தமிழ்நாட்டில் என்.டி.ஏ. கூட்டணி ஆட்சி அமைக்கும் – மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தேசிய அளவில் மோடியும் தமிழ்நாட்டில் பழனிசாமியும் தலைவர்களாக இருப்பார்கள். தமிழ்நாட்டில் என்.டி.ஏ. கூட்டணி ஆட்சி அமைக்கும். தேசிய ஜனநாயக கூட்டணி முழுமையாக திமுக அரசை அகற்றும் – மத்திய அமைச்சர் பியூஸ் கோயல். திமுக குடும்ப ஆட்சியில் உழவர்கள், பெண்கள், இளைஞர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை பசுமைவழிச் சாலை இல்லத்தில் இபிஎஸ் – பியூஷ் கோயல் கூட்டாக பேட்டி.
டிரம்ப் பயணித்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு…
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பயணித்த Air Force One விமானம், சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெறும் உலக பொருளாதார மன்றத்தில் பங்கேற்பதற்காக புறப்பட்ட நிலையில், பயணத்தின் போது சிறிய மின்சார கோளாறு கண்டறியப்பட்டது. இதையடுத்து, பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக விமானம் வாஷிங்டனில் உள்ள Joint Base Andrews விமான நிலையத்துக்கு திரும்பி தரையிறங்கியது. விமானம் புறப்பட்ட 30–40 நிமிடங்களுக்குள் “சிறிய மின்சார பிரச்சினை” கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, விமானக் குழு இந்த முடிவை எடுத்ததாக வெள்ளை மாளிகை தரப்பில் […]
“உதயநிதி ஸ்டாலினின் சனாதன பேச்சு வெறுப்புப் பேச்சே”: உயர்நீதிமன்ற மதுரை கிளை
சனாதன தர்மம் குறித்து உதயநிதி ஸ்டாலின் 2023ஆம் ஆண்டு வெளியிட்ட கருத்துகள் வெறுப்பு பேச்சு (Hate Speech) ஆகும் என்றும், அது இந்துமதத்திற்கு எதிரான வெளிப்படையான தாக்குதல் என்றும் உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தெரிவித்துள்ளது. உதயநிதி ஸ்டாலின் கருத்துகள் இனப்படுகொலை (Genocide) மற்றும் பண்பாட்டு அழிப்பு (Culturicide) என்ற உணர்வுகளை உருவாக்குவதாகக் கூறி, அவை வெறும் அரசியல் விமர்சனமாக மட்டுமே பார்க்க முடியாது என்ற கருத்தையும் நீதிமன்றம் பதிவு செய்தது. உதயநிதி ஸ்டாலின் சார்ந்துள்ள திமுக […]
டிடிவி தினகரனை அன்போடு வரவேற்கிறேன்: எடப்பாடி பழனிசாமி
என்டிஏ கூட்டணியில் இன்று இணைந்துள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலர் டிடிவி தினகரனை அன்போடு வரவேற்று, மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பொற்கால ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் அமைத்திட மக்கள் நலன் ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு, நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து, திமுக குடும்ப ஆட்சியின் பிடியிலிருந்து மக்களைக் காப்போம். தமிழகத்தை மீட்போம்.
இது பங்காளிச் சண்டைதான்! – டிடிவி தினகரன்
சென்னையில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், “தமிழ்நாட்டில் மக்கள் விரும்புகிற நல்லாட்சிக்கு எங்களுடைய ஆதரவைத் தெரிவிக்கிறோம். என்றைக்கும் விட்டுக்கொடுத்துப் போகிறவர்கள் கெட்டுப் போவதில்லை. அதிமுகவுடன் எங்களுக்கு இருப்பது பங்காளிச் சண்டை. விட்டுக்கொடுத்தவர்கள் கெட்டுப் போவதில்லை.தமிழ்நாட்டில் அம்மாவின் ஆட்சி வருவதற்கு மக்களாட்சி வருவதற்கு நல்லாட்சி வருவதற்கு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைகிறோம்” என்று தெரிவித்தார்.
திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்
ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரான ஒரத்தநாடு வைத்திலிங்கம், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
எம்ஜிஆர்போல் யாராவது உண்டா?… கே.பி.முனுசாமி கேள்வி
100 பேரை அடிப்பதுபோல் ஷோ காட்டுவோர் அரசியலுக்கு வந்து என்ன செய்யப் போகிறார்கள்? இப்போது உள்ள நடிகர்கள் மது குடிப்பது, 4 பெண்களுடன் நடனம் ஆடுவதுபோல் ஷோ காட்டுகின்றனர். மக்களுக்கு நல்ல அறிவுரை வழங்கும் கதாபாத்திரத்தில் நடித்தவர் எம்ஜிஆர்; சம்பாதித்த பணத்தை மக்களுக்கு கொடுத்த எம்ஜிஆர்போல் நடிகர்கள் யாராவது உள்ளனரா?
ஜனநாயகன் திரைப்படம் தீர்ப்பு ஒத்திவைப்பு.
’ஜனநாயகன்’ பட சென்சார் சான்றிதழ் தொடர்பான மேல் முறையீடு வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு. இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பை ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்.
செங்கோட்டையன் கட்சித் தாவலா?
தமிழக வெற்றி கழகத்தில் சேர்ந்த அதிமுக பிரமுகர் செங்கோட்டையன் கடந்த சில நாட்களாக தனக்கு கட்சியில் மதிப்பு இல்லை, எனவே வேறு கட்சிக்கு செல்ல திட்டமிட்டு வருகிறார். என்று செய்தி வெளியாகியது அதனை செங்கோட்டையன் இன்று மறுத்துள்ளார்.
சட்டசபையில் 4-வது ஆண்டாக கவர்னர் மோதல்
கடந்த 3 ஆண்டுகளைப் போலவே, தமிழ்நாடு அரசின் உரையை வாசிக்காமல் சட்டமன்றத்தில் இருந்து வெளியேறினார் ஆளுநர் ரவி. அவையின் தொடக்கத்தில் தேசிய கீதம் பாட வேண்டும் என ஆளுநர் கூறவே, தொடக்கத்தில் தமிழ்தாய் வாழ்த்து பாடுவது மட்டுமே மரபு என சபாநாயகர் விளக்கம் அதனை ஏற்க மறுத்து அவையில் இருந்து ஆளுநர் வெளியேறினார்.