பஞ்சபூதத் தலங்களில் அக்னித் தலமாகவும் குறிப்பிடப்படும் திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஒன்பது கோபுரங்கள் உள்ளன. மேலும் ஆறு பிரகாரங்கள், 142 சன்னதிகள், 22 பிள்ளையார்கள், 306 மண்டபங்கள், 1000 தூண்கள் கொண்ட ஆயிரங்கால் மண்டபம் உள்ளன.இத்தலம் பஞ்சபூதத் தலங்களில் அக்னித் தலமாகவும் குறிப்பிடப்படுகிறது. தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 233வது தேவாரத்தலமாகும்.“அருணம்” என்றால் “சிவப்பு நிறத்தில் இருக்கும் நெருப்பு”. “சலம்” என்றால் “மலை”. சிவபெருமான் சிவப்பு நிறத்தில் எரியும் நெருப்பின் தன்மை […]

வீட்டில் அமைதி, செல்வம் நிலைத்து நிற்க

ஒருவருக்கு பணம் கொடுக்க வேண்டுமென்றால் வாசல்படியில் நின்று கொண்டு கொடுக்கக் கூடாது. கொடுப்பவரும், வாங்குபவரும் வாசல் படிக்கு உள்ளே இருந்து கொடுக்க/வாங்க வேண்டும்.செல்வம் நிலைக்க, விருத்தி அடைய, பணம் கொடுக்கல் வாங்கல், செவ்வாய் கிழமை, செவ்வாய் ஹோரையில் நடப்பது உத்தமம். கொடுப்பவருக்கு பணம் திரும்பக் கிடைக்கும். வாங்குபவரால் பணத்தை திரும்பக் கொடுக்க இயலும். திரும்ப கொடுப்பதும் செவ்வாய் ஹோரையில் நடப்பது நல்லது. வாசற்படி, உரல், ஆட்டுக்கல், அம்மி இவைகளில் உட்காரக்கூடாது.இரவு நேரங்களில் பால், மோர், தண்ணீர் அடுத்தவர்கள் […]

பச்சைப்பட்டினி விரதம் சமயபுரம் மாரியம்மன்

பக்தர்கள் அம்பாளை வேண்டி விரதம் இருக்கும் நடைமுறைக்கு மாறாக, குழந்தைக்குப் பத்தியம் இருக்கும் தாயின் கருணைப் பெருக்கால் உலக நன்மைக்காக அம்மனே பச்சைப் பட்டினி விரதம் காக்கிறாள் மாசி மாதக் கடை ஞாயிறு பூச்சொரிதல் விழாவுடன் இந்த விரதம் தொடங்கும் .பூச்சொரிதலின் போது அம்மனுக்குப் பூக்கள் வந்து குவியும்.சித்திரை, வைகாசி கத்திரி வெயிலின் தாக்கத்தைத் தாயாய் இருந்து தான் ஏற்றுக்கொண்டு,மக்களைக் குளிர வைக்கும் மாரித்தாயின் உடல் வெப்பத்தைத் தணிக்கவே பூமாரி பொழிந்தும், இளநீர், மோர், பானகம்,வெள்ளரிப்பிஞ்சு, துள்ளுமாவு […]

திருச்செந்தூர் முருகன் சிறப்பு

திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் என்று எடுத்துக் கொண்டாலே சந்தான பாக்கியம். குழந்தை பாக்கியத்திற்கு முதன்மையானத் தலம் திருச்செந்தூர்தான்.செந்தில் ஆண்டவர், குழந்தை வடிவத்தில், சிரித்த கோலத்தில் காட்சி கொடுக்கக்கூடிய ஒரு இடம். அதுவொரு பெரிய சிறப்பு.அடுத்து, பெரிய பெரிய மகான்கள் நக்கீரரிலிருந்து, ரிஷிகள், முனிவர்களுக்கெல்லாம் உபதேசம் செய்த இடம். அதனால் கல்விக்குரிய இடமும் அதுதான்.பையன் மிகவும் டல்லாக இருக்கிறான். கான்சண்ட்ரேட் பண்ணவதே இல்லை என்று சொன்னவர்களுக்கெல்லாம் திருச்செந்தூருக்குப் போகச் சொல்லி எவ்வளவோ பேருக்கு குணமாகியிருக்கிறது. அவர்களே வந்து நல்ல […]

பங்குனி உத்திர விரதம் எப்படி இருப்பது?

