ஜல்லிக்கட்டை குடும்ப விழா ஆக்குவதா ?-அதிமுக கண்டனம்

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை மரபுபடி காலை 7 மணிக்கு தெடாங்காமல் துணை முதல்வர் உதயநிதிக்காக ஒன்றரை மணி நேரம் தாமதப்படுத்தி, போட்டியை காண வந்த மக்களையும், போட்டியில் பங்கேற்ற மாடுபிடி வீரர்கள், காளைகள், அதன் உரிமையாளர்களை வேதனைப்படுத்தலாமா? என்று சட்டப்பேரவை எதிர்கட்சித் துணைத்தலைவர் ஆர்பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.ஜல்லிக்கட்டு போட்டியை ஸ்டாலினுக்காகவும் உதயநிதிக்காகவும் நடத்துவது போல் குடும்ப விழா ஆக்குவதா என்று அவர் கேள்வி கொடுத்தார்

பிரேமலதா பிடிவாதத்தால் கூட்டணியில் சிக்கல்

அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்க பேச்சுவார்த்தை நடத்தி வரும் தேமுதிக, பாமக-வை விட தங்களுக்கு ஒரு தொகுதியாவது கூடுதலாக வேண்டும் என்று கேட்பதால் அந்தக் கட்சியுடனான கூட்டணியை இறுதி செய்வதில் இழுபறி நீடிப்பதாகச் சொல்லப்படுகிறது.

கைது பயத்தில் சவுக்கு சங்கர்

பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் மீது 50க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.சமீபத்தில் ஒரு வழக்கில் கைதாகி ஜாமினில் விடுதலை பெற்றார். தற்போது நேற்று இரவு மீண்டும் ஒரு வீடியோ வெளியிட்டார். அதில் தன்மீது புதியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, அதன் பெயரில் தன்னை ஜாமினில் வர முடியாத பிரிவில் கைது செய்ய போலீசார் முயற்சி செய்ததாக கூறியுள்ளார்.

முதலில் சுட்டுவிட்டுதான் பேச்சுவார்த்தை!

கிரீன்லாந்துக்குள் அமெரிக்க வீரர்கள் நுழைந்தால், தளபதிகளின உத்தரவுக்காக காத்திராமல் தங்கள் நாட்டு வீரர்கள் உடனடியாக துப்பாக்கிச்சூடு நடத்துவார்கள்; பிறகுதான் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று டென்மார்க் எச்சரித்துள்ளது. கிரீன்லாந்தை கைப்பற்ற அமெரிக்க அதிபர் ட்ரம்ப் திட்டம் தீட்டி வரும் நிலையில், அத்தீவை நிர்வகிக்கும் டென்மார்க் எச்சரிக்கை விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆட்சியில் பங்கு கிடையாது: அமைச்சர் ஐ.பெரியசாமி.

தமிழ்நாட்டில் ஆட்சியில் பங்கு கிடையாது; கூட்டணி ஆட்சி இல்லை என்பதில் முதல்வர் திட்டவட்டமாக உள்ளார். காங்கிரஸ் கேட்பது அவர்களது விருப்பம்; ஆனால் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி இருந்ததில்லை. – அமைச்சர் ஐ.பெரியசாமி

அமெரிக்காவின் நலனே எனக்கு முக்கியம்: ட்ரம்ப்.

சர்வதேச சட்ட விதிகளுக்கு நான் கட்டுப்பட்டவன் இல்லை. எனது மனசாட்சியும், சிந்தனையும்தான் என்னுடைய அதிகாரத்தை கட்டுப்படுத்தும். எனக்கு சர்வதேச சட்டங்கள் தேவையில்லை, நான் மக்களைக் காயப்படுத்தவும் நினைக்கவில்லை. அமெரிக்காவின் நலனே எனக்கு முக்கியம்” டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்க அதிபர்.

ஸ்டார்லிங்க் சேவையை முடக்கியது ஈரான் அரசு.

ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் வலுத்துவரும் நிலையில்,அங்கு இணையதளம் முடக்கப்பட்டுள்ளது தொலைதூர வசதி முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. நேற்று சிறிது நேரம் இந்த வசதி அனுமதிக்கப்பட்டபோது அமெரிக்க தொழிலதிபர் எல்லாம் நடத்தும் ஸ்டார்லிங் செயற்கைக்கோள் இணைய சேவை உடனடியாக தொடங்கப்பட்டது.ஆனால் ராணுவ ஜாமர்களைக் கொண்டு ஸ்டார்லிங்க் இணைய சேவையை ஈரான் முடக்கியது நாடு முழுவதும் சில நாட்களுக்கு முன்பு இணைய சேவையை முடக்கிய அரசு முதல் முறையாக, சாட்டிலைட் இணைய சேவையும் முடக்கியது.. எங்களது இணைய சேவையை எந்த […]

கூட்டணிக்கு வரும் புதிய கட்சி -எடப்பாடி தகவல்

அதிமுக கூட்டணியில் பாரதிய ஜனதா, அன்புமணி பா.ம.க ஆகியோர் இணைந்துள்ளனர் தற்போது மேலூம் ஒரு கட்சி ஓரிருநாளில் கூட்டணிக்கு வரும் என்று எடப்பாடி அறிவித்துள்ளார்

ஆட்சியில் பங்கு ராகுல் காந்தி ஆலோசனை

காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் ஆட்சியில் பங்கு தர வேண்டும் என்று கேட்டு வருகிறது ஆனால் அவ்வாறு பங்கு தர முடியாது என்று அமைச்சர் ஐ பெரியசாமி நேற்று திட்டவட்டமாக அறிவித்தார் இதனை ஸ்டாலின் சொன்னதாக அவர் கூறினார் இந்த நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க ராகுல் காந்தி தமிழககாங்கிரசாரை டெல்லிக்கு அழைத்துள்ளார்

ராமதாசுடன் திமுக பேச்சுவார்த்தை

திமுக கூட்டணியில் சேர்வது குறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ராமதாஸ் பேச்சாற்றை நடத்தி வருகிறார் இதே போல ஜான்பாண்டியனும் திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார் விரைவில் இது பற்றி இறுதி முடிவு எடுக்கப்பட வேண்டும் கூறினார்