சர்க்கரை நோய் தீர்க்கும் பரிகார தலம்

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே கோவில்வெண்ணி என்ற ஊரில் அமைந்துள்ளது வெண்ணி கரும்பேஸ்வரர் கோவில். இத்தலத்தின் இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.நாயன்மார்களில் முக்கியமானவர்களான அப்பர், சம்பந்தர் உள்ளிட்டோர் பாடியுள்ள இத்தலம், சர்க்கரை நோய் தீர்க்கும் பரிகார தலமாக விளங்குகிறது.சர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்த கோவிலில் வெண்ணிகரும்பேஸ்வரருக்கு அர்ச்சனை செய்து வழிபடுவதுடன், சர்க்கரை மற்றும் ரவையை சேர்த்து கோவில் பிரகாரத்தில் எறும்புக்கு உணவாக இடுகிறார்கள். இந்த உணவை பிரகாரத்தில் உள்ள எறும்புகள் உண்பதால் சர்க்கரை நோய் பாதிப்பு குறைகிறது […]
அமாவாசை அன்று எவ்வாறு வழிபாடு செய்ய வேண்டும்?

அன்று காலை ஆறு, கடல் போன்ற நீர் நிலைகளுக்கு சென்று நீராடி தர்ப்பணம் கொடுக்க வேண்டும். ராகுகாலம், எமகண்டம் ஆகியவை தர்ப்பணத்துக்கு பொருந்தாது. மதிய வேளை தர்ப்பணம் செய்ய மிகவும் உகந்தது. தர்ப்பணம் கொடுக்கும்போது தங்களின் கோத்திரம், குலதெய்வம், மூன்று தலைமுறையின் பெயர்களை அறிந்து கொள்வது அவசியம். தர்ப்பணம் செய்த பின்னர் வீட்டுக்கு திரும்பி வந்து மறைந்த முன்னோர்களின் படத்தை சுத்தம் செய்து வடகிழக்கு திசையில் வைத்து தெற்கு பார்த்து வைத்து சந்தனம், குங்குமம் இட்டு துளசி […]
நலம் தருபவர் நவக்கிரக கணபதியே!!!

முழுமுதற் கடவுள் கணபதி நவக்கிரகங்களை தன்னுள் அடக்கி ஆள்பவர். பிள்ளையாரின் நெற்றியில் சூரியன் இருக்கிறது. தலை உச்சியில் குரு, அடி வயிற்றில் சந்திரன், வலது மேற்கையில் சனிபகவான், வலது கீழ்க்கையில் புதன், இடது மேற்கையில் ராகு, இடது கீழ்க்கையில் சுக்கிரன் இப்படி நவக்கிரகங்களும் பிள்ளையாரிடம் இருக்கின்றன. கணபதியே நவக்கிரக வடிவில் உள்ளார் என்பதை உணர்ந்து அதற்குரிய துதிகளைச்சொல்லி வணங்கினால் இடையூறுகள் நிச்சயம் விலகும். நவக்கிரகத்துக்கு உகந்த கணபதி துதியைச் சொல்லி வணங்கினால் துயரங்கள் நீங்கி நலம் பல […]
சதுர்த்தி விரதத்தின் மகிமைகள்…

ராஜா கர்த்தமன், நளன், சந்திராங்கதன், முருகன், மன்மதன் (உருவம்பெற்றான்), ஆதிசேஷன், தட்சன் மற்றும் பலர் விநாயக சதுர்த்தி விரதத்தைக் கடைப்பித்து உயர்ந்த நிலை அடைந்தனர்.கிருதயுகத்தில் தேஜஸ்வி என்ற பெயரில் சிம்மவாகனத்திலும் த்ரேதா யுகத்தில் மயில் வாகனத்திலும். துவாபர பாகத்தில் மூஞ்சுறு வாகனத்திலும் கலியுகத்தில் எலி வாகனத்திலும் விநாயகர் தோன்றியுள்ளார்.வாஞ்ச கல்ப கணபதி தியானம் மூலமந்திரத்தை சிரமப்பட்டு மனதில் ஏற்றிக் கொண்டு முறைப்படி ஜபித்து வந்தால் உங்கள் வாழ்வில் பொருள் சேர்க்கை, பெரியோர் நட்பு, செல்வ நிலை உயர்வு […]
வினைகளை தீர்க்கும் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் ஆலயம்

ஓம்” எனும் பிரணவ மந்திரத்தின் வடிவத்தை கொண்டவர் விநாயகப்பெருமான். நமது நாட்டில் மிக பழமையான காலம் தொட்டே விநாயகர் வழிபாடு முறை இருந்து வருகிறது. நமது வினைகள் அனைத்தையும் விலக்குபவர் விநாயகர்.அப்படி வேண்டும் பக்தர்களின் அனைத்து வினைகளையும் தீர்க்கும் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் ஆலயத்தின் சிறப்புகள் பற்றி தெரிந்து கொள்வோம். சுமார் 1600 ஆண்டுகள் பழமையான இக்கோவில் ஒரு “குடைவரை” கோவிலாகும். இந்த வகை கோவில்களைக் கட்டுவதில் சிறந்தவர்களாக விளங்கியவர்கள் “பல்லவ” மன்னர்கள். அவர்கள் வழி வந்த […]
உங்கள் கோலங்களுக்கு ஈஸி டிப்ஸ்

