தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட மல்லிகா நகர் பிரதான சாலையில் நீண்ட நாட்களுக்கு முன்பு பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்டு தற்போது வரை அதை மூடப்படாமல் இருக்கின்றது

தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட கிருஷ்ணா நகர் பகுதியில் மல்லிகா நகர் பிரதான சாலையில் நீண்ட நாட்களுக்கு முன்பு பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்டு தற்போது வரை அதை மூடப்படாமல் இருக்கின்றது பிரதான சாலை என்பதால் பள்ளி பேருந்துகள் பள்ளிக்கு செல்பவர்கள் குழந்தைகள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள் இந்த பள்ளத்தை மூடி கொடுத்தால் நன்றாக இருக்கும் அங்கு செல்பவர்கள் தாம்பரம் மாநகராட்சிக்கு கோரிக்கை விடுக்கின்றனர்..

நெல்லையில் இருந்து சென்னைக்கு வந்தே பாரத் ரயில், தாம்பரத்தில் நிறுத்தம்…

நாடாளுமன்ற குழு தலைவர் / திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் / கழக பொருளாளர் அண்ணன் திரு.T.R.பாலு B.sc. M.P., அவர்கள், தாம்பரம் மாநகர செயலாளர் / தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் திரு.S.R.ராஜா.M.L.A., ஆகியோர் வைத்த கோரிக்கை மற்றும் தொடர் முயர்சியின் காரணமாக நெல்லையில் இருந்து சென்னைக்கு சென்ற வந்தே பாரத் ரயில், தாம்பரத்தில் நின்ற போது, விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் அண்ணன் திரு.தொல்.திருமாவளவன்.M.P., அவர்கள், தாம்பரம் மாநகர செயலாளர் / தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் […]

தாம்பரத்தில் அண்ணா பிறந்தநாள் திமுகவினர் மரியாதை.

பேரறிஞர் அண்ணா அவர்களின் 115வது பிறந்த நாளை முன்னிட்டு தாம்பரம் திமுக சார்பில் தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள அண்ணா உருவ சிலைக்கு தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ் ஆர் ராஜா அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் தாம்பரம் திமுக சார்பில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 115வது பிறந்தநாளை முன்னிட்டு தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள அண்ணா உருவ சிலைக்கு தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ். ஆர். ராஜா அவர்கள் மாலை அணிவித்து மலர் தூவி […]

தாம்பரத்தில் அண்ணா பிறந்தநாள் | மாநகராட்சியில் திமுகவினர் மரியாதை

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தில் பேரறிஞர் அண்ணா 115வது பிறந்தநாளை முன்னிட்டு தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள அண்ணா உருவ சிலைக்கு தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி, துணை மேயர் காமராஜ் அவர்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்வில் தாம்பரம் மாநகராட்சி திமுக துணை செயலாளர் பொன் சதாசிவம்,மாமன்ற உறுப்பினர்கள் கழக நிர்வாகிகளும் உடன் இருந்தனர் ..

தாம்பரத்தில் அண்ணா சிலைக்கு அதிமுகவினர் பேரணியாக சென்று மாலை அணிவிப்பு

பேரறிஞர் அண்ணாவின் 115 ஆவது பிறந்தநாள் விழா இன்று நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன் அவர்களின் தலைமையில் தாம்பரம் மத்திய பகுதி கழகச் செயலாளர் எல்லார் செழியன் ஏற்பாட்டில் அண்ணாவின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. தாம்பரம் சண்முகம் சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பேரறிஞர் அண்ணாவின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. பின்பு அங்கிருந்து அனைவருக்கும் இனிப்புகளும் வழங்கப்பட்டது. பின்பு தாம்பரம் […]

தாம்பரத்தில் புதிய நியாய விலை கடை திறப்பு ..

