தங்கம் சவரனுக்கு ரூ.520 குறைந்தது.

ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்து ஒரு சவரன் ரூ.1,19,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.65 குறைந்து ரூ.14,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.12 உயர்ந்து ஒரு கிராம் ரூ.387-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.. ஒரே நாளில் இரண்டாவது முறையாக மீண்டும் உயர்ந்த தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ஒரே நாளில் ரூ.1,600 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,18,000க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை சவரனுக்கு காலையில் ரூ.560 உயர்ந்த நிலையில் பிற்பகலில் ரூ.1,040 அதிகரித்துள்ளது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ஒரே நாளில் ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.365க்கு விற்பனையாகிறது.

தொடர்ந்து உயரும் தங்கம், வெள்ளி விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,16,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.70 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,620-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி கிலோவுக்கு ரூ.10,000 உயர்ந்து, ஒரு கிலோ ரூ.3,55,000-க்கும், கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.355-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி கிலோவுக்கு ரூ. 20,000 உயர்வு!

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை போட்டி போட்டுக் கொண்டு உயர்ந்து வரும் நிலையில், வெள்ளிக்கிழமை காலை தங்கம் சவரனுக்கு ரூ. 3,600-ம், வெள்ளி கிலோவுக்கு ரூ. 20,000-ம் அதிகரித்து அதிர்ச்சி அளித்துள்ளது. வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி ஒரு கிராம் தங்கம் ரூ. 14,650-க்கும், ஒரு சவரன் ரூ. 1,17,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், வெள்ளி ஒரு கிராம் ரூ. 360-க்கும், ஒரு கிலோ ரூ. 3,60,000-க்கும் விற்பனையாகி வருகின்றது. அதேபோல் நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.1720 […]

4 நாட்கள் வங்கி சேவை முடங்கும் அபாயம்..! நாடு முழுவதும் வரும் 27ல் வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்..!

வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை என்ற கோரிக்கையை வலியுறுத்தி வரும் 27ஆம் தேதி நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக் அறிவிப்பு. கோரிக்கையை நிறைவேற்ற சம்மதித்தால் நாள்தோறும் 40 நிமிடங்கள் கூடுதல் நேரம் பணி செய்வதாகவும் ஒப்புதல். வரும் 24ஆம் தேதி 4வது சனிக்கிழமை, 25ஆம் தேதி ஞாயிறு, 26ஆம் தேதி குடியரசு தின விடுமுறை, அதற்கு அடுத்த நாளான 27இல் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதால் 4 நாட்கள் வங்கி சேவை முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,720 குறைந்தது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,720 குறைந்து ரூ.1,13,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.215 குறைந்து ரூ.14,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.340க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் ஒரே நாளில் ரூ.4,120 உயர்ந்தது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் இருமுறை சவரனுக்கு ரூ. 4,120 உயர்ந்துள்ளது.இன்று(ஜன. 21) காலை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 2,800 அதிகரித்து ரூ.1 லட்சத்து 14,000 – க்கு விற்பனை செய்யப்பட்டது.இந்த நிலையில், வர்த்தகம் நிறைவடைவதற்கு முன்பு இன்று பிற்பகலில் கிராமுக்கு ரூ. 515 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 14,415-க்கும் சவரனுக்கு ரூ. 1,320 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 15,320 – க்கும் விற்பனை செய்யப்படுகிறது.அதேபோல், வெள்ளி […]

தங்கம் சவரனுக்கு ரூ.320, வெள்ளி ரூ.12,000 உயர்வு

தங்கம்ஒரு கிராம் ரூ.40 உயர்ந்து ரூ.12,870க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.12,000 உயர்ந்த நிலையில், ரூ.2,83,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.1,02,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.12,830-க்கு விற்பனை செய்யப்படுகிறது

டிசம்பரில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.74 லட்சம் கோடி: 6% அதிகரிப்பு

நாட்டில் கடந்த டிசம்பரில் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) ரூ.1.74 லட்சம் கோடி வசூலாகியுள்ளது. 2024, டிசம்பா் மாதத்தை ஒப்பிடுகையில் (ரூ.1.64 லட்சம் கோடி) இது 6 சதவீத அதிகரிப்பாகும். கடந்த நவம்பரில் ரூ.1.70 லட்சம் கோடி ஜிஎஸ்டி கிடைக்கப் பெற்ற நிலையில், டிசம்பரில் வருவாய் உயா்ந்துள்ளது.