· பெயிண்ட் கோலம் வண்ணமாக போடும் போது ஒரு கலர் காய்ந்த பின் அடுத்த கலரைத் தீட்ட வேண்டும். இல்லாவிட்டால் நாம் கலருக்குச் சேர்க்கும் டர்பன்டைன் (அ) கெரோசின் வழிந்து முதலில் போட்ட கலரையும் வீணாக்கிவிடும்.· வண்ணக்கோலம் வாசலில் இடுபவர்கள் சலித்த நைஸ் மணலைச் சேர்த்துப் போடலாம். வண்ணப்பொடியை அப்படியே உபயோகித்தால் நைசாக இருப்பதினால் காற்றில் பறந்து கலர் குழம்பிவிடும்.· உங்கள் பழைய வளையல்களை ரங்கோலி கோலம் டிசைன்களுக்கு பயன்படுத்தலாம்.· இரண்டு வண்ணங்களை சரியான அளவில் கலந்தால், […]
கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்த மலர் கிருஷ்ண கமலம்

நாகலிங்க மலரில் எப்படி சிவபெருமான் வாசம் செய்கிறாரோ அதே போல கிருஷ்ணர் வாசம் செய்யக் கூடிய மலர் கிருஷ்ண கமலம்..இந்த பூவின் அமைப்பு நடுவில் திரௌபதி, மும்மூர்த்திகள், பஞ்ச பாண்டவர்கள், 100கௌரவர்கள் என அனைவரும் கிருஷ்ணரோடு சேர்ந்து வாசம் செய்யக் கூடிய மலர்.கிருஷ்ணர் கையில் உள்ள சுதர்சன சக்கரத்துக்கு நிகராக இந்த மலரை குறிப்பிடுகிறார்கள்.இந்த பூவின் பெயர் கிருஷ்ண கமலம்,இதனை மஹாபாரத பூ,பஞ்ச பாண்டவர் பூ என்றும் அழைப்பார்கள்.இதன் ஆங்கில பெயர் கிருஷ்ணரை இஷ்ட தெய்வமாக கொண்டவர்கள், […]
ஜென்மாஷ்டமி தினம்

கிருஷ்ணாவதாரம் திருமாலின் ஒன்பதாவது அவதாரமாகும். தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் போர் நடந்தது. அந்தப்போரில் திருமாலின் உதவியால் தேவர்கள் வெற்றி பெற்றனர். அசுரர்கள் கொல்லப்பட்டனர். திருமாலின் திருக்கரத்தால் கொல்லப்பட்ட பல அசுரர்கள் மோக்ஷம் அடைந்தார்கள். காலநேமி போன்ற சில அரசர்கள் மிஞ்சிய கர்மத்தால், பூமியில் கம்சன் போன்றவர்களாகப் பிறந்தனர். அந்த அசுரர்களின் சுமை தாங்க முடியாமல் பூமாதேவி, பிரும்ம தேவனிடம் முறையிட்டதை, முன்பே தேவர்களும் கூறியிருந்தார்கள். அதற்கு பிரம்மதேவனும், “பூமாதேவியின் முறையீட்டை அறிவேன், தேவர்களையும், பூமாதேவியையும் காப்பதற்கு திருமாலே தகுதியுள்ளவர். […]
பௌர்ணமி நாளில் விரதம் இருந்து விளக்கேற்றுவதால் உண்டாகும் பலன்கள் !!

ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி அன்று விரதம் இருந்து விளக்கேற்றி வழிபடுவதால் நற்பலன்களை அடைய முடியும். ஒவ்வொரு மாதத்திற்குரிய பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்வோம்.சித்ரா பௌர்ணமி அன்று விரதமிருந்து விளக்கேற்றி வழிபட்டால் தானியம் கிடைக்கும்.வைகாசி மாத பௌர்ணமி அன்று விரதமிருந்து விளக்கேற்றினால் மணமாகாத பெண்களுக்கு திருமணம் நடைபெறும்.ஆனி மாத பௌர்ணமி தினத்தில் விளக்கேற்றினால் குழந்தை பாக்கியம் உண்டாகும்.ஆடி மாத பௌர்ணமியில் விளக்கேற்றினால் வளமும் நலமும் பெறலாம்.ஆவணி மாத பௌர்ணமியில் விரதமிருந்தால் செல்வம் பெருகும்.புரட்டாசி மாத பௌர்ணமி அன்று விரதமிருந்து […]
இந்திரனின் சந்தேகத்தை தீர்த்த லட்சுமி தேவி

பணம் பெற வேண்டும் என்ற ஆசையில், எல்லோரும் லட்சுமி தேவியை வணங்குகிறார்கள், ஆனால் சிலர் பணக்காரர்களாகவும், சிலர் ஏழைகளாகவும் மாறுகிறார்கள். இதுபோன்ற சூழ்நிலையில், எல்லோரும் வழிபட்ட பிறகு, சிலர் ஏன் பணக்காரர்களாகவும், சிலர் ஏழைகளாகவும் இருக்கிறார்கள் என்று இந்திர தேவ் அவர்களே மாதா லட்சுமியிடம் கேட்டார். இந்திர தேவி லட்சுமி தானே சொன்னார், மக்கள் தங்கள் செயல்களால் பணக்காரர்களாகவும் ஏழைகளாகவும் மாறுகிறார்கள், அதைவிட முக்கியமானது என்னவென்றால், என்னை வணங்குபவரும் தனது மரியாதையை பராமரிக்க வேண்டும், அதாவது நீங்கள் […]