அம்மன் கோவிலில் கிடா வெட்டி பிரார்த்தனை நிறைவேற்றிய முஸ்லிம் தம்பதி

பிரார்த்தனை நிறைவேறியதால் முஸ்லிம் தம்பதியர் தஞ்சையில் உள்ள வீரமாகாளியம்மன் கோயிலில் கிடா வெட்டி, பூஜை செய்து 200-க்கும் மேற் பட்டவர்களுக்கு கறி விருந்து பரிமாறி தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றினர்.

வெள்ளியங்கிரி மலையேற பிப்., 1 முதல் பக்தர்களுக்கு அனுமதி

தென் கயிலாயம் என்று போற்றப்படும் கோவை வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் மலையேற, பிப்ரவரி 1 முதல் மே 31ஆம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி என்று வனத்துறை அறிவித்துள்ளனர்.

வளர்ப்பு நாய்க்கு துலாபாரம் கொடுத்த தெலுங்கு நடிகை!

தனது வளர்ப்பு நாய்க்குத் ‘துலாபாரம்’ (வெல்லம்/தங்கம்) வழங்கிய விவகாரம் தொடர்பாக, தெலுங்கு நடிகை டீனா ஸ்ராவ்யா பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார். தனது நாய் உடல்நலக் குறைவிலிருந்து குணமடைய வேண்டும் என்பதற்காக வேண்டியிருந்ததாகவும், அந்த பக்தியினால் தான் அவ்வாறு செய்ததாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார். பழங்குடியின மக்களின் கலாச்சாரத்தையோ அல்லது சடங்குகளையோ கொச்சைப்படுத்தும் நோக்கம் தனக்கு இல்லை என்றும், இந்தச் செயலால் பக்தர்கள் யாராவது மனவேதனை அடைந்திருந்தால் மன்னிக்கும்படியும் அவர் ஒரு வீடியோ மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

சபரிமலை தங்கம் திருட்டு தமிழகத்தில் அமலாக்க பிரிவு சோதனை

சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் திருடப்பட்டதன் மூலம் கிடைத்த சட்டவிரோத வருமானத்தை பணமோசடி செய்திருக்கலாம் என்ற அடிப்படையில் கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மொத்தம் 21 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சபரிமலை மீண்டும் திறப்பு எப்போது?

சபரிமலை ஐயப்பன் கோவில் இன்று இரவு 11 மணி வரையே பக்​தர்​கள் தரிசனத்​துக்​காக அனும​திக்​கப்​படு​வர். நாளை காலை பந்தளராஜ வம்ச பிர​தி​நி​தி​யின் சிறப்பு வழி​பாட்​டுக்​குப் பிறகு காலை 6.30 மணிக்கு நடை​சாத்​தப்பட உள்​ளது. இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு மகரஜோதி வழி​பாடு​கள் அனைத்​தும் நிறைவு பெறுகின்​றன. பின்​பு, கும்​பம் மாத (மாசி) வழி​பாட்​டுக்​காக பிப்​.12-ம் தேதி மாலை கோயில் நடை திறக்​கப்​படும்.

அயோத்தியில் தடை!

அயோத்தி ராமர் கோயிலின் 15 கி.மீ. சுற்றளவுப் பகுதிகளில் அசைவ உணவுகளை டெலிவரி செய்ய தடை! உணவகங்களில் ஏற்கனவே தடை அமலில் இருக்கும் சூழலில், ஆன்லைன் நிறுவனங்களின் டெலிவரிக்கும் தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு.

சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம்

சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் 14-ம் தேதி மகர​விளக்கு பூஜை நடை​பெற உள்​ளது. இதற்​காக கடந்த 30-ம் தேதி மாலை கோயில் நடை திறக்​கப்​பட்​டது. இது​வரை சுமார் 6.5 லட்​சம் பக்​தர்​கள் தரிசனம் செய்​துள்​ளனர். உற்சவ நிகழ்ச்​சிக்கு இன்​னும் ஒரு வாரமே உள்​ள​தால் பக்தர்​கள் கூட்​டம் கடந்த 2 நாட்​களாகவே அதி​கரித்து வரு​கிறது. சபரிமலை வழித்​தடங்​களில் இது​வரை இல்​லாத கூட்​டம் நேற்று இருந்​தது.எரி​மேலி​யில் இருந்து பெரு​வழிப்​பாதை, பம்​பை, கணபதி கோயில், மரக்​கூட்​டம், அப்​பாச்​சிமேடு, பெரிய நடைப்​பந்​தல் உள்​ளிட்ட பகு​தி​களி​லும் […]

திருப்பரங்குன்றம் தீப வழக்கில் திமுக ஆட்சிக்கு பின்னடைவு

திருப்பரங்குன்றம் தீபம் வழக்கில் மலை மேல் உள்ள தூணில் தீபம் ஏற்றுவது சரியானது. அறநிலைத்துறை கோவில் சார்பில் தீபம் ஏற்ற வேண்டும் அந்த தீபத்தூண் கோவில் எல்லைக்குள் தான் உள்ளது என்று அதிரடியாக உயர்நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு அளித்துள்ளனர்.இந்த பிரச்சனையில் மாவட்ட நிர்வாகம் தேவையற்ற பிரச்சனையை ஏற்படுத்தி உள்ளது. அங்கு பொது அமைதிக்கு ஏற்பட்ட பிரச்சனைக்கு அரசே காரணம் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் தீபம் ஏற்றுவதால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பது அர்த்தமற்றது என நீதிபதிகள் […]

முருக பக்தர்களுக்கு கிடைத்த வெற்றி – மத்திய அமைச்சர் முருகன்

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என்று வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று உறுதி செய்துள்ளது. முருக பக்தர்களின் உணர்வுக்கு கிடைத்துள்ள மாபெரும் வெற்றி என்று மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.

திருப்பரங்குன்றம் வழக்கில் நாளை தீர்ப்பு

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்கள் மீது நாளை தீர்ப்பு அளிக்கப்படுகிறது. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என தனி நீதிபதி உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு, மதுரை மாவட்ட நிர்வாகம், அறநிலையத் துறை, சிக்கந்தர் தர்கா நிர்வாகம் உட்பட 26 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.