கரூர் சம்பவம் – விஜய்க்கு சிபிஐ சம்மன்

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பங்கேற்ற கரூர் கூட்டத்தில் நெரிசலின் சிக்கி 41 பேர் பலியானார்கள் இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரித்து வருகிறது.ஏற்கனவே டெல்லியில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகளிடம் விசாரணை நடந்தது. தற்போது இந்த வழக்கில் நடிகர் விஜய் விசாரிக்கப்படுகிறார். இதற்காக அவருக்கு சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது

முருக பக்தர்களுக்கு கிடைத்த வெற்றி – மத்திய அமைச்சர் முருகன்

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என்று வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று உறுதி செய்துள்ளது. முருக பக்தர்களின் உணர்வுக்கு கிடைத்துள்ள மாபெரும் வெற்றி என்று மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.

காங். மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி

காங்கிரஸ் மூத்த தலைவரும் நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவருமான சோனியா காந்தி, டெல்லியில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி டெல்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனையில் நேற்று மாலை அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். நாள்பட்ட இருமல் பிரச்சினைக்காகவும் வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்திருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து […]

திமுக ஆட்சியை ஒழித்தே தீருவோம் – அமித்ஷா ஆவேசம்

புதுக்கோட்டை பிரச்சார கூட்டத்தில் உள்துறை மந்திரி அமைச்சர் பேசியதாவது:-அதிமுக – பாஜக இடையேயான கூட்டணி இயற்கையான கூட்டணி. 2024இல் அதிமுக, பாஜக இணைந்து போட்டியிட்டு இருந்தால் 26 தொகுதிகளில் வெற்றி பெற்று இருப்போம். வரும் நாட்களில் வலுவான கூட்டணியை அமைத்து திமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவோம். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நிச்சயம்; திமுக கூட்டணி ஆட்சியை ஒழித்தே தீருவோம் என்று அமித்ஷா பேசினார்

கனிமொழிக்கு ஸ்டாலின் வாழ்த்து

திமுக துணைப் பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி, பல அரசியல் கட்சி தலைவர்களும் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி பிறந்தநாளையொட்டி, “கர்ஜனை மொழி – என் தங்கை கனிமொழி” என முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிளாட் ப்ரொமோட்டர்கள் சங்க விழா

தாம்பரத்தில் உள்ள பிளாட் ப்ரொமோட்டர்கள் சங்க விழா மாமல்லபுரத்தில் நடைபெற்றது. தாம்பரத்தில் இயங்கி வரும் Flats Promotion சங்கத்தின் 2026 ஆம் ஆண்டின் குடும்ப கூடுகை விழா மாமல்லபுரத்தில் கலை நிகழ்ச்சிகளுடன் வெகு சிறப்பாக நடைபெற்றது.இவ்விழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர். நாங்குநேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன், கோவிலம்பாக்கம் பஞ்சாயத்து துணை தலைவர் . சி. மணிமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் . சங்கத் தலைவர் கோபி வரவேற்புரை நிகழ்த்தினார்.திரைப்பட பின்னணி பாடகர்வேலுமணி பாடல், சிறுவர் சிறுமியரரின் […]

பொங்கல் பரிசு டோக்கன் விநியோகம்

பொங்கல் விழாவை மேலும் சிறப்பாக கொண்டாடிட அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் அனைத்து குடும்பங்களுக்கும் பொங்கல் ரொக்கப் பரிசாக ரூ.3000 வழங்கிட முதல்வர் ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கப் பரிசு மொத்தம் ரூ.6936,17,47,959 செலவில் வழங்கப்படும். பொங்கல் திருநாளுக்கு முன்பாக ரொக்கப் பரிசும், பொங்கல் பரிசுத் தொகுப்பும், வேட்டி சேலைகளும் அனைத்து நியாயவிலைக் கடைகள் வழியாக வழங்கிட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும். அனேகமாக 8ந்தேதி ரொக்கப் […]

மக்களை சுரண்டும் திமுக ஆட்சி – எடப்பாடி

எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: லஞ்சம் வாங்குவது, கொள்ளையடிப்பது, ஊழல் செய்வது, மக்களை சுரண்டுவதில் திமுக ஆட்சி சிறந்தது… நாட்டு மக்களுக்கு திட்டங்கள் போடுவதில், மக்கள் நலன் பெறுவதில் அதிமுகவின் ஆட்சி சிறந்தது… சிறுமிகள், பெண்களுக்கு பாதுகாப்பில்லை; ஒட்டுமொத்தமாக நாட்டு மக்களுக்கே பாதுகாப்பு இல்லை… ஒரு மாநிலம் வளமாக இருக்க வேண்டும் என்றால் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்க வேண்டும். என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்

திமுத ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் – நயினார் நாகேந்திரன் உறுதி

புதுக்கோட்டை விழாவில் நயினார் நாகேந்திரன் பேசியதாவது. திமுக அமைச்சர்கள் அநாகரிகமாக பேசுகின்றனர்; தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை; எங்கு பார்த்தாலும் போதை பொருட்கள், ஆசிரியர்களே போதை பொருட்களை பயன்படுத்துகிறார்கள். தமிழகத்தில் திமுகவின் ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி தேசிய ஜனநாயக கூட்டணியை ஆட்சியில் அமர வைக்க அமித் ஷாவால் மட்டுமே முடியும். கரூரில் 41 பேர் பலியானதற்கு திமுகவின் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தான் காரணம்.என்று நயினார் நாகேந்திரன் கூறினார்

தமிழ்நாட்டில்என்.டி.ஏ. ஆட்சி – அமித்ஷா உறுதி

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று தேசிய ஜனநாயகக் கூட்டணி தமிழகத்தில் ஆட்சி அமைக்கப் போவது உறுதி என்று பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா தெரிவித்துள்ளார். பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மேற்கொண்ட தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் நிறைவு விழா புதுக்கோட்டையில் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய அமித் ஷா, “2026-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் என்.டி.ஏ அரசாங்கம் அமையப் போகிறது என்பதை நான் உங்களுக்கு உறுதியாகச் […]