தாம்பரத்தில் புதிய நியாய விலை கடை திறப்பு ..

தாம்பரம் மாநகராட்சி 3 ஆவது மண்டலத்திற்கு உட்பட்ட 34 ஆவது வார்டு SBI காலனி பகுதியில் ரூ 10 லட்சம் மதிப்பீட்டில் நியாய விலை கடை மற்றும் 40 ஆவது வார்டு செம்பாக்கம் அம்பேத்கர் நகரில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் நியாய விலை கடை மற்றும் 42 ஆவது வார்டு ராஜகீழ்ப்பக்கம் மாருதி நகர் பகுதியில் ரூ .10 லட்சம் மதிப்பீட்டில் நியாய விலை கடை ஆகிய இம்மூன்று கடைகளும் ,தாம்பரம் சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி […]

சிட்லபாக்கம் 43-வது வார்டு

சிட்லபாக்கம் 43-வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் குப்பைகளை முறையாக தரம் பிரித்து, குப்பை சேகரிக்கும் துப்புரவு பணியாளர்களிடம் கொடுத்து வருகின்றனர். இதனால் பணியாளர்களின் பணிசுமையும் குறைகின்றது. இவ்வாறு பிரித்து கொடுப்பதில் முன்மாதிரியாக திகழ்ந்த 3 நபர்கள், அன்னை தெரேசா தெருவை சேர்ந்த சசிகலா, கஸ்தூரிபாய் தெரு அஷ்வதா அப்பார்ட்மென்ட் குடியிருப்பை சேர்ந்த அமுதா மற்றும் சின்னத்தாய் அவர்களை அந்த பகுதியின் சுகாதார கண்கானிப்பாளர் கார்மேகம் தேர்வு செய்தார். அவர்களுக்கு மாமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் சி.ஜெகன் சால்வை அணிவித்து […]

சிட்லப்பாக்கத்தில் மரக்கிளைகளை அரைக்கும் இயந்திரம்

தாம்பரம் மாநகராட்சி மண்டலம் 3 சிட்லபாக்கம் வார்டு 43ல் பகுதியில் மண்டல குழு தலைவர் ஜெயப்பிரதீப் சந்திரன் மற்றும் மாமன்ற உறுப்பினர் சி.ஜெகன் ஆகியோரின் சொந்த முயற்சியில் முதல் முறையாக மரக்கிளைகளை அரைக்கும் இயந்திரம் கொண்டு வரப்பட்டது. வார்டு முழுவதும் மின் கம்பிகளில் உரசி கொண்டிருந்த மற்றும் சாலைகளை மறைத்துக் கொண்டிருந்த மரக்கிளைகளை அகற்றி ஆங்காங்கே போடப்பட்டிருந்ததை ஓர் இடத்தில் ஒருங்கிணைத்து அனைத்தையும் அரைத்து உரமாக்குவதற்கு ஏற்பாடு தொடங்கப்பட்டு நடந்து கொண்டிருக்கின்றது.இவ்வாறான மரக்கிளைகளை பெரும்பாலான சூழ்நிலையில் அப்படியே […]

சிட்லபாக்கம் பகுதியில் தேவையற்ற மரக்கிளைகளை அரைத்து உரமாக்கும் எந்திரம் அறிமுகம்

சிட்லபாக்கம் பகுதியில் தேவையற்ற மரக்கிளைகளை வெட்டி அரைத்து உரமாக்கும் எந்திரம் செயல்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. தாம்பரம் மாநகராட்சி மண்டலம் 3 சிட்லபாக்கம் வார்டு 43ல் பகுதியில் மண்டல குழு தலைவர் ஜெயப்பிரதீப் சந்திரன் மற்றும் மாமன்ற உறுப்பினர் .சி.ஜெகன் ஆகியோரின் சொந்த முயற்சியில் முதல் முறையாக மறக்கிளைகளை அரைக்கும் இயந்திரம் கொண்டு வரப்பட்டது.வார்டு முழுவது மின் கம்பிகளில் உரசி கொண்டிருந்த மற்றும் சாலைகளை மறைத்துக் கொண்டிருந்த மரக்கிளைகளை அகற்றி ஆங்காங்கே போடப்பட்டிருந்ததை ஓர் இடத்தில் ஒருங்கிணைத்து அனைத்தையும் அரைத்து […]

