ஸ்ரீ ராம நவமி ஸ்பெஷல் !

ராமர் பட்டாபிஷேகத்தின் போது,அனுமனின் திறமையையும், அவரது ராம பக்தியையும் உணர்ந்திருந்த சீதாதேவி, அனுமனுக்கு சிறப்பான ஒளி சிந்தும் முத்துமாலை ஒன்றை பரிசாக கொடுத்தார். அதனை ஆனந்தத்துடன் வாங்கிக் கொண்டார் அனுமன். பின்னர் அனைவரும் பார்க்கும் விதமாக அந்த முத்துமாலையை பிய்த்து அதில் ஒவ்வொரு முத்தாக கடித்து உடைக்க தொடங்கினார்.அது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. சீதாதேவியே ஒரு கணம் அனுமனின் செய்கையைக் கண்டு திகைத்துப் போனார். ஆஞ்சநேயருக்கு பித்து பிடித்து விட்டது என்று கூறி அனைவரும் பேசத் தொடங்கி […]
ராம நவமி விரதம் முறை…!!

ராம நவமி…விரதம் இருப்பவர்களின் கவனத்திற்கு…!!மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவரும் இந்த பூமியில் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு உதாரணமாக வாழ்ந்தவர் தான் ராமபிரான். தர்மத்தின் வழியில் சென்று அதர்மத்தை எப்படி அழிப்பது? ஒரு நாட்டை ஆளக்கூடிய அரசன் எப்படி இருக்க வேண்டும்? பெரியவர்களை எப்படி மதிக்க வேண்டும்? உடன்பிறந்தவர்களை எப்படி மதிக்க வேண்டும்? கட்டிய மனைவியை எப்படி நடத்த வேண்டும்? எதிரியை கூட எப்படி நண்பனாக பார்க்க வேண்டும்? இப்படியாக இந்த பூமியில் ஒரு மனிதன் எப்படி நல்ல […]
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தேர்தல் விதிமுறை அமலில் உள்ளதால் அரசியல் பிரமுகர்கள், மக்கள் பிரதிநிதிகள் சிபாரிசு கடிதங்களுக்கு விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது

இந்நிலையில் விஐபி தரிசனத்திற்காக திருமலையில் உள்ள செயல் அதிகாரி அலுவலகத்திற்கு நேற்று காரில் வந்த ஒருவர் தான் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை இணை செயலாளர் எனக்கூறி கொண்டு அடையாள அட்டை காண்பித்து விஐபி தரிசன டிக்கெட் கேட்டு விண்ணப்பித்தார்.அவரது செயலில் சந்தேகமடைந்த ஊழியர்கள் அவரை தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். விஜிலென்ஸ் விசாரணையில் அவர் போலி ஐஏஎஸ் அதிகாரி என்பது தெரியவந்தது. அவரது பெயர் விஜயவாடாவை சேர்ந்த நரசிம்மராவ் என்பதும், ஏற்கனவே குண்டூர், விஜயவாடாவில் இதேபோன்று பல […]
மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் இன்று துவங்கியது
குரோம்பேட்டை வசந்த மண்டபத்தில் மகா சுதர்சன ஹோமம்

குரோம்பேட்டை ராதா நகர் ஸ்ரீ ராமசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தின் சார்பாக வசந்த மண்டபத்தில் 13 ஆம் ஆண்டு ஸ்ரீ மகா சுதர்சன ஹோமம் பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க வெகு விமர்சையாக நடைபெற்றது. காலை 5 மணிக்கு மூலவர் திருமஞ்சனமும் 9 மணிக்கு சங்கல்பம் 10மணிக்கு அனுக்ஷை புண்ணியாக வாசகம் கும்ப பூஜை 11:30 மணிக்கு ஹோமங்கள் 12 30 மணிக்கு பூர்ணாஹுதி நடைபெற்று ஒரு மணிக்கு மகா தீபாரணை செய்யப்பட்டு பக்தகோடிகளுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டு […]
அமாவாசை நாளில்… மாமனார், மாமியாரின் ஆசீர்வாதம் கிடைக்க பெண்கள் செய்ய வேண்டிய எளிய வழிகள்!

