டிரம்புடன் பேச தயார் -மோடி அறிவிப்பு

பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உடன் பேச தயாராக இருப்பதாக தெரிவித்தார்.அமெரிக்காவும் இந்தியாவும் இயற்கையான கூட்டாளிகள் என்று அவர் கூறினார் .மோடியுடன் பேச தயாராக இருப்பதாக ட்ரம்பும் அறிவித்தார்

தமிழகத்தில் 45 மாதத்தில் 6700 கொலை. – எச்.ராஜா

பா.ஜ.க தலைவர் எச்.ராஜா கூறியதாவது :தமிழகத்​தில் சட்​டம்​-ஒழுங்கு சீர்​குலைந்​து​விட்​டது. கடந்த 45 மாதங்​களில் 6,700 கொலைகள் நடந்​துள்​ளன. பாலியல் வன்​கொடுமை​கள், போதைப் பொருட்​கள்பயன்​பாடு அதி​கரித்​துள்​ளது. மீண்​டும் திமுக அரசு அமைந்​தால் அடுத்த தலை​முறை அழிந்து போகும். எனவே, அடுத்த தலை​முறையை காப்​பாற்ற திமுக மற்​றும் அதன் கூட்​ட​ணிக் கட்​சிகளுக்கு அரசி​யலில் இருந்து விடை கொடுத்து அனுப்ப வேண்​டும். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

நேபாளத்தில் முன்னாள் பிரதமர் மனைவி உயிரோடு எரிப்பு

நேபாளத்தில் முன்னாள் பிரதமர் மனைவி உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டார் நேபாள தலைநகரில் உள்ள பல்வேறு அரசியல் தலைவர்களின் வீடுகள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன பாராளுமன்றம் தொலைக்காட்சி உறுப்பினர் பாரக கட்டிடங்கள் தீவைத்து கொளுத்தப்பட்டன

சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு மோடி வாழ்த்து

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற சிபி ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் மோடி நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார் மேலும் முதல் அமைச்சர் மு க ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உட்பட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர் சி பி ராதாகிருஷ்ணன் கூறுகையில் ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் நாணயத்தின் இரு பக்கங்கள் எல்லாவற்றிலும் அரசியல் செய்யக்கூடாது என்று கூறினார்

டெல்லியில் செங்கோட்டையன் அமித்ஷா சந்திப்பு

டெல்​லி​யில் மத்​திய அமைச்​சர்​கள் அமித் ஷா, நிர்​மலா சீதா​ராமன் உள்​ளிட்​டோரை அதி​முக முன்​னாள் அமைச்​சர் செங்​கோட்​டையன் சந்தித்​துப் பேசி​யது அதி​முக கூட்டணியில் சலசலப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளது .இதற்கிடையே செங்கோட்டையன் இன்று தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்துகின்றார்.

மல்லை சத்யா மதிமுகவில் இருந்து நீக்கம்

மதிமுகவில் இருந்து மல்லை சத்தியாவை நிரந்தரமாக நீக்கி பொதுச்செயலாளர் வைகோ இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மல்லை சத்யா கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டுள்ளது உறுதியாகியுள்ளது. இதையடுத்து, மல்லை சத்யா மதிமுக அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவியில் இருந்தும் நிரந்தரமாக நீக்கப்படுகிறார் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தலைமைச் செயலகம் ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்

*சென்னை தலைமை செயலகத்திற்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. *காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த மிரட்டலை அடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர் சென்னை ஆளுநர் மாளிகைக்கும் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் வந்தது.இதைத் தொடர்ந்து ஆளுநர் மாளிகையிலும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.

உக்ரைன் தலைநகர் மீது 800 டிரோன் ஏவி ரஷ்யா தாக்குதல்

உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா 800 ட்ரோன்களை ஏவியுள்ளது. உக்ரைன் – ரஷ்யா மோதல் தொடங்கியதில் இருந்தே இதுதான் மிகப் பெரிய ட்ரோன் தாக்குதல் என்று கூறப்படுகிறது. இத்தாக்குதலில் உக்ரைன் அரசு தலைமை அலுவலக கட்டிடத்தின் மேல்தள பகுதியில் தீப்பிடித்து, புகை எழுந்தது. இதை சர்வதேச ஊடகவியலாளர்கள் உறுதி செய்துள்ளனர். 800 ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியுள்ளது ரஷ்யா. இந்த தாக்குதல் நேற்று நடந்துள்ளது

பாஜக எம்பிக்கள் கூட்டத்தில் கடைசி வரிசையில் நரேந்திர மோடி

பாஜக எம்​பி.க்​களின் இரண்டு நாள் பயிற்சி பட்​டறை நேற்று தொடங்​கியது. இந்த கூட்​டத்​தில் பிரதமர் மோடி கடைசி வரிசை​யில் அமர்ந்​திருந்து நிகழ்ச்​சிகளை கவனித்​தார். இதுதொடர்​பான புகைப்​படம் தற்​போது சமூக வலை​தளங்​களில் வெளி​யாகி வைரலாகி உள்​ளது. இந்த கூட்​டத்​தில் குடியரசு துணைத் தலை​வர் தேர்​தலில் எவ்​வாறு வாக்​களிப்​பது என்​ப​தற்​கான பயிற்​சிகளும் வழங்​கப்பட உள்​ளது.

ஹரித்துவாருக்கு ஆன்மீக பயணம் செல்லும் செங்கோட்டையன்

இன்று டெல்லி புறப்பட்டுச் சென்ற செங்கோட்டையன்கோவையில் செய்தியாளர்களிடம் கூறியது: “ஹரித்துவாரில் உள்ள ராமர் கோயிலுக்குச் செல்கிறேன். மனம் சரியில்லாததால் கோயிலுக்குச் செல்வதற்காக வந்திருக்கிறேன். பாஜக தலைவர்கள் யாரையும் சந்திக்க செல்லவில்லை. 9-ம் தேதி செய்தியாளர் சந்திப்பு எதுவும் இல்லை. கலங்கிப் போய்விட வேண்டாம், நியாயமான கோரிக்கையைத்தான் வைத்துள்ளீர்கள் என தொண்டர்கள் சொல்கிறார்கள்.