சிட்லபாக்கம் பள்ளியில் காலை உணவு திட்டம் தொடக்கம்

இந்தியாவிலேயே முதல் முறையாக அரசு பள்ளி மாணவர்களுக்கு பயன்படும் வகையில் எல்லோருக்கும் எல்லாம் என்னும் சிறந்த சித்தாந்தத்தில் செயல்பட்டு வரும் நம் சீர்மிகு மாண்புமிகு தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் காலை உணவுத் திட்டம் இன்று தமிழ் நாடு முழுவதும் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின்படி தாம்பரம் மாநகராட்சி மண்டலம் 3 சிட்லபாக்கம் பகுதிக்கு உட்பட்ட மாநகர தொடக்கப்பள்ளி சிட்லபாக்கம் 2வது பிரதான சாலையில் சமையல் கூடம் திறப்பு விழா காலை 8:00 மணி மற்றும் அம்பேத்கர் […]

கிரைண்டரில் இட்லி மாவு அரைத்த பெண் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

சிட்லப்பாக்கம் அடுத்த நேதாஜி சுபாஷ் சந்திரப்போஸ் தெருவை சேர்ந்தவர் ஜெகதீஸ் கூலி வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி விஜிலா (38) வீட்டிலேயே இட்லி மாவு அறைத்து விற்பனை செய்து வந்தார். நேற்று இரவு வழக்கம் போல் கிரைண்டரில் மாவு அறைத்து கொண்டிருந்த போது எதிர்பாரத விதமாக மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டார். வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிய ஜெகதீஸ் மனைவி விஜிலா மயக்க நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து குரோம்பேட்டை அரசு மருத்துவனை கொண்டு சென்றார். […]

சிட்லபாக்கத்தில் அமைச்சர் கீதா ஜீவன் ஆய்வு

தாம்பரம் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட சிட்லபாக்கம் பகுதியில் சமூக பாதுகாப்பு நலத்துறை மூலம் நான்கு தளம் கொண்ட மகளிர் தங்கும் விடுதினை சமூக பாதுகாப்பு நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆய்வின்போது தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, தாம்பரம் மாநகராட்சியின் மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன், தாம்பரம் மாநகராட்சியின் துணை மேயர் ஜி.காமராஜ், தாம்பரம் மாநகராட்சியின் ஆணையாளர் அழகு மீனா, மற்றும் தாம்பரம் மாநகராட்சியின் மாமன்ற உறுப்பினர்களும் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மணிப்பூர் கொடூரம் திமுக மகளிர் அணி கொட்டும் மழையில் பரிமளா சிட்டிபாபு தலைமையில் ஆர்ப்பாட்டம்

மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்ற கலவரம் மற்றும் பெண்களுக்கு எதிரான கொடுர தாக்குதலை தடுக்காத ஒன்றிய, மணிப்பூர் மாநில அரசுகளை கண்டித்து தாம்பரம் அடுத்த சிட்லப்பாக்கத்தில் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் பரிமளா சிட்டிபாபு தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் தாம்பரம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் ரமணி ஆதிமூலம், கிரிஜா சந்திரன், சசிகலா கார்திக் உள்ளிட்ட திமுக மகளிர் அணி நிர்வாகிகள் உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்டவர்கள் கலந்துக்கொண்டு பாஜக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள். அப்போது […]

சிட்லபாக்கத்தில் புதிய குடிநீர் குழாய் அமைக்கும் பணி நிறைவு

தாம்பரம் மாநகராட்சி, மண்டலம் 3, சிட்லபாக்கம் வார்டு 43க்கு உட்பட்ட திருமுருகன் சாலையில் சாலை பணிகள் நடந்து கொண்டுள்ளது. பல ஆண்டு காலங்களாக குடிநீர் விநியோகிக்கும் குழாய் பழுதடைந்து இருக்கிறது. அதனை சாலை பணிகள் முடிவடைவதற்க்குள் புதிய குழாயை அமைப்பதற்கு சி.ஜெகன் எம்.சி கோரிக்கை வைத்ததால், தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா வழிகாட்டுதலின்படி தாம்பரம் மாநகராட்சியின் 3வது மண்டல குழு தலைவர் ச.ஜெயப்பிரதீப் புதிய குழாய் அமைப்பதற்க்கு ஆவனம் செய்தார். அவ்வாரே புதிய குழாய் அமைக்கப்பட்டு பணி […]

தாம்பரம் மாநகராட்சி சிட்லபாக்கம் 43 வது வார்டில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்

தாம்பரம் மாநகராட்சி சிட்லபாக்கம் 43 வது வார்டில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் நமது மாமன்ற உறுப்பினர் சி.ஜெகன் விண்ணப்பத்தை பொதுமக்களுக்கு வழங்கிய போது உடன் இருந்தவர்கள் வெங்கடசாமி, மனோ, பார்த்தசாரதி, அருள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.