சென்னையில் ஐஏஎஸ் பயிற்சி மாணவியிடம் செயின் பறிப்பு
சென்னை தாம்பரம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் சிவில் சர்வீஸ் பயிற்சி நிறுவனத்தில் கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த 22 வயது மாணவி ஒருவர் பயிற்சி பெற்று வருகிறார். இவர் நேற்று மதியம் வகுப்பு முடிந்து பேருந்து நிலையம் நோக்கி நடந்து சென்றுள்ளார். இந்து மிஷன் மருத்துவமனை அருகே தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, லுங்கி மற்றும் சட்டை அணிந்துகொண்டு சாதாரணமாக வந்த மர்ம நபர் ஒருவர், திடீரென பாய்ந்து வந்து, மாணவி அணிந்திருந்த 7 பவுன் தாலி […]
தாம்பரம் அருகே வீடு புகுந்து கொள்ளை | 2 பேர் கைது
சென்னை மேற்கு தாம்பரம் அடுத்த ரங்கநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் சேகர் (60) இவர் வீட்டின் முதல் மாடியில் தனது மனைவி வேளாங்கனி மற்றும் மூத்த மகன் வினோத்குமார் என்பவருடன் வசித்து வருவதாகவும் கீழ் தளத்தில் இளைய மகன் சதீஷ்குமார் அவரது மனைவி ராதா ஆகியோர் வசித்து வருகின்றனர். சென்ற மாதம் தல பொங்கலுக்கு கீழ் தளத்தில் உள்ள தனது மகன் சொந்த ஊர் சென்றிருந்த நிலையில் சேகர் காலை கீழே உள்ள வீட்டை சுத்தம் செய்துவிட்டு சென்றவர் […]
37-வது வார்டில் திமுக சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்.

செம்பாக்கம் வடக்கு பகுதி திமுக சார்பில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பகுதி செயலாளர் ஏ.கே.கருணாகரன்* தலைமையில் 37-வது வார்டு பெரியார் சாலை அண்ணா நகர் நல சங்க கட்டிடத்தில் கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.. முகாமை அமைச்சர் தா.மோ.அன்பரசன்* தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தாம்பரம் மேயர் க.வசந்தகுமாரி துணை மேயர் கோ.காமராஜ் மண்டலம் 2 தலைவர். திஇ.ஜோசப் அண்ணாதுரைபல்லாவரம் தெற்கு பகுதி செயலாளர்இ.எஸ்.பெர்னாட். மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் அ.தமிழ்மாறன் […]
சேலையூரில் பட்டப்பகலில் இருசக்கர வாகனம் திருட்டு வீடியோ வெளியீடு

சேலையூரில் பட்டம் பகலில் இருசக்கர வாகனத்தை திருடி சென்ற நபரின் சிசிடிவிவெளியாகி பரபரப்பு கிழக்கு தாம்பரம் அடுத்த சேலையூர் ஜெகஜீவன் ராம் காலனி பகுதியை சேர்ந்த மூர்த்தி என்பவருடைய வீட்டில் நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தை மர்ம நபர் திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பட்டம் பகலில் நடந்து சென்ற நபர் திரும்பி வரும்போது இருசக்கர வானகத்தை ஓட்டி சென்றார். மேலும் இதன் தொடர்பாக சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பெயரில் சிசிடிவி […]
சேலையூரில் தொழிலாளிகளிடம் கத்தி முனையில் வழிப்பறி செய்த 3 பேர் கைது

தாம்பரம் அருகே வடமாநில கூலி தொழிலாளர்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி செல்போன் மற்றும் பணம் பறித்த மூன்று பேர் கைது சேலையூர் ஐஏஎப் சாலை, ரிக்கி கார்டன் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பில் தீனதயாளன் (24) என்பவர்மேஸ்திரி வேலை செய்து வருகிறார்.இவர் நேற்று சேலையூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார்.அதில் நேற்று முன்தினம் இரவு அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் புதிதாக கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தின் உள்ளே வந்து கத்தியை […]
தூக்கத்தில் எழுப்பியதால் போதை டிரைவர் வெறிச்செயல் சேலையூர் முன்னாள் எஸ்.ஐ படுகொலை

சேலையூரில் சாலை தூங்கிய போதை ஓட்டுனரை தண்ணீர் தெளித்து எழுப்பிய ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் அடித்துக்கொலை. கூப்பிட்ட குரலுக்கு உதவி செய்தவர் கொலையானதால் அக்கம் பக்கத்தினர், உறவினர்கள் சோகம் சேலையூர் ராஜா ஐய்யர் தெருவை சேர்ந்தவர் கிஷ்ணமூர்த்தி(69) ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர், இவர் மனைவி ஜெயசாண்டிஸ்வரி(60), கடந்த 12ம் தேதி இரவு 8 மணியளவில் கிஷ்ணமூர்த்தி வீட்டின் அருகே குடிபோதையில் ஒருவர் சாலை படுத்து கிடப்பதாக அக்கம் பக்கத்தினர் கூறியதால் டார்ச் […]
தாம்பரத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு விநியோகம்..!!

தாம்பரத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள குடியிருப்புகளுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. குமரன் நகர், சி.டி.ஓ. காலனி, எஃப்.சி.ஐ. நகர், மூவேந்தர் நகரில் விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் உணவு விநியோகம் செய்யப்பட்டது.
முடிச்சூர் லட்சுமி நகரில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பாதுகாப்பான இடத்துக்கு வெளியேறிய குடும்பத்தினர்.
தாம்பரம் மண்டலம் 2க்கு உட்பட்ட பல்லாவரம் தெற்கு பகுதி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மழையால் பாதிக்க பட்ட மக்களை இ.எஸ்.பெர்னார்ட் பார்வையிட்டார்

தாம்பரம் மாநகராட்சி மண்டலம் 2க்கு உட்பட்ட பல்லாவரம் தெற்கு பகுதி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மழையால் பாதிக்க பட்ட மக்களை பாதுகாக்கும் சிறப்பு முகாமிற்கு நேற்று காலை பல்லாவரம் தெற்கு பகுதி செயலாளர் இ.எஸ்.பெர்னார்ட் அவர்கள் மற்றும் 27வது வார்டு மாமன்ற உறுப்பினர் T.K.கார்த்திகேயன் மகேஸ்வரி அவர்களுடன் சென்று அங்குள்ளவர்களை சந்தித்து நலம் விசாரித்தார்.அப்போது மாநகராட்சியால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காலை சிற்றுண்டி அவர்களுக்கு அளித்தனர்
மிக்ஜாம் புயல் மழை பாதிப்பால் செங்கல்பட்டு மாவட்டத்தில் 6 தாலுகாக்களுக்கு மட்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு .
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் புயல் காரணமாக கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இதன்காரணமாக இந்த 4 மாவட்டங்களிலும், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், சென்னை பொறுத்தவரை மீட்புப்பணிகள் தொடர்ந்து வரும் நிலையில், பெரும்பாலான பகுதிகளில் இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை. தேங்கிய மழைநீர் இன்னும் வடியாமலே இருக்கிறது. லட்சக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், […]