எதற்கு ஆடி பூரம் அன்று அம்மனுக்கு வளைகாப்பு போடுகிறார்கள்? அதன் அர்த்தம் என்ன?

ஆடிப்பூரம் என்பது ஆண்டாளின் அவதார தினமாக கொண்டாடப்படுகிறது.பெண்களுக்கு வளைகாப்பு நடத்துவது போல் , மங்கையர்களுக்கு எல்லாம் அரசியான அந்த அம்மனுக்கும் வளைகாப்பு நடத்திடும் நாளே ஆடிப்பூரம் ஆகும்.இந்நிகழ்விற்கு ஒரு சுவையான கதை சொல்லப்படுகிறது.மாயமான வளையல்கள்:ஆந்திராவிலிருந்து ஒரு வளையல் வியாபாரி சென்னை வந்து வளையல்களை விற்றுவிட்டு, மீதி வளையல்களோடு ஊர் திரும்புகையில், பெரியபாளையம் வந்தார்.சோர்வோடு மரத்தடியில் படுத்தவர் உறங்கிவிட்டார். காலையில் கண்விழித்ததும் பார்த்தபோது வளையல்களைக் காணாமல் திகைத்தார். எங்கு தேடியும் வளையல் கிடைக்காமல் போகவே, கவலையோடு ஊர் திரும்பினார்.வேப்ப […]
ஆகஸ்ட் மாதத்தில் அபூர்வ பிரதோஷம் வருகிறது

ஆன்மீக பக்த கோடிகளுக்கு வணக்கம்.நம் வாழ்விலே ஏராளமான அற்புதங்களும், அதிசயங்களும்v நடந்து வருகிறது.அந்த வகையில் ஆகஸ்டு மாதத்தில் அபூர்வ பிரதோஷம் வருகிறது.ஒரு மாதத்தில் இரண்டு (2) பிரதோஷம் தான் வரும்.ஆனால் இந்த குரோதி ஆண்டில் ஆகஸ்ட் மாதத்தில் sசுமார் மூன்று(3) பிரதோஷம் வருவது அபூர்வ பிரதோஷமாக கருதப்படுகிறது.
வீட்டிலேயே எவ்வாறு எளிமையான முறையில் ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடுவது…?

ஆடி 18-ந் தேதி காவிரியில் நீராடி, காவிரி அன்னையை வழிபட்டு மஞ்சள், குங்குமம், மலர், வஸ்திரம் சமர்ப்பிப்பர். புதுமணத் தம்பதிகள் இந்த நாளில் புதுமஞ்சள் கயிறு மாற்றிக் கொள்வது வழக்கம்.ஆறு மற்றும் நீர் நிலைகளின் ஓரம் தான் என்று இல்லை, வீட்டிலேயே கூட எளிமையான முறையில் ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடலாம். அதற்கு செய்ய வேண்டியது இதுதான்.ஒரு செம்பில் சிறிதளவு அரைத்த மஞ்சளை போட வேண்டும். பின்னர் அந்த செம்பில், நிறை குடத்தில் இருந்து தண்ணீர் எடுத்துக் கொள்ள […]
வேண்டிய வரங்கள் பெற ஆடிக்கிருத்திகை வழிபாடு…!

ஜோதிட சாஸ்திரத்தில் ஆடி மாதத்தை ‘கர்கடக மாதம்’ என்பார்கள். சூரியன் குருவின் நட்சத்திரமான புனர்பூசம் நான்காம் பாதத்தில் நுழையும் நேரத்தில் கடக ராசியில் சூரியன் செல்வதே ஆடி மாத துவக்கம். தமிழ் மாத பிறப்புகளுக்கு ஒவ்வொரு முக்கியத்துவம் இருக்கிறது.அந்தந்த கால, பருவ சூழ்நிலைக்கு ஏற்ப திருவிழாக்களையும், உற்சவங்களையும், விரத வழிபாடுகளையும் ஏற்படுத்தி வைத்துள்ளனர். தமிழ் மாதத்தில் நான்காவது மாதமான ஆடி, தட்சிணாயன புண்ய காலமாகும். இது தேவர்களின் இரவு நேரம் என்று புராணங்கள் சொல்கின்றன.வருடத்தில் மூன்று கார்த்திகை […]
ஆடி அமாவாசை 2024 எப்போது? நேரம், தேதி குறித்த முழு தகவல்

தமிழ் மாதங்களில் 4வது மாதம் ஆடி மாதம்.. இந்த ஆடி மாதம் புனிதமான மாதமாக கருதப்படுகிறது.. அதற்கு காரணம் இந்த மாதம் முழுவதும் இறைவழிபாடும் ஆன்மீக விழாக்களும் விஷேசங்களும் நிறைந்திருக்கும்..அதில் மிக முக்கியமானது ஆடி அமாவாசை.. ஆடியில் வரும் அமாவாசை தினம் மிகுந்த முக்கியத்துவத்தை கொண்டுள்ளது. ஆண்டு முழுவதும் அமாவாசை வந்தாலும் இந்த ஆடி மாதத்தில் வரும் அமாவாசையே சிறப்பானதாக கருதப்படுகிறது.. ஆடி மாதத்தில் வரும் ஆடி அமாவாசை விரதத்தை கடைபிடிப்பதும் சிறப்பு வாய்ந்தது. காரணம் இந்த […]
ஆடி வெள்ளி… மகாலக்ஷ்மி, ஆண்டாள் வழிபாடு; அக்கம்பக்கத்து பெண்களுக்கு புடவை,வளையல்!

