமையும்…

குளிகை நேரத்தில் கடனில் ஒரு பகுதியை கொடுத்தால் விரைவில் கடன் பிரச்சனை தீரும். எந்த கிழமையில் வரும் குளிகை நேரத்தில் கடனை அடைக்கலாம் என்று அறிந்து கொள்ளலாம். தீராதக் கடன் தொலையில் தவிப்பவர்களுக்கு தினமும் வரும் குளிகை நேரத்தில் கடனை அடைத்தால் அதாவது நீங்கள் ஒருவருக்கு பத்தாயிரம்ரூபாய் தர வேண்டும் என்றால் அதில் 2000 ரூபாய் கொடுத்தால் வாங்கிக் கொள்வார்கள் என்றால் அந்தத் தொகையை நீங்கள் இந்த குளிகை நேரத்தில் கொடுத்தால் கடன் விரைவில் அடைக்கப்படும். இது […]
காரடையான் நோன்பு இருப்பது எப்படி?

பாராசர முனிவர் ஆலோசனைப்படி மாத்ர நாட்டு மன்னன் அசுவபதி சாவித்ரி விரதம் செய்ய அவன்முன் தோன்றிய சாவித்ரி தேவி, மன்னன் மனைவி மாலதிக்கு தன் அம்சமாக ஒர் மகளாக ஜனிக்க அருள் கொடுத்தார். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கிய சாவித்ரி மணப் பருவத்தில் துயிமதிதேசன் மகன் சத்யவானின் குணவிசேஷங்களைக் கேள்விப்பட்டு அவனைப் பார்க்காமலேயே காதல் கொண்டாள். அவன் அற்ப ஆயுள் உள்ளவன் என நாரதர் சொல்லியும் தன் எண்ணத்தை மாற்றிக் கொள்ளவில்லை. சத்யவானின் பெற்றோர்கள் பார்வை இழந்து […]
காய்கறிகள் தானத்தால் சாபம் விலகும்

காய்கறிகள் தானம் செய்தால் பித்ரு சாபங்கள் விலகும். குழந்தைகளின் ஆரோக்யம் வளரும்.கோவில்களில் தெய்வத் திருமணங்கள் நடைபெறும் போது அன்னம் பாலிப்புக்கு காய்கறிகளை வாங்கித் தந்துவிடலாம். இதெல்லாம் பணமாக இல்லாமல் நீங்கள் பொருளாகவே வாங்கித் தரலாம்.
விளக்கை எந்த முறையில் அணைக்க வேண்டும்

விளக்கை எக்காரணத்தைக் கொண்டும் வாயால் ஊதி அணைக்கக் கூடாது. கையால் வீசியும் அணைக்கக்கூடாது. புஷ்பத்தைக் கொண்டும் குளிரவைக்கக்கூடாது. புஷ்பத்தை நெருப்பில் கருகக்கூடாது. திரியை உட்பக்கமாக இழுத்துக் குளிர வைப்பதே நன்மை தரும்.விளக்கில் பயன்படுத்தப்படும் திரியும் அவற்றின் பயன்களும் பற்றியும் தெரிந்து கொள்ளலாம். பஞ்சுத் திரி -மகிழ்ச்சி உண்டாகும். தாமரைத் தண்டு திரி – நிலைத்த செல்வம் உண்டாகும். வாழைத் தண்டு திரி – மன அமைதி உண்டாகும்.மஞ்சள் துணித் திரி – செய்வினை கோளாறுகள் நீங்கும். சிவப்பு […]
ருத்ராட்சத்தின் பலன்கள்

ருத்ராட்ச முகங்களும் அதன் பலன்களும்.ஏக முக ருத்ராட்சத்தின் அதிதேவதை பரமசிவன். இதை அணிவதால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்.இரண்டு முக ருத்ராட்சத்தின் அதி தேவதை ஸ்ரீகண்ட பரமசிவம். இதை அணிவதால் பசுவைக் கொன்ற பாவம் விலகும். பொருட் செல்வம் பெருகும்.மூன்று முக ருத்ராட்சத்தின் அதி தேவதை அக்னி தேவன். மும்மூர்த்திகளும் சந்தோஷம் அடைவர். ஸ்திரீகளுக்குச் செய்த தோஷம் விலகும்.நான்கு முக ருத்ராட்சத்தின் அதி தேவதை பிரம்மா. மனிதர்களுக்கு இழைத்த பாவம் விலகும்.ஐந்து முக ருத்ராட்சத்தின் அதி தேவதை காலாக்னி […]
வீட்டில் செல்வம் நிலைத்து நிற்க

நீங்கள் குடியிருக்கும் வீட்டில் வட கிழக்கு பகுதியில் கிணறு, நெல்லி மரம், வில்வ மரம் இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் அந்த வீட்டில் லட்சுமி கடாட்சம் ஏற்படும்.ஒவ்வொரு மாதமும் வரும் பௌர்ணமி அன்று சத்திய நாராயண பூஜை செய்து வந்தால் செல்வங்களை பெறலாம். ஐப்பசி மாத வளர்பிறையில் மகாலட்சுமி வழிபட வேண்டும். நமது உள்ளங்கையில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள் என சாஸ்திரம் சொல்கிறது. எனவே காலையில் எழுந்ததும் நம் உள்ளங்கையில் கண்விழிப்பது மகாலட்சுமி முகத்தில் விழிப்பதற்கு சமம்.அதேபோல […]
முருகனுக்கு உகந்த செவ்வாய் கிழமை

உருவாய் அருவாய், உளதாய் இலதாய்மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்குருவாய் வருவாய், அருள்வாய் குகனே.வருவாய் அதிகரிக்க வேண்டு மானால் செவ்வாய்க்கிழமை விரதம் இருக்க வேண்டும்.பொருளாதார நிறைவை வழங்குவது அங்காரகன்தான். அந்த அங்காரகனுக்குரிய தெய்வமாக விளங்குவது முருகப்பெருமான் மற்றும் சக்தி தேவி.முருகப்பெருமான், சக்தி தேவி, அம்பிகைக்கு உகந்த நாளான செவ்வாய்கிழமையில் இந்த தெய்வங்களை வணங்கினால் கவலைகள் அகலும்.செந்நிற ஆடை அணிந்து வழிபாட்டில் பங்கேற்பது; நைவேத்தியமாக அன்றை தினம் தங்குதடை இல்லாத வாழக்கையும், தன்னிகரில்லாத அளவு புகழும், […]
சங்கடஹர சதுர்த்தி விரதம் இருந்தால் குடும்பத்தில் சுபீட்சம் பெருகும்

சங்கடஹர சதுர்த்தி நாளில் விரதம் இருந்தால் குடும்பத்தில் சுபீட்சம் பெருகும் தடைகளின்றி எல்லா காரியங்களும் வெற்றியடையும்.சங்கடஹர சதுர்த்தி விரதமிருப்பவர்கள், அன்றைய நாள் அதிகாலையில் எழுந்து நீராடி பிள்ளையார் கோவிலுக்கு சென்று 11 முறை வலம் வர வேண்டும். அதன் பின்பு பிள்ளையாருக்கு அருகம்புல் சாற்றி, தேங்காய் உடைத்து, அர்ச்சனை செய்து வழிபட்டு வரலாம். வழிபாடு முடிந்தவுடன் தலையில் குட்டிக் கொண்டு, தோப்புக்கரணம் போட வேண்டும்.சதுர்த்தி விரதம் மேற்கொள்பவர்கள் பித்ரு தோஷத்தில் இருந்து நீங்க அன்றைய நாளில் கோவிலுக்கு […]