தாம்பரம் மாநகராட்சி 3 ஆவது மண்டலத்திற்கு உட்பட்ட 34 ஆவது வார்டு SBI காலனி பகுதியில் ரூ 10 லட்சம் மதிப்பீட்டில் நியாய விலை கடை மற்றும் 40 ஆவது வார்டு செம்பாக்கம் அம்பேத்கர் நகரில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் நியாய விலை கடை மற்றும் 42 ஆவது வார்டு ராஜகீழ்ப்பக்கம் மாருதி நகர் பகுதியில் ரூ .10 லட்சம் மதிப்பீட்டில் நியாய விலை கடை ஆகிய இம்மூன்று கடைகளும் ,தாம்பரம் சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி […]

தாம்பரம் அருகே நேற்று பெய்த கனமழை வங்கி சுவர் இடிந்து விழுந்ததில் சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழப்பு …

தாம்பரம் அருகே நேற்று பெய்த கனமழை மற்றும் சூறாவளி காற்றினால் வங்கி சுவர் இடிந்து செக்யூரிட்டி மீது விழுந்ததில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த்வர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு மேலும் இருவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர் இது குறித்தான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்து குரோம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சுந்தர்ராஜன் (64) சிட்லப்பாக்கம் ராகவேந்திரா தெருவில் உள்ள சிட்டி யூனியன் வங்கியில் செக்யூரிட்டியாக பணியாற்றி வந்தார், நேற்று இரவு வழக்கம் போல் பணியில் இருந்த போது தாம்பரம் […]

சேலையூரில் கட்டிடம் இடிந்து மழைக்கு ஒதுங்கிய2 மாணவர் பலி

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத், தென்னேரி பகுதியை சேர்ந்தவர் பிரென்ச் ஜெஃப்ரி தவமணி (23), மீனம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் திமோ மில்கி (19), பூந்தமல்லி பகுதியை சேர்ந்தவர் அஸ்வின் (19), சிட்லபாக்கம் பகுதியை சேர்ந்தவர் சாய் கௌசிகன் (19) இவர்கள் நான்கு பேரும் தாம்பரத்தில் உள்ள மெட்ராஸ் கிறிஸ்துவ கல்லூரியில் பிஎஸ்சி 3ம் ஆண்டு படித்து வந்தனர். இந்நிலையில் இன்று மாலை கல்லூரி முடிந்து மூன்று இருசக்கர வாகனத்தில் மேற்கண்ட நான்கு பேர் உட்பட ஆறு பேர் சேலையூர் […]

சினிமா படத்திற்காக சேலையூர் அருகே 1000 மாணவர்கள் உலக சாதனை

சேலையூர் அடுத்த மப்பேட்டில் உள்ள தனியார் பள்ளியிலமாணவர்களிடம் தன்நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் இயக்குனர் டாக்டர் சீனி சவுந்தரராஜன் அவருடைய தயாரிப்பில் புதிய படத்தை இயக்கி உள்ளார். அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியீட்டு விழா நடைப்பெற்றது. இதனை முன்னிட்டு கபில் ரிட்டர்ன்ஸ் என்ற திரைப்படத்தை மாணவர்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் 1000 ஆயிரம் மாணவர்கள் கபில் ரிட்டர்ன்ஸ் வடிவில் நின்று உலகசாதனை படைத்தனர். இதனை ஐன்ஸ்டின் உலகசாதனை நிறுவனம் அங்கிகரித்து படத்தின் இயக்குனர் சீனி சவுந்தரராஜனுக்கு, […]

சேலையூர்‌ பகுதியில் அம்மா உணவகத்தில் மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ ஆ.ர.ராகுல்நாத் ஆய்வு

செங்கல்பட்டு மாவட்டம்‌, தாம்பரம்‌ மாநகராட்சிக்கு உட்பட்ட சேலையூர்‌ பகுதியில் அரசினர் மேல்நிலைப் பள்ளி அருகில் அமைந்துள்ள அம்மா உணவகத்தில் மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ ஆ.ர.ராகுல்நாத் ஆய்வு மேற்கொண்டார்கள். இந்த ஆய்வில் தாம்பரம் மாநகராட்சி ஆணையர் ஆர்.அழகுமீனா மற்றும் அரசு அலுவலர்கள் உடன் உள்ளனர்.