அதிமுக பேனர்களில் டிடிவி தினகரன் புறக்கணிப்பு!

மதுராந்தகத்தில் இன்று நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்டத்துக்காக அதிமுக தரப்பில் வைக்கப்பட்டுள்ள பேனர்களில் அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரனின் புகைப்படம் புறக்கணிக்கப்பட்டுள்ளது.ஆனால் அ.ம.மு.கபேனர்களில் எடப்பாடி படம் இடம்பெற்றுள்ளது.

திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது! பிரதமர் மோடி

பிரதமர் மோடி தனது X தளத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது: “தமிழ்நாடு தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் இருக்கிறது. மதுராந்தகத்தில் இன்று பிற்பகலில் நடைபெறும் பேரணியில் நான் தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்களுடன் கலந்துகொள்ளவிருக்கிறேன். திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது என்று தமிழ்நாடு முடிவு செய்துவிட்டது. தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் சாதனையும் பிராந்திய பெருவிருப்பங்கள் மீதான அதன் அர்ப்பணிப்பும் மாநில மக்கள் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன” எனக் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடி பங்கேற்கும் கூட்ட மேடையில் மாம்பழம் சின்னத்தை பயன்படுத்துவதா?: ராமதாஸ் கண்டனம்!

பிரதமர் மோடி கலந்துகொள்ளும் கூட்டத்தில் மாம்பழம் சின்னம் பயன்படுத்தப்பட்டது அதிகார துஷ்பிரயோகம் என பாமக நிறுவனர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “மாம்பழம் சின்னம் பாமக தொண்டர்களின் அடையாளம். அது யாருக்கும் ஒதுக்கப்படாத நிலையில், அதனை ஒரு குறிப்பிட்ட அணி தனக்கானதாகக் காட்டிக் கொள்வது தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றும் செயலாகும். தேர்தல் ஆணையம் அங்கீகரிக்காத சின்னத்தை பொதுக்கூட்ட மேடையில் காட்சிப்படுத்துவது சட்டவிரோதம்” என்று கூறியுள்ளார்.

பிரதமருக்கு முதல்வர் எழுப்பிய கேள்விகள் – அண்ணாமலை காட்டமான பதில்

பாஜக அண்ணாமலை பதிவு: “திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில், 10% கூட முழுமையாக நிறைவேற்றாமல், நாளொரு நாடகம் நடத்திக் கொண்டு, நாட்டு நடப்பு என்னவென்றே தெரியாமல், யார் எதை எழுதிக் கொடுத்தாலும், அதை அப்படியே கிளிப்பிள்ளை போல ஒப்பிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே, சமக்ர சிக்ஷா திட்டத்தின் ஒரு அங்கமான PM Shri பள்ளிகளை தமிழகத்தில் கொண்டு வருவோம் என்று கடிதம் மூலமாக தெரிவித்துவிட்டு, பின்னர் அந்தர் பல்டி அடித்தது ஏன்? நிறைவேற்றாத திட்டத்துக்கு நிதி எப்படி […]

திமுகவில் இணையும் முடிவில் இருந்து பின்வாங்கிய ஓபிஎஸ் ஆதரவாளர் குன்னம் ராமச்சந்திரன்

ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ குன்னம் ராமச்சந்திரன் நேற்று வைத்தியலிங்கத்தை பின்பற்றி திமுகவில் சேர முடிவு செய்திருந்தார். அவரது வீட்டில் கடும் எதிர்ப்பு எழுந்தது திமுகவில் சேர்ந்தால் ஜெயலலிதா படத்தை நீக்கிவிடுவீர்களா என்று அவரது மகள் கேட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அவர் திமுகவில் சேரும் முடிவை கைவிட்டார் அதே சமயம் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க., அ.ம.மு.க.வுக்கு எத்தனை தொகுதிகள்? வெளியான தகவல்

இன்று காலை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு மத்திய மந்திரி பியூஷ் கோயல் சென்றார். எடப்பாடி பழனிசாமியின் வீட்டில் காலை உணவு பரிமாறப்பட்டது. அத்துடன் தொகுதி பங்கீடு குறித்தும் பேசப்பட்டது. அ.தி.மு.க., பா.ஜ.க.வுக்கு எத்தனை தொகுதிகள் என்று இன்னும் இறுதி செய்யப்படாத நிலையில், பா.ம.க.வுக்கும், அ.ம.மு.க.வுக்கும் எத்தனை தொகுதிகள் என்பது முடிவு செய்யப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. அதாவது, அ.ம.மு.க.வுக்கு 9 தொகுதிகளும், 1 ராஜ்யசபா இடமும் வழங்க முடிவாகி இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல், பா.ம.க.வுக்கு 19 […]

தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கீடு!தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

சென்னை: விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு பொதுச்சின்னமாக விசில் சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம், இன்று வியாழக்கிழமை ஒதுக்கியுள்ளது. தமிழ்நாட்டில் முதல்முறையாக தவெக தேர்தலை எதிர்கொள்ள உள்ள நிலையில், தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆட்டோ, விசில் மற்றும் கிரிக்கெட் மட்டை ஆகிய 3 சின்னங்களை கோரி தவெக தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்திருந்தது. தற்போது விசில் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

வைரமுத்து மீது செருப்பு வீசப்பட்டதால் பரபரப்பு…

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த வைரமுத்துவிற்கு அங்கு இருந்த வழக்கறிஞர்கள் வரவேற்பு அளித்தனர். அப்போது அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் செருப்பு வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கான காரணம் தெரிய வரவில்லை. நல்வாய்ப்பாக செருப்பு கவிஞர் வைரமுத்து மீது படாமல் தவறி விழுந்தது.இதையடுத்து, வழக்கறிஞர்கள் வைரமுத்துவை உடனடியாக பாதுகாப்பாக நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு அழைத்துச் சென்றனர்.

கூட்டணியை இறுதி செய்ய அதிமுக பாஜக தீவிரம்

கூட்டணியை இறுதி செய்ய அதிமுகவும் பாஜகவும் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர். இன்று மத்திய மந்திரி பியூஸ் கோயல் தலைமையில் பாஜக தலைவர்கள் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து, அப்போது யாருக்கு எத்தனை தொகுதி என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் கூட்டணியில் மற்ற கட்சிகளையும் பேசி முடித்து பிரதமர் சென்னை வரும்போது மேடையில் ஏற்றுவதற்காக ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

புதுச்சேரியில் முதன்முறையாக மாத உதவித் தொகை ரூபாய் பத்தாயிரத்துடன் ஓராண்டு “டிஜிட்டல் பயிற்சி திட்டம்”

புதுச்சேரியில் முதன்முறையாக மாத உதவிதொகை ரூ.10 ஆயிரத்துடன் 12 மாதங்களுக் கான கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப படிப்பு முடித்த பட்டதாரிகளுக்கான ‘டிஜிட்டல் பயிற்சித் திட்டம்’ தொடங்கப்பட்டுள்ளது. இதனை பொதுப்பணி மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் லட்சமிநாராயணன் தொடங்கி வைத்தார்.