விஜய் வருகையால் திருச்சியில் போக்குவரத்து நெரிசல்

தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜய் என்று திருச்சியில் பிரச்சாரத்தை தொடங்கினார் அவர் தனி விமானத்தில் திருச்சிக்கு வந்தால் விமான நிலையத்திலிருந்து பிரச்சாரம் பேசும் இடத்திற்கு பஸ்ஸில் செல்வதற்கு நாலு மணி நேரம் ஆகிவிட்டது வழியதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது இதனால் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்தனர்

திருப்பு முனை தரும் திருச்சி -விஜய் பேச்சு

திருச்சியில் நடிகர் விஜய் பேசியதாவது: அந்தக் காலத்தில் குலதெய்வ கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டுதான் போருக்கு செல்வார்கள். அதுபோலதான் அடுத்த வருடம் நடக்க உள்ள தேர்தலுக்கு திருச்சியில், இங்கே இப்போது பணியை தொடங்குகிறேன். எம்ஜிஆர் முதல் மாநில மாநாடு நடத்திய இடம் திருச்சி, அறிஞர் அண்ணர் அரசியலில் களமாட விரும்பிய இடம் திருச்சி, பெரியாரும், அண்ணாவும், எம்ஜிஆரும் நேசித்த இடம் திருச்சி. மதச்சார்பின்மைக்கு பெயர்பெற்றது திருச்சி மண்.திருச்சி திருப்புமுனை தரும் என்று கூறினார்

விஜய் வருகையால் திருச்சியில் போக்குவரத்து நெரிசல்

தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜய் என்று திருச்சியில் பிரச்சாரத்தை தொடங்கினார் அவர் தனி விமானத்தில் திருச்சிக்கு வந்தால் விமான நிலையத்திலிருந்து பிரச்சாரம் பேசும் இடத்திற்கு பஸ்ஸில் செல்வதற்கு நாலு மணி நேரம் ஆகிவிட்டது வழியதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது இதனால் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்தனர்

விஜயலட்சுமி வழக்கில் சீமானுக்கு கெடு

விஜயலட்​சுமிக்கு எந்த தொந்​தர​வும் கொடுக்க மாட்​டேன் என்​றும், விஜயலட்​சுமி மீதான அவதூறு கருத்​துக்​களை​யும், குற்​றச்​சாட்​டு​களை​யும் வாபஸ் பெற்​றுக் கொள்​கிறேன் என்​றும், இந்த விவ​காரத்​தில் மன்​னிப்பு கோரி சீமான் விளக்க மனு தாக்​கல் செய்ய வேண்​டும். அப்​படி செய்​தால் அவர் மீதான பாலியல் வழக்கை ரத்து செய்​வது குறித்து யோசிப்​போம். தவறும்​பட்​சத்​தில் சீமான் தாக்​கல் செய்​துள்ள இந்த மேல்​முறை​யீட்டு மனு தள்​ளு​படி செய்​யப்​படும்’’ எனக்​கூறி சீமான் மீதான பாலியல் வழக்கு வி​சா​ரணைக்கு வி​திக்​கப்​பட்​ட இடைக்​காலத்​ தடையை வரும்​ செப்​.24 […]

தமிழ்நாடு முந்திரி வாரியம் அமைப்பு

தமிழகத்தில் முந்திரி உற்பத்தியை பெருக்கும் நோக்கத்தில் அரசு சாா்பில் ‘தமிழ்நாடு முந்திரி வாரியம்’ உருவாக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை மற்றும்  உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்துள்ளாா். . கடலூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த வாரியத்துக்கு, வேளாண்மை மற்றும்  உழவா் நலத்துறை அமைச்சா் தலைவராகவும், அரசால் நியமிக்கப்படும் பிரதிநிதி துணைத் தலைவராகவும் செயல்படுவா். வேளாண் உற்பத்தி ஆணையா், அரசு செயலா் உறுப்பினா் செயலாகவும், தோட்டக்கலைத் துறை இயக்குநா் என வேளாண்மை தொடா்பான பல்வேறு துறைகளை சாா்ந்த பிரதிநிதிகள் அடங்கிய […]

திமுக ஆட்சியில் 4 முதலமைச்சர்கள் – எடப்பாடி புகார்

திமுக ஆட்சியில் 4 முதலமைச்சர்கள் இருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கம்பெனிக்கு மூடுவிழா நடத்தப்படும் என தாராபுரம் தொகுதியில் நடந்த கூட்டத்தில் பேசினார்

சிபி ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதி ஆக பதவி ஏற்பு

துணை குடியரசுத் தலைவராக இன்று காலை 10 மணிக்கு தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் பதவி ஏற்றார் அவருக்கு பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முசெய்து வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மற்றும் அமைச்சர்கள் உட்பட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்

மதமாற்றம் செய்ய சென்னையில் பயிற்சி

​ராஜஸ்​தான் மாநிலம் ஆல்​வாரில் கிறிஸ்தவ மிஷனரி​கள் நடத்​தும் விடு​தி​யில் மதம் மாற்​றம் செய்​வ​தாக புகார் எழுந்துள்​ளது. ஆல்​வாரின் அரசு பள்​ளி​யில் படிக்​கும் குழந்​தைகள் மிஷினரி​யின் விடு​தி​யில் தங்க வைக்​கப்​பட்​டுள்​ளனர். பள்​ளிக்கு தின​மும் அனுப்​பாத​தால், அக்​குழந்​தைகள் விடு​தி​யிலேயே அதிக நாட்​கள் தங்கி உள்​ளனர். அவர்​களுக்​கான உணவு உட்பட அனைத்து செல​வு​களை​யும் கிறிஸ்தவ மிஷனரி​கள் செய்​துள்​ளனர். பின்​னர் குழந்​தைகளை​யும் அவர்​களின் பெற்​றோரை​யும் மதம் மாற்ற முயற்​சித்​துள்​ள​தாக போலீஸ் விசா​ரணை​யில் தெரிய வந்​துள்​ளது. இதுகுறித்து ஆல்​வார் காவல் கண்​காணிப்​பாளர் சுதிர் சவுத்ரி […]

வெறிச்சோடிய செங்கோட்டையன் இல்லம்

ஈரோடு கோபிச்செட்டிபாளையத்தில் உள்ள செங்கோட்டையன் இல்லம் வெறிச்சோடியது. செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் யாரும் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. செங்கோட்டையனை சந்திக்க கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஆதரவாளர்கள் வந்தனர். கடந்த ஏழு நாட்களாக செங்கோட்டையன் இல்லம் ஆதரவாளர்களுடன் நிரம்பி இருந்தது. இன்று தற்போது வரை ஆதரவாளர் யாரும் செங்கோட்டையனை சந்திக்கவில்லை. அவரது இல்லம் வெறிச்சோடி காணப்படுகிறது.

3 வருடத்திற்கு பிறகு மணிப்பூருக்கு செல்கிறார் மோடி*

2023ல் இனமோதல்கள் தொடங்கிய பிறகு மணிப்பூர் மாநிலத்திற்கு முதல் முறையாக பிரதமர் மோடி செல்கிறார் *ரூ.8500 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை அவர் தொடங்கி வைக்க உள்ள நிலையில் பொதுக்கூட்டம் நடக்கும் சுராசந்த்பூரில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது