சிட்லபாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. மாமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் சி.ஜெகன், ரோட்டரி சங்கம், அரிமா சங்கம் மற்றும் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் குழுவினர் இணைந்து இந்த விழாவை நடத்தினார்

காலையில் விளையாட்டுப் போட்டிகளும் நடந்தன. விழாவில் சிட்லபாக்கம் சி.ஜெகனை வாழ்த்தி கௌரவித்தனர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக குடிநீர் வழங்கல் துறை இயக்குனர் சரவணன் சிறப்புரையாற்றினார். தலைமை ஆசிரியர் வில்லியம், முன்னாள் மாணவர் எல்.என்.ரகுராஜ் வழக்கறிஞர், சிவகுமார், ரோட்டரி கலை கோவிந்தராஜ், ரோட்டரி முத்துசாமி, பிரதாப், ஜீவா எஸ்எம்சி தலைவர், சொக்கலிங்கம், சுகுணா, எஸ்எம்சி உறுப்பினர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் விழாவில் பங்கேற்றனர்.

தாம்பரத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு விநியோகம்..!!

தாம்பரத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள குடியிருப்புகளுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. குமரன் நகர், சி.டி.ஓ. காலனி, எஃப்.சி.ஐ. நகர், மூவேந்தர் நகரில் விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் உணவு விநியோகம் செய்யப்பட்டது.

தாம்பரம் மண்டலம் 2க்கு உட்பட்ட பல்லாவரம் தெற்கு பகுதி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மழையால் பாதிக்க பட்ட மக்களை இ.எஸ்.பெர்னார்ட் பார்வையிட்டார்

தாம்பரம் மாநகராட்சி மண்டலம் 2க்கு உட்பட்ட பல்லாவரம் தெற்கு பகுதி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மழையால் பாதிக்க பட்ட மக்களை பாதுகாக்கும் சிறப்பு முகாமிற்கு நேற்று காலை பல்லாவரம் தெற்கு பகுதி செயலாளர் இ.எஸ்.பெர்னார்ட் அவர்கள் மற்றும் 27வது வார்டு மாமன்ற உறுப்பினர் T.K.கார்த்திகேயன் மகேஸ்வரி அவர்களுடன் சென்று அங்குள்ளவர்களை சந்தித்து நலம் விசாரித்தார்.அப்போது மாநகராட்சியால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காலை சிற்றுண்டி அவர்களுக்கு அளித்தனர்

மிக்ஜாம் புயல் மழை பாதிப்பால் செங்கல்பட்டு மாவட்டத்தில் 6 தாலுகாக்களுக்கு மட்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு .

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் புயல் காரணமாக கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இதன்காரணமாக இந்த 4 மாவட்டங்களிலும், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், சென்னை பொறுத்தவரை மீட்புப்பணிகள் தொடர்ந்து வரும் நிலையில், பெரும்பாலான பகுதிகளில் இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை. தேங்கிய மழைநீர் இன்னும் வடியாமலே இருக்கிறது. லட்சக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், […]

காஞ்சிபுரம்‌ மாவட்ட வெள்ளமிீட்பு பணிக்காக நியமிக்கப்பட்ட அமைச்சர்‌ முத்துசாமியை டிரக்டரில்‌ அமரவைத்து வெள்ள பாதிப்பு பகுதிகளை பார்வையிட வண்டலூர்‌-மிஞ்சூர் வெளிவட்ட சாலையில்‌ காங்கிரஸ்‌ சட்டமன்ற உறுப்பினர்‌ செல்வபெருந்தகை ஓட்டி சென்றார்‌.

மின்சார சப்ளை கொடுக்கபோலிஸ் பாதுகாப்புடன் செல்லும் மின்சார ஊழியர்கள்.

தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் புயல் வெள்ளம் பாதிப்பு கடுமையாக உள்ளது.குறிப்பாக முடிச்சூர் வரதராஜபுரம் போன்ற பகுதிகளை அடக்கிய மேற்கு தாம்பரம் தொடர்ந்து வெள்ளத்தில் தத்தளிக்கிறது. செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறக்கப்பட்டபோது முடிச்சூர் வரதராஜபுரம் பகுதிகளில் தண்ணீர் உள்ளே செல்ல முடியாமல் தேங்கி இருப்பதால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. கடந்த பல ஆண்டுகளாக இந்த பகுதி ஒவ்வொரு மழையின் போதும் வெள்ளத்தில் தான் மூழ்கி தவிக்கிறது. காரணம் இந்த பகுதியில் ஏராளமான வீடுகள் ஆக்கிரமிப்பு பகுதியில் கட்டப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. […]

தமிழ்‌ வளர்ச்சி மற்றும்‌ செய்தித்‌ துறை அமைச்சர்‌ மு.பெ. சாமிநாதன்‌ , சங்கரய்யா உடலுக்கு மலர்மாலை வைத்து மரியாதை …

தமிழ்‌ வளர்ச்சி மற்றும்‌ செய்தித்‌ துறை அமைச்சர்‌ மு.பெ. சாமிநாதன்‌ (15.11.2023) உடல்நலக்‌ குறைவால்‌ காலமான மார்க்சிஸ்ட்‌ கம்யூனிஸ்ட்‌ கட்சியின்‌ மூத்த தலைவர்‌ திரு.என்‌. சங்கரய்யா அவர்களின்‌, சென்னை குரோம்பேட்டை இல்லத்திற்கு. நேரில்‌ சென்று அவரது உடலுக்கு மலர்மாலை வைத்து மரியாதை செலுத்தினார்‌. உடன்‌ சட்டமன்ற உறுப்பினர்‌ . இ. கருணாநிதி, மார்க்சிஸ்ட்‌ கம்யூனிஸ்ட்‌ கட்சியின்‌ மாநிலச்‌ செயலாளர்‌ .கே. பாலகிருஷ்ணன்‌, மார்க்சிஸ்ட்‌ கம்யூனிஸ்ட்‌ கட்சி நிர்வாகிகள்‌ மற்றும்‌ சங்கரய்யா குடும்பத்தினர்‌ உள்ளனர்‌.

தோழர் என்.சங்கரய்யா காலமானார் இறுதி நிகழ்வுகள் நாளை நடைபெறும்

முதுபெரும் சுதந்திர போராட்ட வீரரும், கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவருமான தோழர் என்.சங்கரய்யா (102) வயது உடல் நலக் குறைவின் காரணமாக நவம்பர் 15, 2023 காலை 9.30 மணியளவில் மருத்துவமனையில் காலமானார். அவருடைய உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக குரோம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திலும், மதியம் 2 மணி முதல் தியாகராய நகர், வைத்தியராமன் தெருவில் அமைந்துள்ள சி.பி.ஐ(எம்) மாநிலக் குழு அலுவலகத்திலும் வைக்கப்படவுள்ளது. இறுதி நிகழ்ச்சிகள் நாளை (நவம்பர் 16) காலை 10 மணியளவில், சி.பி.ஐ(எம்) […]

சிட்லபாக்கத்தில் மழைநீர் சேகரிப்புகுழி தூர்வாரும் பணி

தாம்பரம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் சிட்லபாக்கம் சி.ஜெகன் மற்றும் பரிமளா சிட்டிபாபு ஆகியோரால் அமைக்கப்பட்டுள்ள 12 மழை நீர் சேகரிப்பு குழிகளும் பருவமழைக்கு முன்பே தூர்வாரப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. குரோம்பேட்டை ராஜ்பாரிஸ் நகர் -2, திருக்குறள் தெரு 1, உ.வே சுவாமிநாதன் தெரு 1 எண், பாம்பன் சுவாமிகள் சாலை -3, கலைவாணர் சாலை- 4 சுதா அவென்யூ- 1 ஆகிய இடங்களில் தூர் வாரும் பணிகள் நடந்தன.