HDFC AMC நிறுவனத்தின் சொத்து மதிப்பு உயர்வு

HDFC AMC நிறுவனத்தின் முதல் காலாண்டு முடிவுகள் வெளியாகியுள்ளன. வழங்கப்பட்ட தரவுகளின்படி நிறுவனத்தின் லாபம் 52% அதிகரித்து சராசரி சொத்து மதிப்பு ரூ.4.86 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. வரிக்கு பிந்தைய லாபம் ரூ.477.5 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டில் ரூ.314.2 கோடியாக இருந்துள்ளது. வருவாய் 10% அதிகரித்து ரூ.574.5 கோடியாக உள்ளது.

டெஸ்லா நிறுவனம் விரைவில் இந்தியாவில் கார் உற்பத்தி

டெஸ்லா நிறுவனத்தின் நிர்வாகிகள், ஒன்றிய அரசு அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், இந்தியாவில், ரூ.20 லட்சம் வரையிலான குறைந்த விலையில் டெஸ்லா கார்களை உற்பத்தி செய்து, அதை உள்நாட்டு விற்பனை மற்றும் ஏற்றுமதி செய்ய ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது விற்பனையாகும் டெஸ்லா கார்களின் விலை ரூ.45 முதல் ரூ.85 லட்சம் வரை விற்பனையாகிறது.

999 சிசி-ல் BMW M 1000 RR பைக்

BMW நிறுவனத்தின் M 1000 RR என பெயரிடப்பட்டுள்ள ஸ்போர்ட்ஸ் பைக் பெட்ரோலில் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 999 சிசி கொண்ட உள்பக்க இன்ஜீன் உடன் தயாராகியுள்ள இந்த வாகனத்தில் சுமார் 100 கிலோ மீட்டர் தூரத்தை வெறும் 5.8 விநாடிகளில் கடக்க முடியும். இதன் விலை ரூ.55 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேட்டில் சின்ன வெங்காயம், இன்று ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.60 உயர்வு

நேற்று மொத்த விற்பனையில் கிலோ ரூ.140க்கு விற்ற நிலையில், இன்று ரூ.200ஆக அதிகரித்தது. தக்காளி விலை இன்றும் கிலோவுக்கு ரூ.100 என விற்பனை. விலையில் மாற்றம் இல்லை. இஞ்சி கிலோ ரூ.260க்கும், பூண்டு கிலோ ரூ.180க்கும் விற்கப்படுகிறது.