தமிழர் பாரம்பரியத்தில் எண்ணற்ற விழாக்கள் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு தமிழ் மாதமும் ஒவ்வொரு தெய்வத்திற்கு விழாக்கள் எடுக்கப்படுகின்றன.அந்த வரிசையில் தமிழ் மாதங்களில் கடைசி மாதமான பங்குனியில் கொண்டாடப்படுகின்ற விழாவே பங்குனி உத்திர விழாவாகும்.பங்குனி உத்திரம்தமிழ் மாதங்களில் 12-ஆம் மாதம் பங்குனியாகும் 12-ஆம் நட்சத்திரம் உத்திரம் ஆகும். இந்த இரண்டும் சேர்த்து வருகின்ற திருநாளே பங்குனி உத்திரம்.பன்னிருக்கை வேலவனுக்கு உகந்த நாளாக இந்நாள் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. ஆறுபடை வீடுகளிலும் விழா எடுத்து இந்நாளை கொண்டாடுகின்றனர்.பங்குனி உத்திர தெய்வ திருமணங்கள்பங்குனி […]

பூஜை அறையில் தண்ணீர் வைத்து வழிபடுவது ஏன்-?

வீட்டின் பூஜை அறையில் தினமும் ஒரு மண் பானை அல்லது செம்பு பாத்திரத்தில் தண்ணீர் வைப்பது மிகவும் நல்லது. இதனால் பல்வேறு நன்மைகள் ஏற்படும்.அதேப்போல் நாம் தினமும் பூஜை அறையில் அமர்ந்து இஷ்ட தெய்வத்தின் மூல மந்திரத்தை கூறி தியானம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால் நாம் சொல்லும் மந்திரத்தின் அதிர்வலைகள் அந்த தண்ணீரில் இறங்கும். பிறகு அந்த நீரை குடிப்பதால் நம் உடலுக்கு மிகவும் நல்லது.அதேப்போல் தினமும் பூஜை அறையில் ஒரு சிறிய பாத்திரத்தில் தண்ணீர் […]

மாங்கல்யம் அருளும் மகாசக்தி காத்யாயனி…!

குன்றத்தூர் முருகன் கோவில் அருகே பிரியும் திருநீர்மலை சாலையில் உள்ளது. கல்யாண வரம் தரும் காத்யாயனி அம்மன் கோவில்.திருமணம் தடைபடும் கன்னியர்கள், ஆண்கள் மூன்று முறை சென்று திருமண அர்ச்சனை செய்து பிரார்த்தனை செய்து வந்தால் திருமணம் உறுதியாகி ஆறுமாதத்தில் நடந்துவிடுகிறது.காத் என்றால் திருமணம் அயணம் என்றால் ஆறுமாதம்.குடும்ப பிரச்னை, உறவினர்களால் பிரச்னை,பொருளாதார பிரச்சனைகள் தீர்ந்து திருமணம் கைகூட இந்த அம்பிகையின் சன்னதியில் வெள்ளி, சனி, ஞாயிறு, செவ்வாய் ஆகிய தினங்களில் ஒரு நாளை எடுத்துக்கொண்டு மூன்று […]

ஆலயம் செல்வதால் அறிவியல் ரீதியாகஏற்படும் நன்மைகள்

கோயில் என்பது தெய்வத்தின் இருப்பிடம் மட்டுமில்லை. கோயில் என்பது விஞ்ஞானபூர்வமாக மனிதனுக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல நன்மைகள் செய்வதற்கான அமைப்பு.சாஸ்திரப்படி அமைக்கப்படும் கோயில்கள், பூமியின் காந்த அலைகள் அடர்த்தியாகப் பாயும் இடத்தில் அமைகின்றன.ஊர்க்கோடியிலோ, ஊர் நடுவிலோ, மலையுச்சியிலோ எங்காயினும் கோயிலுக்கென்று இடம் அந்தக் காலத்தில் அமைக்கப்பட்டது இந்த அடிப்படையில்தான்இந்த உயர் காந்த அலைகள் அடர்ந்திருக்கும் இடத்தின் மையப்பகுதியில் கர்ப்பக்கிருகம் (மூலஸ்தானம்) அமைக்கப்படுகிறது.கர்ப்பக்கிருகத்தில் மூல விக்கிரகத்தின் அடியில், உயரிய மந்திரங்கள் பொறிக்கப்பட்ட செப்புத்தகடுகளால் ஆன யந்திரங்கள் […]

மயிலை கற்பகாம்பாளுக்கு காசுமாலை வந்தது எப்படி?

மயிலாப்பூர் கற்பகாம்பாள் மீது பக்தி மிக்கவர் முத்துலட்சுமி பாட்டி. இவர் லலிதா சகஸ்ரநாமம், சவுந்தர்ய லஹரி போன்ற துதிகளை தினமும் அம்பாள் சன்னிதியில் படிப்பது வழக்கம். ஒருநாள் பாட்டியின் கனவில் தங்கக் காசு மாலை அணிந்து அம்பாள் காட்சி தந்தாள். அம்பாள் அருகில் காஞ்சிப்பெரியவர் இருந்தார். பாட்டி அம்பாளிடம், “ அம்மா! உனக்கேது தங்க காசுமாலை… காஞ்சி காமாட்சிக்குத் தானே மகாபெரியவர் மாலை பண்ணிப் போட்டார், என்று கேட்டார். அதற்குப் பெரியவர்,“நான் காமாட்சிக்குப் பண்ணினேன். கற்பகாம்பாளுக்கு உன்னைப் […]