வெள்ளிக்கிழமை என்பது எல்லா மாதத்திலுமே முக்கியத்துவம் வாய்ந்த நாள்தான். வெள்ளிக்கிழமையை சுக்கிரவாரம் என்பார்கள். சுக்கிர யோகம் கிடைக்க, வெள்ளிக்கிழமையில் மகாலக்ஷ்மியை வழிபடச் சொல்கின்றன ஞானநூல்கள்.ஆச்சார்யர்களும் வெள்ளிக்கிழமையில், மகாலக்ஷ்மியை வணங்கச் சொல்லி அறிவுறுத்துகிறார்கள். அதிலும் குறிப்பாக, ஆடி மாத வெள்ளிக்கிழமையில், மறக்காமல் காலையும் மாலையும் விளக்கேற்றி, மகாலக்ஷ்மி காயத்ரீ அல்லது மகாலக்ஷ்மி நாமாவளிகளைச் சொல்லி ஏதேனும் இனிப்பு நைவேத்தியமாகப் படைக்கலாம். அம்பாளுக்கு செந்நிற மலர்கள் உகந்தவை. எனவே அரளிப்பூ, செம்பருத்தி, ரோஜா முதலான மலர்களைச் சூட்டி வழிபடுங்கள்.கனகதாரா ஸ்தோத்திரம் […]
குளித்து முடித்தவுடன் முதுகைதான் முதலில் துடைக்கவேண்டும் எனக் கூறவது ஏன்…?

ஒருவரை நாம் திட்டும் போது, மூதேவியே என்கிறோம். எதிர்மறை சக்திக்கு உதாரணமாக மூதேவியை நாம் குறிப்பிட்டாலும், தென்னிந்தியாவில் ஒரு காலத்தில்,மூதேவி என்று அழைக்கப்படும் மூத்த தேவி வழிபாட்டுக்கு உரியவளாக இருந்திருக்கிறாள்.பத்ம புராணத்தின் படி, தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடையும் போது, அதனிலிருந்து வெளிபட்ட ஆலகால விஷத்திலிருந்து பிறந்தவளே மூத்த தேவி என்றும் அதன்பிறகு வெளிபட்ட அமிர்தத்திலிருந்து பிறந்தவள் ஸ்ரீதேவியாகிய லக்ஷ்மி என்றும் தெரிகிறது. ஸ்ரீ தேவியாகிய லக்ஷ்மிக்கு முன் தோன்றியவள் என்பதால், இவள் மூத்த தேவி என்றழைக்கப்படுகிறாள். […]
வைஷ்ணவி
மகாவிஷ்ணுவின் சக்தியான இவ்வம்மை அம்பிகையின் கை களிலிருந்து தோன்றியவள். இத்தேவி நாராயணி என்று போற்றப்படுகிறாள். கருடனை வாகனமாகவும் கொடியாகவும் கொண்டிருப்பாள். நீலநிறத் தோற்றத்துடன் முன்னிரு கைகள் வரதஅபய முத்திரை காட்டியும், பின்னிருகைகளில் சங்கு, சக்கரம் கொண்டும் அருள்புரிகிறாள். அழகு நிறைந்த இவ்வம்மையை வழிபட மனதில் நினைக்கும் நல்லவற்றை அருளுவாள். மேலும் அழகும் திடகாத்திரமும், செல்வ வளமும் தருவாள்.
சிறப்பான கல்வி அறிவு பெற சங்கடஹர சதுர்த்தி விரத வழிபாடு

விநாயகப் பெருமானை வழிபாடு செய்வதற்குப் பல விரத தினங்கள் இருந்தாலும், விரதத்தில் மிகச் சிறந்ததும், பழமையானதும், சங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கக்கூடிய சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருந்தால் அளவு கடந்த ஆனந்தத்தை அடையலாம். சகல சௌபாக்கியங்களையும் பெறலாம். ஒவ்வொரு மாதமும் வரும் ‘சங்கடஹர சதுர்த்தி’ நாளில் விரதம் இருந்தால் குடும்பத்தில் சுபிட்சமும், தடைகளின்றி எல்லா காரியங்களும் வெற்றியடையும். ‘ஹர’ என்ற சொல்லுக்கு அழித்தல் என்று பொருள். ஒவ்வொரு மாதமும் பௌர்ணமிக்கு அடுத்ததாக வரும் சதுர்த்தித் திதியே சங்கடஹர சதுர்த்தி […]
சக்தி நிறைந்த ஆடி மாதத்தில் மேற் கொள்ளும் விரதங்களால் ஏற்படும் பலன்கள்

ஆடி மாத விரதங்கள்… ஆடி மாதத்தில் வேத பாராணயங்கள், மந்திரங்கள், ஜெபங்கள் ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. ஆடி மாதத்தில் பிராணயவாயு அதிகமாக கிடைப்பதால், ஜீவ ஆதார சக்தி அதிகமாக உள்ள முக்கிய மாதமாகவும் உள்ளது. இதனால், ஆடி மாதம் சக்தி நிறைந்த மாதமாக கருதப்படுகிறது.ஆடி மாதங்களில் இறைவனுக்கு விரதங்கள் இருப்பது விஷேமானது. இம்மாதத்தில் விரதங்கள் இருப்பதால் பல விதங்களில், கூடுதல் நன்மைகள் கிடைக்கும் என்பது ஐதீகம். உண்ணாமல் விரதம் இருப்பதும், எந்நேரமும் இறைவனையே சிந்தித்து, மவுன […]