அமாவாசை வழிபாட்டை, அமாவாசை தர்ப்பணத்தை, அமாவாசையன்று முன்னோர் வழிபாட்டை சாதாரணமாக நினைத்துவிடாதீர்கள். மிக மிக முக்கியமான இந்த வழிபாடு என்பதை மறந்துவிடாதீர்கள்.வருடத்தில் எந்த வழிபாட்டை வேண்டுமானாலும் செய்யாமல் இருக்கலாம். ஆனால் முன்னோர் வழிபாட்டை மட்டும் ஒருபோதும் செய்யாமல் இருக்கக் கூடாது என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.அமாவாசை நாளில், விரதம் மேற்கொண்டு, மதியம் இலையில் சாப்பிடவேண்டும். காகத்துக்கு உணவு வைத்த பின்னரே சாப்பிட வேண்டும்.அமாவாசை நாளில், நாம் செய்யும் ஒவ்வொரு வழிபாடும் நம் முன்னோர்களுக்குப் போய்ச் சேரும். அவர்களுக்குச் சேரும் புண்ணியம் […]
தெய்வங்களுக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் நன்மைகள்

சுவாமிகளுக்கு தீபம் ஏற்றுதல்… அனைத்து தெய்வங்களுக்கும் நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் நினைத்த காரியம் கைகூடும். தடைபட்ட காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைக்கும்.தாமரை தண்டு திரி, பஞ்சு திரி, வெண்மையான திரி கொண்டு விளக்கு ஏற்றலாம். வீட்டில் மண், பித்தளை, வெள்ளி விளக்கு முதலியவற்றில் ஏற்றலாம். கடலை எண்ணெய் தீபம் ஏற்ற கூடாது. கடலை எண்ணெய் கொண்டு ஏற்றினால் சாபம் மற்றும் தோஷம் ஏற்படக்கூடும் என்பதால் அதனை தவிர்த்து விடுங்கள்.தடைபட்ட திருமணம் கைக்கூட துர்க்கை அம்மன் […]
கிருத்திகை விரதம் இருப்பதால் கிடைக்கும் முருகனின் அருள்

ஒவ்வொரு மாதத்திலும், முருகப்பெருமானுக்கு உகந்த நட்சத்திரமாகிய கிருத்திகை நட்சத்திரத்தன்று முருகப்பெருமானை நினைத்து விரதம் மேற்கொள்வதால், முருகனின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகம்.கார்த்திகை பெண்கள் 6 பேர் கந்தனைப் பாலூட்டி வளர்த்த காரணத்தால் அவர்கள் 6 பேரும் கந்தனுக்கு தாய் என்ற சிறப்பினைப் பெற்றனர். அப்போது சிவபெருமான் கார்த்திகை பெண்களே, நீங்கள் எம் குமாரனை பாலூட்டி வளர்த்த காரணத்தால் இன்று முதல் உங்கள் பெயரிலேயே முருகன் கார்த்திகேயன் என்ற பெயர் பெறுவான்.அது மட்டுமல்ல உங்களின் நாளாகிய கிருத்திகை நட்சத்திரத்தன்று […]
சித்திரை கனி என்றால் என்ன?

சித்திரை புத்தாண்டானது இந்து மக்களுக்கு மிகவும் பிரதானமானதொரு புத்தாண்டாகவே அமைந்து காணப்படுகின்றது.அந்த வகையில் சித்திரை மாதம் பிறக்கும் போதோ தமிழ் புத்தாண்டும் பிறக்கின்றது என்பது சிறப்பிற்குரியதாகும். அந்த வகையில் சித்திரை மாதத்தில் கனி காணுதல் நிகழ்வானது இடம் பெறுவது பிரதானமானதாகும்.சித்திரை கனி என்பது யாதென்றால் தமிழ் புத்தாண்டின் முதல் நாளில் கனி காணும் நிகழ்வில் ஈடுபடுவார்கள் இதனையே சித்திரை கனி என குறிப்பிடலாம். அதாவது பல கனிகளை தட்டில் வைத்து அதனை கண்ணாடியில் பார்ப்பது சித்திரை கனியாகும்.முதலில் […]
ராமேஸ்வரம் கோயில் மூலவரின் அபூர்வ படம்

ராமேஸ்வரம் ஸ்ரீராமநாதசுவாமி கோயில் கருவறையில் உள்ள மணலால் ஆன மூலவர் ராமநாதசுவாமி சீதா தேவியால் கடற்கரை மணலிலே உருவாக்கபட்டு ஸ்ரீராமரால் வழிபாடு செய்யப்பட்ட சிவலிங்கமாகும்.காசி விஸ்வநாதருக்கு நிகராக போற்றப்படக்கூடியதாக சீதா தேவியால் மணலில் உருவாக்கப்பட்ட ராமேஸ்வரம் ராமநாதசுவாமி சிவலிங்கம்தான் இந்த கோயிலில் மூலவராக இன்றும் உள்ளது.ஸ்ரீராமநாதசுவாமி கோயில் கருவறையில் உள்ள மணலால் ஆன மூலவர் ராமநாதசுவாமி சிவலிங்கத்தினை தரிசிக்கும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைப்பதில்லை.காண்பதற்கரிய இந்த மணலால் ஆன மூலவர் ராமநாதசுவாமியின் புகைப்படம்.